…..
…..
…..
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே வந்துகொண்டிருந்த செய்திகள்
நம் மனதை ஓரளவு இந்தச் செய்திக்கு பக்குவப்படுத்தி
வைத்திருந்தன… இருந்தாலும் கூட –
எப்படி ஆறுதல் படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை…
இறையுடன் சேர்ந்துகொண்ட எஸ்.பி.பி.யின் ஆன்மா
அமைதிபெற வேண்டுகிறோம்.
எப்படி இருந்தாலும் சரி – டெக்னாலஜியின் துணையால்,
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் நம்முடன் இருப்பார்.
பாலு எத்தனையோ ஆயிரம் பாடல்களைப் பாடியிருந்தாலும்,
எத்தனையோ நிகழ்ச்சிகளை தந்திருந்தாலும் கூட –
அவரே இசையமைத்து யேசுதாஸ் அவர்களுடன்
மேடையில் பாடிய இந்த சிங்கப்பூர் நிகழ்ச்சி வாழ்க்கையில்
என்றுமே மறக்க முடியாத ஒன்று….
…….
…….
.
—————————————————————————————————————————-
எஸ்.பி.பாலசுப்ரமணியனின் ரசிகர்களான சில நண்பர்கள்
அவர்களுக்கு பிடித்த பாடலாக சிலவற்றைச் சொல்லி,
எஸ்.பி.பி.நினைவாக – அவற்றையும் இங்கே
பதிவு செய்யச் சொல்லி எனக்கு செய்தி அனுப்பி
இருக்கிறார்கள்….
என்னால் முடிந்தவரை அவற்றைத் தேடியெடுத்து –
வரிசையாக இங்கே பதிவிடுகிறேன்…
முதலில் கேட்டவர் வேலூரிலிருந்து திரு.அனந்து என்கிற நண்பர்…
அவர் சொன்ன பாடல் “ஆயிரம் நிலவே”க்கு அடுத்ததாக, தனது
திரையுலக வரலாற்றில் 2-வது பாடலாக எஸ்.பி.பி. பாடிய பாடல் –
1969-ல் வெளியான “பால் குடம்” படத்திலிருந்து –
“மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்..”
——————————-
(இதற்கான வீடியோ கிடைக்கவில்லை ; எனவே ஆடியோ மட்டும்…)
————————————
அடுத்தது நண்பர் புவியரசு –
மண்ணில் இந்த காதலின்றி – கேளடி கண்மணி
.
.
அடுத்தது நண்பர் ராஜா –
தேடும் கண் பார்வை- மெல்லத்திறந்தது கதவு –
.
நண்பர் ராஜகோபாலன் –
“சங்கராபரணம்” – கிடைக்குமா இதுபோன்ற சேவை …
.
அஞ்சலி
Sir, what I like/love about SPB sir is his character. More than a singer, he is a beautiful soul and wonderful human being. I have not seen him discouraging anyone or boasting himself. He is very humourous and a very good actor. He disowns any credit for which he doesn’t belong to. I can say he has a very big heart to praise others. We love him forever and he will live forever and ever.
எழில்,
நீங்கள் சொல்வது மிகச்சரி.
தன் அற்புதமான குரலால் அவர் சகலரையும்
ஆகர்ஷித்தார் என்றாலும் கூட –
நாம் அவரை அதிகம் விரும்புவது
அவரது இனிய பண்புகளுக்காகத் தான்.
எஸ்.பி.பி. என்றும் வாழ்வார்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sir, in your above article, the word, * with the help of techonology, he will live for ever with us. for
ever*
might be avoided. Even with out the technology he will live with us for ever. This is purely my own view.. Not to cast any motive about your atricle.
Received From Gopi –
SPB -க்காக இளையராஜா சார்
இந்த இரங்கற்பாடலை பதிவிட்டிருக்கிறார் ;