….
….
….
….
1921-ல் திருநெல்வேலி – காருக்குறிச்சியில் பிறந்து,
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
அவர்களின் சீடராகி, குருவுக்கு ஏற்ற சிஷ்யராக
அவரது காலத்திலேயே மிகச்சிறந்த நாதஸ்வர கலைஞராக,
மிகுந்த புகழுடன் விளங்கியவர் காருக்குறிச்சி அருணாசலம்.
துரதிருஷ்டவசமாக இளம்வயதிலேயே (43 வயது – 1964)
காலமாகி விட்ட காருக்குறிச்சி அவர்களின் பதிவு செய்யப்பட்ட
இசை நாடாக்கள் நிறைய கிடைக்கின்றன. ஆனால்,
அந்தக் காலத்தில் வீடியோ இங்கே அறிமுகம் இல்லை
என்பதால், அவரது காணொலி காட்சி என்பது அபூர்வமே.
அப்படிக் கிடைத்த ஒரு அபூர்வ காணொலியை
நண்பர்களுடன் இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்….
மறக்க முடியாத இசை –
” என்ன கவி பாடினாலும் உந்தன்
உள்ளம் இரங்கவில்லை –
இன்னும் என்ன சோதனையா….முருகா… முருகா..”
……….
……….
கூடவே, அவரை திரையுலகின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு
இட்டுச்சென்ற ” சிங்கார வேலனே தேவா…”
(கொஞ்சும் சலங்கை – 1962)
…….
…….
.
——————————————————————————————————–
அற்புதம்
என்ன அழகான பாடல்.
அதற்கு நாதஸ்வரம் சேர்க்கும் அழகு அற்புதம்.
பதிவிற்கு மிக மிக நன்றி. ஆனையாம்பட்டி ஆதிசேஷய்யர் அவர்கள் இயற்றியது. அடியேன் அவர்களது வழித்தோன்றல். 🙏🙏🙏
வருக முரளி.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
இதுவும் மதுரை சோமு பாடிக் கேட்க வேண்டும்.
அப்படி மனமுருகிப் பாடுவார்.
நீங்கள் ஆனையாம்பட்டி ஆதிசேஷய்யர் வாரிசு
என்று அறிய மிக்க மகிழ்ச்சி.
அது சரி – நீங்கள் இந்த தளத்திற்கு வழக்கமாக
வருபவராகத் தெரியவில்லையே;
இந்தப் பதிவைப்பற்றி உங்களுக்கு எப்படி
தெரிய வந்தது…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்