….
….
…
…
…
…..
உத்திரப் பிரதேசத்தில் “ஹத்ராஸி”ல் நடந்த பாலியல்
வன்கொடுமை குறித்து நாடே கொந்தளிக்கிறது.
19 வயதுப் பெண் ஒருவரை 4 அயோக்கியர்கள் கூட்டாக
வன்கொடுமை செய்து, அவரை கடுமையாகத் தாக்கி
பேச முடியாத நிலையில் தூக்கிக் கடாசிவிட்டு
சென்றிருக்கிறார்கள்…. 14 நாட்கள் மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் அந்தப் பெண்
இறந்து போனார்.
அவரது சடலத்தை உ.பி.போலீசார் பெற்றோரிடம்
ஒப்படைக்காமல், இரவோடிரவாக 200 கி.மீ. கொண்டுபோய்
இரவு 2.30 மணிக்கு போலீசாரே தகனம் செய்திருக்கிறார்கள்.
இங்கே இரண்டுவித கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன.
ஒன்று அந்த கயவர்கள் அந்தப் பெண்ணுக்கு செய்தது.
மற்றொன்று, உ.பி.அரசும், காவல்துறையும் செய்தது.
குற்றம் நடந்து 10 நாட்கள் வரை குற்றவாளிகள்
கைது செய்யப்படவே இல்லை; பொதுமக்கள் கொந்தளித்த
பிறகு தான் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.
இதற்கென்ன காரணமாக இருக்க முடியும்…?
கயவர்கள் ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்ட கூட்டத்தை
சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். இல்லையேல்
அவர்களுக்கு இத்தகைய துணிச்சல் எப்படி ஏற்படும்…?
தன்னை சந்நியாசி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர்
முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் கூட இத்தகைய
கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இத்தகைய கொடுமைகள் தொடர்கையில்,
அவர் 300 அடியென்ன – 3000 அடி உயரத்திற்கு ராமர் சிலை
வைத்தாலும், அந்த ராமர் அதை ஏற்க மாட்டார். மாறாக
இத்தகையோரால் தனக்கு மரியாதை தேவையா என்று
வருத்தமே கொள்வார்.
மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் பெண்களுக்கெதிரான
இத்தகைய வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றன. இதை எதிர்த்து கிளர்ச்சிகள் நடப்பதும்,
எதிர்த்து யாராவது போராடினால் –
அந்த மாநிலத்தில் நடக்கவில்லையா, அந்த கட்சி ஆட்சியில்
நடக்கவில்லையா என்று கேட்டு பதிலுக்கு பதில் அரசியல்
செய்வதும் தான் நடந்துகொண்டிருக்கிறது.
அது எந்த மாநிலமாக இருந்தாலென்ன…?
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?
குற்றம் குற்றம் தானே…? நடக்காமல் தடுக்க உரிய பாதுகாப்பு
வழிவகைகளை உருவாக்க வேண்டும்… மீறி நடந்தால், உடனடியாக
கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது,
பாஜக தலைவர் ஒருவர் இப்படி ட்விட்டர் செய்தி போடுகிறார்.
….
….
இவர் என்ன சொல்ல வருகிறார்…
குற்றமே நடக்கவில்லை என்கிறாரா…?
காங்கிரசை தாக்குவதாக நினைத்துக்கொண்டு,
கயவாளிகளை இவர்கள் ஆதரிக்கிறார்கள்.
இத்தகையோர் ஆட்சியில் இருப்பதால் தான்
ரவுடிகளும், பொறுக்கிகளும், கற்பழிப்பு கயவர்களும்
துணிச்சல் பெறுகிறார்கள். என்ன குற்றம் செய்தாலும்,
கட்சி நம்மை காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு.
இந்த மாதிரி செயல்களை தடுக்க வேண்டுமானால்
இரண்டே வழிகள் தான் இருக்கின்றன….
குற்றம் இழைத்தவர்களுக்கு –
கடுமையான, மிகக்கடுமையான தண்டனை ….
அதுவும் உடனடியான விசாரணையும், தண்டனையும் தேவை.
அவர்களுக்கு ஒரு அப்பீலுக்கு மேல்
அனுமதி கொடுக்கக்கூடாது. விலங்குகளுக்குச் செய்வதுபோல்,
காயடித்தல்/ஆண்மை நீக்குதலும் தண்டனையின் ஒரு பகுதியாக
அமைதல் அவசியம். அதே போல், தூக்கு தண்டனை/ஆயுள் தண்டனை எல்லாம் இந்த மாதிரி வழக்குகளில் உதவாது.
இவர்களது 2 கைகளையும் நிரந்தரமாக முடமாக்கி, சமூகத்தில்
நடமாட விடவேண்டும்… அதுவே மற்றவர்களுக்கும்
ஒரு பாடமாக, அச்சுருத்தலாக இருக்க வேண்டும்.
இந்த மாதிரி செயல்களுக்கு ஆதரவு/பாதுகாப்பு தருபவர்களையும்,
கடமை தவறும் காவலர்களையும் கூட சட்டம் தண்டிக்க வேண்டும்.
இது தவறினால் –
எதிர்காலத்தில் குற்றவாளிகளுக்கு
on the spot தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பை
பொதுமக்கள் தாங்களே தங்கள் கையில்
எடுத்துக்கொள்வார்கள் என்பதை உணர வேண்டும்.
.
————————————————————————————————————————
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.
தண்டனை பற்றி நீங்கள் கூறுவவதை நான் அப்படியே ஏற்கிறேன்.
வாழ்நாள் முழுவதும் அவர்கள் இந்த தண்டனையுடன் சமூகத்தில்
வலம் வர வேண்டும். ” நான் ஒரு தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி”
என்று அவர்கள் நெற்றியில் நிரந்தரமாக பச்சை குத்துவது கூட பரிசீலிக்கப்பட வேண்டும்.
நீங்கள் சொல்லுவது எல்லாம் சரிதான்.
இங்கே பிரச்சனையே – யார் தண்டனை கொடுப்பது என்பதுதானே.
தண்டனை கொடுக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் குற்றவாளிக்கு துணை போவதுதானே பிரச்சனையே.
அவர்களை யார் தண்டிப்பது. தண்டனை கொடுக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்களை அந்த இடத்தில் உட்காரவைத்தது யார் ?. இந்தமாதிரியான அநியாயங்கள் நடந்த பின்பும் அவர்களை ஆதரித்து பேசும், ஆதரித்து வாக்கு செலுத்தும் அயோக்கியர்கள் யார் ?
எல்லா கேள்விக்கும் ஒரே பதில் – நாமேதான்.
சாதி பார்த்து வாக்களிப்பது
மதம் பார்த்து வாக்களிப்பது
பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது.
அறியாமையினால் சின்னம் பார்த்து வாக்களிப்பது
இது எல்லாம் தான் காரணம்.
சமீப கால நீதிமன்ற தீர்ப்புகள் உணர்த்துவது என்ன ?
xxxxxxxxx
xxxxxxxxx
மனச்சாட்சியற்ற, பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்க்காக சுயநலத்திற்காக எதையும் செய்யும் கூட்டம் பெருகிக்கொண்டேதான் போகிறது.
என்னசெய்ய முடியும் நம்மால் ?
நிர்மல் குமாரை எல்லாம் மனுஷன் வகையிலேயே சேர்க்காதீங்க சார். அந்த வீடியோல இருக்கிறது அந்த பொண்ணே கிடையாது. அதுபோக, இந்த சம்பவத்துக்கு காரனும்னு இரண்டு முஸ்லீம் ஆளுங்க பேரை போட்டு அதுக்கும் எதோ ஒரு போட்டோ போட்டு வச்சிருக்கான். என்ன மனுஷன் இவன் ?
உ.பில இந்த ரெண்டு நாள்ல மட்டும் 18 வழக்குகள் பதிவாயிருக்கு. இன்னொரு ஊர்ல இதே மாதிரி வேற ஒரு பொண்ண இடுப்பு, காலெல்லாம் உடைச்சு, விஷ ஊசி போட்டி கொன்னுட்டு, உடனே எரிச்சிருக்கானுங்க மிருகத்தைவிட கேவலமான ஜென்மங்க.
இன்னைக்கு அந்தப் பெண் பலாத்காரமே செய்யப்படலனு ஏடிஜிபி வெட்கமே இல்லாம சொல்றாரு. அவரு சொன்னது என்னதுனா //எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களை கண்டுபிடிக்கவில்லை, சாதி அடிப்படையிலான பதற்றத்தை தூண்டுவதற்காக சில மக்கள் இந்த விஷயத்தை திசை திருப்பியது தெளிவாகிறது//.
இப்போ மறுபடியும் உடற்கூறு செய்ய முடியாது ஏன்னா இப்படி செய்வானுங்கனு முன்னக்கூடிய யோசிச்சு தான் பெத்த அம்மா, அப்பாவுக்குக்கூட கொடுக்காம இவனுங்களே எரிச்சிட்டானுங்க. இப்போ எந்த கேசும் போட முடியாது. நல்ல ராம ராஜ்ஜியம்.
u.p.அரசு குற்றம் நடந்ததையே
மறைக்கப் பார்க்கிறது. கற்பழிப்பு
நடந்ததற்கான அடையாளம் இல்லை
என்கிறது. நடந்து 10 நாட்களுக்குப் பிறகு
பரிசோதனை செய்தால் என்ன தடயம்
கிடைக்கும் ?
அவசர அவசரமாக அர்த்த ராத்திரி
2 மணிக்கு சடலத்தை போலீஸ்காரர்களே
எரித்தது ஏன் ? தடயத்தை மறைக்கத்தானே ?
பொழுது விடிந்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கு
விஷயம் செல்கிறது என்று தெரியவந்ததால்
தானே அர்த்த ராத்திரியில் எரித்தார்கள்.
மனசாட்சி இல்லாத, பதவிக்காக எதையும்
செய்யக்கூடியவர் எப்படி சந்நியாசியாக
இருக்க முடியும் ? எல்லாம் போலி.
சந்நியாசிக்கு ஏன் அரசியல் ?
ஏற்கனவே படித்தேன். Very disturbing news. இந்த மாதிரி கொடூரங்களை, ‘நம்ம கட்சிக்காரன்’ ‘வேண்டப்பட்டவன்’, ‘சாதிக்காரன்’ என்ற லேபிளில் மறைக்க நினைத்தால், சம்பந்தப்பட்டவரைக் காப்பாற்ற நினைத்தால், அப்புறம் அதைவிட அநீதி என்ன இருக்கிறது? உ.பி. முதலமைச்சர், தான் ‘யோகி’ என்றெல்லாம் சொல்வதைவிட நகைச்சுவை ஏதாவது இருக்கிறதா?
ஆள் யாரு, யார் யாருக்கு வேண்டப்பட்டவன் என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பே ஒரு என்கவுண்டர் போட்டுவிட்டால் பிரச்சனை அத்துடன் முடிந்திருக்கும்.
நம்ம நாட்டில் இது மாதிரி எத்தனையோ அட்டூழியங்கள் நடக்கின்றன. இந்தச் செய்தியைப் படிக்கும்போது The Godfather movie நினைவுக்கு வருகிறது. தன் மகளைக் கற்பழித்துச் சிதைத்தவருக்கு நீதிமன்றத்தில்/போலீஸில் நியாயம் கிடைக்காமல் அவர் மாஃபியா தலைவரிடம் உதவி கேட்பார். அவரிடம், என் மகளைச் சிதைத்த இருவரின் உயிரையும் எடுக்கவேண்டும் என்பார். அதற்கு டான், அது நியாயம் அல்ல, உன் மகள் உயிரோடுதானே இருக்கிறாள், அதனால் அவங்களை உன் மகளுக்கு நிகழ்ந்ததுபோல, அடுத்து ஒரு வருடத்துக்கு எழுந்துக்க முடியாமல் சிதைத்துவிடுவோம் என்று சொல்லி அப்படியே அதற்காக குண்டாஸை அனுப்புவார். நமக்கெல்லாம் அப்படி ஒரு Don தலைவராக இருந்தால் தேவலை என்று எண்ணும்படி நிலைமை இருக்கிறது.
இப்போது இருப்பது அப்படிப்பட்ட தலைமை
இல்லையென்று நினைக்கிறீர்களா …?
இந்தியாவில் வெள்ளைக்காரன் ஏற்படுத்தி வைத்த
சட்டம் இன்றும் அப்படியே இருக்கின்றது .
போலீஸ் , கோர்ட் என்பவை மக்களுக்காக இல்லை .
தேவையற்ற ப்ரொசீஜரை கட்டி அழுகிறார்கள் .
தவறு செய்தால் தண்டனை என்பது இல்லை .
ஒரு வழக்கு என்றால் அதை முடிக்க பல ஆண்டுகள் கூட ஆகின்றது .
லஞ்சம் வாங்குகிறார்கள் – யாராவது அதில்
தண்டனை பெற்று இருக்கிறார்களா ?
அப்புறம் ஏன் லஞ்சம் வாங்கக்கூடாது ?
குற்றவாளிகள் நீதி மன்றத்தை பார்த்து
பயப்படுவதில்லை – அவர்களுக்கு தெரியும் .
ஒன்றும் ஆகாது . அப்புறம் யாரும் சாட்சி
சொல்லவும் வரமாட்டார்கள் .
சிங்கப்பூரில் குற்றங்கள் மிக குறைவு .ஏன் ?
கோர்ட்டில் போனால் நாட்கணக்கில் தீர்ப்பு
தரப்படும் – அதனால் யாரும் தவறு செய்வது இல்லை .
நீதி மன்றங்கள் மாற வேண்டும் .வெறுமனே
நீதிமன்றத்தின் மாட்சி என்று பேசுவது உதவாது .
நீங்கள் சொல்வதும் முற்றிலும் உண்மை.