அமிதாப் பச்சன் எழுதியது….!!!

….
….

….

புகழ்பெற்ற மூத்த நடிகர் அமிதாப் பச்சன் எழுதியதாக ஒரு
தகவலை ஒரு வலைத்தளத்தில் படித்தேன். அவர் எழுதியது
தானா என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் சுவாரஸ்யமாக
இருந்தது. எனவே, கீழே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்….

——————————————————————–
எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த
போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி,
ஒரு சாதாரண சட்டை,பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார்.
வயதான மனிதர்,
நடுத்தர வர்க்கம்,
நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.
என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி
கை கொடுத்தனர்.

ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை.
என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர்
நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை
கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.

தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து,
ரசித்து பருக ஆரம்பித்தார்.
என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?
அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல்,
அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான்
அவரை பார்த்து சிரித்தேன். அந்த மனிதரும் புன்னகை செய்து,
‘ஹலோ’ என்று சொன்னார்.
நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

சமூகம்,
பொருளாதாரம்,
அரசியல்,
என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.
அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு
நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.
சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை
நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.
நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான்
பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.
நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று
குறிப்பிட்டேன். அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.
நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.
அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,
உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.

நல்லது, என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.
அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள், நல்ல நாளாக இருக்கட்டும்
என கூறி: என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.
நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.
பேரையும், புகழையும் வைத்து, நாம் தான் பெரிய ஆள்,
என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால், நம்மை விட வசதியிலும்,
அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர்
இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.
நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.
வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு,
பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும்,
எல்லா இடத்திலும் வென்றுள்ளது.
எந்த சூழ்நிலையிலும், பணிவுடனும், அடக்கத்துடனும்
நடந்து கொள்ளுங்கள். அது உங்களை சமூகத்தில் உயர்ந்த
அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அமிதாப் பச்சன் எழுதியது….!!!

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஒரு காலத்தில் திலீப் குமார் விமானத்தில் ஜி டி பிர்லாவை
  சந்தித்த போது நடந்தது என சொல்வார்கள் .
  அது உண்மையா என்பது தெரியாது .

  இப்போது அமிதாப் – டாடா வைத்து வந்திருக்கிறது .

  மிக பெரியவர்கள் அடக்கமாக இருப்பார்கள் என்பது உண்மைதான் .

 2. புதியவன் சொல்கிறார்:

  இவர்தான் மும்பையின் மழை நாள் இரவு, தவித்துக்கிடந்த ஒரு பயணியை தன் காரில் ஏற்றிக்கொண்டு அவர் சொன்ன இடத்தில் டிராப் செய்தார். பயணி கடைசியில் நன்றி கூறி, தாங்கள் யார் என்று கேட்டதற்கு, என்னை டாட்டா என்று சொல்வார்கள் என பதில் சொன்னதாக, இந்தச் சம்பவத்தை வாலி தன் நினைவு நாடாக்கள் என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். Humble. இந்தக் குணம் வருவது மிகக் கஷ்டம். அது ‘குலத்தினால்’ வரும். அதாவது பெரியவர்களுக்குத்தான் வரும். மத்த சாதாரண மனிதர்கள் எல்லோருக்கும், சூபர்வைசர் ப்ரொமோஷன் வந்தாலே தனக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தான் ராஜா என்ற எண்ணம்தான் வரும்.

  ரஜினி, அஜித் போன்றவர்களைப் பற்றியும் திரைத் துறையில் அப்படித்தான் சொல்வார்கள். அதாவது தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாத தன்மை.

  வெங்கடேஷ் பட் (செஃப்), அவர்களின் ஹோட்டலுக்கு ரஜினி தன் குடும்பத்துடன் உணவு உண்ண வந்திருந்தாராம். அப்போது அங்கிருந்த கஸ்டமர்களில் ஒருவர், தன் மகன் ரஜினி ஃபேன் எனவும், அவனின் பிறந்தநாள் இன்று, அதனால் ரஜினியுடன் ஹாய் சொல்ல முடியுமா என்று சூபர்வைசரைக் கேட்டிருக்கிறார். அவர் ரஜினியிடம் இதனைச் சொன்னபோது, எந்த வித பந்தாவுமின்றி ரஜினியே அவர்களது மேசைக்கு வந்து பேசி, போட்டோ எடுத்துக்கொள்ளவும் வைத்தார் என்று குறிப்பிட்டிருந்தார். (உடனே மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவரை கன்னத்தில் அறைந்தவரும், தன்னை போட்டோ எடுத்தவரின் செல்ஃபோனைத் தூக்கி அடித்தவரும் நினைவுக்கு வராது என்று நம்புகிறேன்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s