பிரமிப்பூட்டும் வீடு ….!!!

….
….

….

செட்டி நாட்டு வீடுகள் குறித்து நிறைய
கேள்விப்பட்டிருக்கிறோம்.
சில திரைப்படங்களில் பார்த்தும் இருக்கிறோம்…

நான் புதுக்கோட்டை, காரைக்குடி – நிறைய தடவைகள்
போயிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு தடவையும்
வேலை முடிந்து உடனே திரும்ப நேரிட்டது.
இந்த மாதிரி வீடுகளை பார்க்கக்கூடிய வாய்ப்பு
கிடைக்கவில்லை…

ஆனால் இந்த காணொலியில் பார்ப்பது ……?
பிரமிப்பாகத் தான் இருக்கிறது.

…..

…..

.
——————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பிரமிப்பூட்டும் வீடு ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  நான் 4-6ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்தபோது நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வாழும் ஊரில்தான் வாழ்ந்தேன்.

  அப்போதைய நிலையில், அவங்க வீட்டை (என்னுடன் படித்தவர்கள்) பார்த்து பிரமித்திருக்கிறேன். சமைக்க பணியாளர்கள், கணக்கெழுத ஒரு ஐயர் என்று அவங்க வீடுகள் இருக்கும். யாருக்கும் பணம் கொடுப்பது இந்த கணக்கெழுதுபவர்தான். (பொன்னமராவதி அருகில் இருந்த பூலாங்குறிச்சி என்ற ஊர்) மிகப் பெரும் பணக்காரர்கள் என்று கூற முடியாது, ஆனால் பெரிதாக வாழ்ந்த வம்சம் என்பது மட்டும் தெரியும். (ஊறுகாய்கள் வைப்பதற்கு தனி அறை என்றெல்லாம் இருக்கும் அவங்க வீட்டு கட்டு.)

  தெருவில் 3/4 தெரு நீளத்துக்கு பிரம்மாண்ட பந்தல் போட்டுத்தான் அவங்க வீட்டு திருமணங்கள் நடக்கும். சைவப் பற்று உள்ளவர்கள். 75களில் நடந்த திருமணத்தில் ஐஸ்க்ரீம் செய்யும் மிஷின் வந்து, அதில் ஐஸ்க்ரீம் செய்து திருமணத்தில் பரிமாறினார்கள். திருமணத்துக்கு பிளாஸ்டிக் பக்கெட் (இப்போ உள்ளதை மனசுல கொண்டுவராதீங்க. அந்தக் காலத்தில் பிளாஸ்டில் விலை அதிகம்) ஒவ்வொருவருக்கும் கொடுத்தது என் நினைவில் இருக்கிறது.

  இங்க காணொளில உள்ல வீடுகள் மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கு. இவ்வளவு பளிச் சென்று அந்த வீடுகள் இல்லாவிடினும் அளவில் பெரியவை.

  சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை அவங்க வெளிநாட்டில் பொருளீட்டி நம்ம ஊர்ல அரண்மணை மாதிரி வீடுகள் கட்டினாங்க. ஆனால் பண வரவு நின்றதும் வீடுகளைப் பராமரிப்பதே மிகுந்த கஷ்டமாக ஆகிவிட்டது. அவர்களும் சாதாரண நிலைக்கு வந்துவிட்டார்கள். சில வீடுகளை ரிசார்ட் போல மாற்றிவிட்டார்கள்.

  இத்தகைய வீடுகள், தமிழ்நாட்டின் காலம் காட்டும் கண்ணாடி, ஒரு சமூகம் வாழ்ந்த விதத்தைக் குறிப்பது என்பதை உணர்ந்து அரசும் இவைகளைப் பராமரிப்பதில் பங்கு பெறணும் என்பது என் எண்ணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.