“எல்லாம் பொய் – என் கிட்ட ஏது துட்டு….?இருந்தா – எடுத்துக்கோ…”

….
….

….

கல்லும் கரைந்து தண்ணீராக
உருகி விடும் அளவிற்கு ஒரு உருக்கமான வாக்குமூலம்…

சின்ன அம்பானிஜி லண்டன்
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் சொல்கிறார் –

………..

……….

“என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை;
ஊடகங்கள் தான் நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக
செய்திகள் வெளியிடுகின்றன… அத்தனையும் பொய்…கற்பனை…!!!

நான் மிக எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன்.
எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் கூட இல்லை;
நான் மிக எளிமையான சைவ உணவு தான் சாப்பிடுகிறேன்.
ஆன்மிக வழியில் நடப்பவன்.
திரையரங்கிற்கு படம் பார்க்கக்கூட போவதில்லை;
வீட்டிலேயே குடும்பத்துடன் பார்ப்பதையே விரும்புபவன்…

ஊடகங்கள் என்னிடம் சொகுசு கார்கள் இருப்பதாகவும்,
தனி விமானம் இருப்பதாகவும்,
மனைவி டினா அம்பானிக்கு ஹெலிகாப்டர்
வாங்கிக் கொடுத்திருப்பதாகவும்,
மும்பையில் இரண்டடுக்கு பங்களா வைத்திருப்பதாகவும்
சொல்லும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை.
என்னிடம் ஒரு சொத்தும் இல்லை;

அந்த சொத்துக்கள் எல்லாம் ரிலயன்ஸ் குழுமத்திற்கு
சொந்தமானவை …………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அதாவது ….இவருது தான் …ஆனா – இவருது இல்லை….!!!

……..

………

—————————————

எனக்கு பழைய கதையொன்று நினைவிற்கு வருகிறது.

ஒருவன் மீது நீதிமன்றத்தில் அவன், தனது தாய் தந்தையை
கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு வருகிறது.

அவன் நீதிபதியைப் பார்த்து சொன்னானாம் –

“கனம் நீதிபதி அவர்களே – நான் அப்பா-அம்மா இல்லாத
ஒரு அநாதை என்பதை நினைத்து தாங்கள் என்மீது கருணை
காட்ட வேண்டும்……..!!!”

—————————————-

வழக்கு விவரம் –

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள்
69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச்
சேர்ந்த மூன்று வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன்
வாங்கியிருந்தன. இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட
உத்தரவாதம் அளித்திருந்தார்.

இந்த கடனை திரும்பத் தராததால் அனில் அம்பானியின்
சொத்துக்களை முடக்கக் கோரி சீன வங்கிகள் ஐரோப்பிய
நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தன. இந்த வழக்கில் தனக்கு தனிப்பட்ட
சொத்துக்கள் எதுவும் இல்லை என அனில் அம்பானி
தெரிவித்திருந்தார்.

இதை ஏற்க மறுத்த வங்கிகள் அனில் அம்பானிக்கு
சொகுசு கார்கள்,
தனி விமானம்,
மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர்,
மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா ஆகியவை

-உள்ளதாக தெரிவித்தன. இதற்கு ‘அந்த சொத்துக்கள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை; என்னிடம் ஒரு சொத்தும் இல்லை’
என அனில் அம்பானி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உலகளவில் அனில் அம்பானிக்கு சொந்தமாக
75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து விபரங்களை தருமாறு
லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு
தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது.
இதில் அனில் அம்பானி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக
வாக்குமூலம் அளித்தார்.

குறுக்கு விசாரணையில் அனில் அம்பானி அளித்த தகவல்கள்
அடிப்படையில் சட்டபூர்வமாக தங்களுக்கு சேர வேண்டிய கடன்
தொகையை பெற சீன வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என
லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

——————————–

குறுக்கு விசாரணையில் வெளிவந்திருப்பது தான்
மேற்கண்ட தகவல்கள்….

ஒரே ஒரு விஷயத்தில் நமக்கு அம்பானிஜி குறித்து
மெத்த சந்தோஷம்…

– இந்த தடவை அவர் ஏமாற்றி இருப்பது
மூன்று சீன வங்கிகளை -!!!

– செத்தான் சீனன்…!!!

அதுவும் – 51 கோடி லட்சங்கள்… ( யோசித்துப் பாருங்கள்…
நினைத்தே பார்க்க முடியவில்லை – அம்மாடியோவ்…!!! )

என்ன இருந்தாலும் ஆள் கில்லாடி தான்…!!!!!!!!!!!!!!!!

“என்னிடம் அஞ்சு காசு கூட இல்லை;
இருந்தால் எடுத்துக் கொள்” என்று சொல்லி விட்டாரே….!!!
யாருக்கு வரும் இந்த சாமர்த்தியம்…
குஜராத்திக்காரர்களைத் தவிர…!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “எல்லாம் பொய் – என் கிட்ட ஏது துட்டு….?இருந்தா – எடுத்துக்கோ…”

 1. Ezhil சொல்கிறார்:

  ஒரு பேச்சுக்கு இது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, இந்த சின்ன அம்பானிஜிக்குத்தான் ரபேல் ப்ரொஜெக்ட்டை விடமிருந்து பிடிங்கிக்கொடுத்தார் திருவாளர் மோடிஜி என்பதை வரலாறு மறக்காது என்று நம்புகிறேன்.

  • புதியவன் சொல்கிறார்:

   என்ன எழில் இது… நியாயமான விமர்சனம் செய்யலையே நீங்க. ஒரு பக்கம் மோதி, பணக்காரர்களின் கைக்கூலி என்று விமர்சிக்கிறோம். பரம ஏழை அனில் அம்பானிக்கு பிரதமர் உதவ நினைத்தால், (அதாவது ஏழை ஒருவனை பணக்காரனாக்க நினைத்தால்) அதையும் விமர்சிக்கலாமா? அப்புறம் மோதி வேற என்னதான் பண்ணனும்னு நினைக்கறீங்க? உங்களுக்கும் எனக்கும் தமிழக சாலைகளை விரிவுபடுத்தும் காண்டிராக்ட் கொடுக்கச் சொல்லலாமா?

 2. புதியவன் சொல்கிறார்:

  இடுகை தலைப்புதான் சூப்பர். எந்தப் பணக்காரரிடமும் (நியாயமா சம்பாதிக்காதவங்க) அவங்க பேர்ல ஒரு சொத்தும் இருக்காது. இதுதான் நடைமுறை உண்மை. சோனியா காந்திக்கு கடன் மட்டும்தான் இருக்கு. நம்ம கேடி பிரதர்ஸுக்கு சொந்தமா சைக்கிள் கூட இல்லை. நீங்க, எம்.பி. எலெக்‌ஷன் வரும்போது போட்டியிடும் பிரபலங்கள் அவங்க சொத்துக்களாக எதை டிக்ளேர் பண்ணறாங்கன்னு பாருங்க. அப்போ தெரியும் நாம பணக்காரங்களா நினைத்துக்கொண்டிருப்பவர்கள்லாம் நம்மைவிட பரம ஏழைனு. நம்ம ராஜாத்தி அம்மாளின் பங்களாகூட, முன்னர் அதில் வாடகைக்கு வந்தவர்களுக்கு விற்கப்பட்டு, பிறகு வாடகைக்கு வந்தவர்களே ராஜாத்தி அம்மாளுக்கு மறுபடி விற்றதாகத்தான் கணக்கு எழுதியிருக்காங்க. என்ன ஒண்ணு, அவங்களுக்கு உள்ள டிரஸ்டுகள்தான் அவங்க அவங்க மருத்துவச் செலவு, போக்குவரத்து, உணவு , சம்பளம் இத்யாதிகளைப் பார்த்துக்கொள்ளும். இது எல்லா டோப்பாத் தலையர்களுக்கும் பொருந்தும்.

  அந்தக் காலத்துல அனில் அம்பானி, ஒரு ஷேர் வெளியிட்டார். எல்லோரும் ரிலையன்ஸை மனசில் வச்சிக்கிட்டு ஆரம்ப விலையாக ஒரு ஷேர் 400+ ரூபாய்க்கு விலை போச்சுன்னு நினைவு. அப்போலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா ஷேர் விலை குறைந்துகொண்டே வந்தது. அனில் அம்பானிக்கு பிஸினெஸ் நடத்தத் தெரியலை என்றே நான் நினைக்கிறேன். அவர் முகேஷ் மேல் உள்ள பொறாமையால், தான் திறமைசாலி என நினைத்து ஏமாந்தவர் என்பதுதான் என் அபிப்ராயம்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில் விடுபட்டுப் போனவை –

  1) காணொலி காட்சி வாயிலாக வெள்ளியன்று
  நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி தன்னுடைய
  செலவுகள் அனைத்தையும் தனது மகன் மற்றும்
  மனைவியே பார்த்துக் கொள்வதாகவும்,
  தன்னுடைய சட்டச் செலவுகளை பூர்த்தி
  செய்வதற்காக நகைகளை விற்று 9.9 கோடி ரூபாய்
  பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

  2) நீதிமன்ற விசாரணையின்போது மேலும்,
  தான் – தனது தாய்க்கு 500 கோடி ரூபாயும்,
  மகனுக்கு 310 கோடி ரூபாயும் கடன் பாக்கி
  கொடுக்க வேண்டி இருக்கிறது
  என்று வேறு கூறி இருக்கிறார் ….

  3) பாவம் பெற்ற தாய்க்கும், பிள்ளைக்குமே
  கடன்பட்டிருக்கும் இந்த மனிதர்,
  வக்கீல் செலவுக்குக்கூட பெண்டாட்டியிடம்
  கையேந்த வேண்டிய நிலையில் உள்ளவர் –

  இந்திய பாதுகாப்பை மனதில் வைத்து,
  கடமையுணர்வுடன் – எப்பேற்பட்ட
  பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
  ரஃபேல் போர்விமானத்தின் பாகங்களை
  இந்தியாவில் தயாரிக்கும் பங்காளியாக
  ஒப்பந்தம் போட்டிருக்கிறாரே…

  பாவம் என்ன செய்வார்…எப்படி தன் கடமையை
  நிறைவேற்றுவார்…?

  எப்படியும் இந்திய வங்கிகள் அவரைக் கைவிடாது
  என்று நம்புவோம். ஓட்டாண்டி என்னிடம்
  ஒன்றுமே இல்லையென்று அவர் அறிவித்து
  விட்டாலும் கூட, நமது வங்கிகள் அவரைக்
  கைவிட்டு விடாமல், சில ஆயிரம் கோடிகளாவது
  கடன் கொடுக்கும் என்று நம்புவோம்.

  கடமையும், நாட்டுப்பற்றும் முக்கியமல்லவா…?
  (சின்ன அம்பானிக்கு மட்டுமல்ல… நமது
  வங்கிகளுக்கும் கூடத்தான்…!!! )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.