ஹெச்.ராஜா நீக்கம்….!!!

….
….
….

இன்று மாலை, தமிழில் ஒரே ஒரு
செய்தி நிறுவனம் மட்டும் இப்படி தலைப்பிட்டு
ஒரு செய்தி வெளியிட்டுள்ளது….!!!

—————————————

—————————————-

விவரம் என்னவென்று உள்ளே பார்த்தேன் ….

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை
அதன் தலைவர் ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில்
தமிழகத்தைச் சேர்ந்த எந்தத் தலைவர்களும்
இடம்பெறவில்லை.

கடந்த வருடம் பாஜகவின் தேசிய செயலாளராக
ஹெச்.ராஜா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால்
இந்த வருடம் அவருக்கு எந்தப் பொறுப்பும்
வழங்கப்படவில்லை. அதைத்தான் செய்தி நிறுவனம்
கொண்டாடுகிறது…!!!

மேற்கண்ட செய்தி, தமிழகத்தில் நிறைய பேருக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தும்… (சில பாஜகவினருக்கு கூட…!!!)

இது யார் யாருக்கெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்….?

பின்னூட்டத்தில் ஒரு பட்டியல் போடலாமா….?

.
—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஹெச்.ராஜா நீக்கம்….!!!

 1. jksmraja சொல்கிறார்:

  ரெம்ப சிக்கலான நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத கேள்வி. தமிழ் நாட்டு அரசாங்கம் பட்டியல் தயாரித்தாலும் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகலாம்.

  இதை சுருக்கமாக சொல்வது என்றால்,

  மதக்கலவரங்களை ஏற்படுத்தி, பூட்டிய கடைகளை உடைத்து, செல்போன்களையும், பிரியாணியை அன்டாவோடும் திருடும்
  சங்கிகளை தவிர எல்லோருக்குமே மகிழ்ச்சியைத்தான்
  கொடுத்து இருக்கும்.

  அந்த சங்கிகளுக்குத்தான் இனிமேல் சந்தர்ப்பம் வாய்க்காதோ என்று வருத்தமாக இருக்கும்.

  • தமிழன் சொல்கிறார்:

   கும்பகோணத்தில் பாமக பிரமுகரை கொலை செய்த பாப்புலர் ஃப்ரண்ட், TMM இவங்கள்லாம் சங்கிகளா? யார்கிட்ட வேணும்னாலும் (உலகத்துல) கேளுங்க… யார் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று.

 2. புதியவன் சொல்கிறார்:

  //கடந்த வருடம் பாஜகவின் தேசிய செயலாளராக ஹெச்.ராஜா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் இந்த வருடம் அவருக்கு எந்தப் பொறுப்பும்
  வழங்கப்படவில்லை// – ஏன் சார்… ஒரு கம்பெனில ஒரு பொசிஷனுக்கு தேர்வு செய்யறாங்க. அவங்க பெர்ஃபார்மன்ஸ் சரியில்லைனா, கம்பெனிக்கு கெடுதல்தான் செஞ்சாங்கன்னா என்ன செய்வாங்க? கழட்டிவிடுவாங்க. இதுல நாம மகிழ்வதற்கோ இல்லை வருத்தப்படவோ என்ன இருக்கிறது? நாலு நியூஸ் சேனல்ல பேர் வரணும் என்று விஷத்தைக் கக்கினால், அதனால் கம்பெனிக்கு பைசா பிரயோசனம் இல்லை. அவ்ளோதான்.

  • Ezhil சொல்கிறார்:

   எனக்கு அப்படி தோணலை புதியவன் சார், முன்னாடி இதை கேள்விப்பட்டிருக்கேன். எதை செஞ்சாலும் அந்த சீன்ல இருந்துகிட்டே இருக்கணும். அப்படிப்பட்ட பணி, ராஜா போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

   சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஜக என்ற ஒன்றே தெரியாமல் (அ) அது ஒரு தேசியக்கட்சி என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்த தமிழர்களை, மெல்ல மெல்ல மாற்றி தமிழத்தில் காழூன்ற இவர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார்கள். ஆதலால் ராஜாவுக்கு விரைவில் எதாவது ஒரு பதவி கண்டிப்பாக வழங்கப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Raja may be nominated as a Goverfnor in some state

 4. jksmraja சொல்கிறார்:

  பிஜேபி யின் அரசியல் தந்திரத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கின்றேன். அவர்கள் ஒரு இருபது சதவிகிதம் வாக்காளரை கவரும் வரை ஒரு போதும் மேல் சாதியினரை முன் நிறுத்தமாட்டார்கள். எல் கணேசன், H ராஜா போன்றவர்கள் பழைய காங்கிரஸ் ,ஜனதா பார்ட்டி அதன் வழியே பிஜேபி க்குள் பயணிப்பதாலும் வேறு அறிமுகமான தலைவர்கள் இல்லாததாலும் இவர்களுக்கு பதவி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் கட்சி இருந்தது

  ஆரம்ப காலத்தில் எல்லா மாநிலத்திலும் முன் நிறுத்தப்பட்ட தலைவர்களை நினைத்து பாருங்கள். நரேந்திர மோடியே அந்த வகையில் முன் நிறுத்த பட்டவர்தான்

  இப்பொழுது நரேந்திர மோடியை மட்டுமே முன்னிறுத்தி கட்சியை நடத்துவதால் இவர்கள் தேவை இல்லை.

  திரு புதியவனின் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன்.

 5. jksmraja சொல்கிறார்:

  தமிழன் என்று புனைபெயர் சூட்டிக்கொண்ட உங்கள் தமிழ் பற்றை நினைத்து பூரிப்புஅடைகின்றேன்.

  நீங்கள் H ராஜா அறிக்கையை மட்டுமே படிப்பேன் என்று சபதம் மேற்கொண்டிருக்கிறீர்களா, என்ன? கும்பகோணத்தில் பாமக பிரமுகரை கொலை செய்தது அவர்களின் தனிப்பட்ட விரோதம் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டதை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

  நீங்கள் சொல்வது சரி என்றே ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், ஒரு கொலைக்கு எதிர்வினை அந்த நபரின் கடையையோ அல்லது அவரின் உறவினர் கடையையோ கொள்ளையடிப்பதை கோபத்தின் வெளிப்பாடு என்று கருதலாம். அதை எல்லாம் விட்டுவிட்டு இந்த கொலை நடந்த காலத்திற்கு சம்பந்தமே இல்லாத காலத்தில் கோயம்புத்தூரில் போய் பூட்டிய கடைகளை உடைத்து, செல்போன்களையும், பிரியாணியை அன்டாவோடும் திருடுவது எந்தவகையில் சரி . கொஞ்சம் விளக்குங்களேன். கோயம்புத்தூர் பிரியாணியின் சுவை உங்களை சுண்டி இழுக்கிறது என்று நினைக்கின்றேன். ஆகையால்தான் கோயம்புத்தூரில் கோவில்களின் பன்றி மாமிசத்தை வீசி விட்டு அந்த பழியை இஸ்லாமியர்களின் மேல் சுமத்தி மீண்டும் பிரியாணி அண்டாவை தூக்குவதற்கு திட்டம் தீட்டினீர்கள் என்று கொள்ளலாமா? காவல் துரையின் நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

  தம்பி ஒரு கேள்வி. பாமக பிரமுகரின் கொலைக்கும் பிஜேபி க்கும் என்ன சம்பந்தம்? அவர் இந்து என்பீர்கள். ஒரு இந்துவின் கொலைக்கே இவ்வளவு துடிக்கும் நீங்கள், தமிழன் என்று பெயரையும் வைத்துக்கொன்டு ஈழத்தில் ஒன்றேமுக்கால் லட்சம் இந்துக்களை கொன்று குவித்தபோது எங்கே போய் இருந்தீர்கள். அப்பொழுது ஏன் தம்பி பொங்கவில்லை?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.