என்ன பேரு வைக்கலாம் …எப்படி அழைக்கலாம்…?

….
….

….

திருட்டு – என்றும் சொல்ல முடியாது …
ஃப்ராடு’ – என்றும் சொல்ல முடியாது…
அறியாமை – என்றும் சொல்ல முடியாது…
அயோக்கியத்தனம் – என்றும் சொல்ல முடியாது…

இந்தச் செயலை எப்படித் தலைப்பிடுவது…?

செய்தியைப் படித்துவிட்டு, பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன்…

——————————————–

சி.ஏ.ஜி. ( CAG – Controller & Auditor General ) –
( மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர்…)
தனது தணிக்கை அறிக்கையில் – மத்திய அரசு
தனது வரி வசூலை தவறாக பயன்படுத்துகிறது
என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எப்படி… ?
———–

ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை
ஈடுசெய்யும் நிதியை – தவறாகப் பயன்படுத்துவதா?

– என்று மத்திய அரசுக்கு சி.ஏ.ஜி., கண்டனம்
தெரிவித்திருக்கிறது…
————

ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்றுகிற சமயத்தில்,
அதன் மீது நடந்த விவாதங்களில் –

ஜி.எஸ்.டி.யை கொண்டு வருவதன் மூலம் மாநிலங்களுக்கு
ஏற்படும் நிதியிழப்பு குறித்து, நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் விவாதிக்கப்பட்டு,

“அந்த இழப்பு ஈடு செய்யப்படும்” என்று மறைந்த
நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதியளித்து,

அது 101-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திலும்,
சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடு செய்தல்)
சட்டம் 2017-லும் தெளிவாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்த வாக்குறுதி, ஓர் ” இறையாண்மை மிக்க
உத்தரவாதம்” (Sovereign guarantee) என்று நம்பியே
மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி. சட்டத்தை, தங்களது
சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றிச் செயல்படுத்தின…

ஆனால் –
இப்போது என்ன நடந்திருக்கிறது….?

—————————————-

ஜி.எஸ்.டி. சட்டம் செயல்படுத்தப்பட்டதால், மாநிலங்களுக்கு
ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய வசூல் செய்யப்பட்ட
“ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி”-யை (GST Compensation Cess),

– அதற்கென உருவாக்கப்பட்ட “வருவாய் இழப்பினை ஈடு
செய்யும் நிதியத்திற்கு” (GST Compensation Fund) அனுப்பாமல்;

பாஜக அரசு, மத்திய அரசின் தொகுப்பு நிதியிலேயே தன்னிடமே
(Consolidated Fund of India) வைத்துக் கொண்டு விட்டது .
அதுமட்டுமின்றி, அந்த நிதியை, வேறு செலவுகளுக்கும்
பயன்படுத்தியுள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் வசூல் செய்யப்பட்ட
62,612 கோடி ரூபாயில் 6,466 கோடி ரூபாய் நிதியை
மத்திய அரசு தன்னிடமே வைத்துக்கொண்டது.

2018-19-ல் வசூல் செய்த 95,081 ஆயிரம் கோடி ரூபாயில்
40 ஆயிரத்து 806 கோடி ரூபாயை தன்னிடமே வைத்துக்கொண்டது.
இந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட வசூலையும் சேர்த்தால்
வரும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையான

– 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை மத்திய அரசே
பயன்படுத்திக் கொண்டுவிட்டது.

மத்திய அரசின் “இந்தியத் தொகுதி நிதியிலிருந்து” மாநிலங்களுக்கு
அளிக்க வேண்டிய இந்தத் தொகையை, ஜிஎஸ்டி விதிகளின்படி –

“ஜி.எஸ்.டி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நிதியத்திற்கு”
அனுப்பி, அங்கிருந்து அது மாநில அரசுகளுக்குப் பிரித்துக்
கொடுக்கப்பட வேண்டும்.

———————————————

ஆனால் – மத்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் ஒரு
“இறையாண்மை மிக்க உத்தரவாதம்” சர்வ சாதாரணமாக
அலட்சியப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது…

————–

மத்திய அரசு எடுத்துச் செலவு செய்த “ஜி.எஸ்.டி ஈடு செய்யும்
நிதியில்” தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்
தொகையும் அடங்கி இருக்கிறது.

2017-18-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு 4321 கோடி
ரூபாய் நிலுவைத் தொகை இருக்கிறது.

2018-19 மற்றும் 2019-20-ல் வரவேண்டிய தொகை
இன்னும் அறிவிக்கப்படவில்லை;

——————-

தேவையானால், மேலே மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு,
இந்தச் செயலை என்னவென்று வர்ணிக்கலாம்…
(how to define this behaviour…? என்று யோசித்துச்
சொல்லுங்களேன்.

.
—————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to என்ன பேரு வைக்கலாம் …எப்படி அழைக்கலாம்…?

 1. jksmraja சொல்கிறார்:

  …… ……(deleted)

  நரேந்திர மோடி இரண்டு சபதங்கள் எடுத்திருப்பது போல தெரிகிறது.

  1 . எப்படியும் இந்தியாவை சோமாலியாவாக மாற்றியே தீர்வது.
  2 . சோவியத் ரஷியாவை 17 ஆகத்தான் உடைத்தார்கள். அதேமாதிரி
  இந்தியாவை குறைந்தது 25 ஆக உடைப்பது.

  அவரின் நடவடிக்கைகள் அதை நோக்கியே நகர்கிறது

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .
   jksmraja,

   உங்கள் “வகைப்படுத்தல்” நீக்கப்பட்டிருக்கிறது.
   அங்கீகரிக்கப்பட்ட, அகராதியில் உள்ள, நாகரிகமான
   வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  அனைத்தையும் சேர்த்தே வைக்கலாம்

 3. புதியவன் சொல்கிறார்:

  பாராளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் (ஏன் ஆளும் கட்சி எம்.பிக்களும்தான்) அரசிடம் இதற்கு விளக்கம் கேட்கணும். ஜி.எஸ்.டி. இழப்பீடு நிதி, பிரதமர் ஃபண்ட் என்று பல black holes இருக்கிறது.

  மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்காவிட்டால், அவர்கள் ஜி.எஸ்.டி. முறைக்கு ஒத்துக்கொண்டதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? இதுபோலத்தானே அடுத்து வரும் ‘விவசாயிகள் மசோதா’ மற்றும் பலவித சட்டங்கள்.

  இந்தியாவில், தேசப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, கரன்சி, மாநிலங்களுக்கிடையே உள்ள தாவாக்கள், ஒரு மாநிலத்துக்கு மேல் பாதிப்படையும் விஷயங்கள் போன்ற முக்கியமானவற்றிர்க்குத்தான் மத்திய அரசு பொறுப்பாளியாக இருக்க முடியும். மற்றபடி அந்த அந்த மாநிலங்கள் அந்த அந்தப் பகுதியை இயற்கையாக ஆள வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்காக, கருணாநிதி மாதிரி தேச விரோதச் செயல்களில் அரசை ஈடுபடுத்தினால், டிஸ்மிஸ் செய்ய ஏற்கனவே போதுமான சட்டங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் அரசு இந்த மாதிரி தேச விரோதச் செயல்களை (எதிர்கட்சிகளுக்கு மட்டும்) பொறுத்துக்கொண்டதில்லை. அதுபோல மத்திய அரசு செயல்படலாம்.

  ஆனால் பாஜக, குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம், கறி, பால், தயிர் என்று எல்லாவற்றையும் கலக்க நினைக்கிறது. ஒரே நேஷன் ஒரே ரேஷன் போன்ற பல திட்டங்கள் இதனை நோக்கித்தான் செல்கிறது. இது மிகவும் தவறான பாதை. இந்தியா என்பது எல்லாவித மொழிகளும், கலாச்சாரங்களும் மக்களும் வாழும் தாய்நாடு. அங்கு மைனாரிட்டி மெஜாரிட்டி என்று எந்த விதச் சலுகைகளும் கொடுக்கக்கூடாது. அனைவரும் சமம் என்ற நோக்கிலேயே பார்க்கவேண்டும். (In fact, 100 central govt jobs இருந்தால், அதனை, பாராளுமன்ற சீட் விகிதாச்சாரம் போல ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கவேண்டும். மொத்தம் 550 மத்திய அரசு வேலைகள் என்றால் அதில் 39 தமிழ்நாட்டுக்கு, 1 புதுச்சேரி என்பது போல ஒதுக்கினாலும் அதில் அர்த்தம் இருக்கும். சிவில், கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றே. இந்த மாதிரி ஒரு நாடு என்ற உணர்வை வளர்க்காமல், மாநிலங்களை செல்லாக் காசாக்க நினைப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.