….
….
….
கொரோனா தொற்று இந்தியாவிலேயே அதிக
எண்ணிக்கையில் பரவி பயமுறுத்திக்கொண்டிருக்கும்
மஹாராஷ்டிராவிலுள்ள ‘புனே’ நகரில்,
மக்களின் பயத்தையும், பலவீனத்தையும் பயன்படுத்தி –
இப்படி ஒரு வியாபாரம் நடக்கிறதாம்….!!!
இது – எதி’லிருந்து பிடிக்கப்படும் ஆவி என்று
சொன்னால், பலர் என்னை அடிக்க வருவார்கள்…!!!
எனவே – நான் சொல்ல மாட்டேன்…!!!
முடிந்தால் நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்…!!!
……
……
.
——————————————————————————————————
இங்க வந்த புதிதில் லால்பாக் கார்டனில் ஒரு ஞாயிறு நடைப்பயிற்சிக்குச் சென்றேன். பார்க்கிற்கு வெளியே நிறைய வியாபாரம் நடக்கும், காய்கறி, பழங்கள், சிப்ஸ், சூப், ஏன்… பிரஷர்/பிளட் ஷுகர் செக்கிங் 30 ரூபாய்க்கு என்றெல்லாம். அதில் ஒன்று, கோமூத்திரத்தை உபயோகித்துத் தயாரிக்கப்பட்ட உடலுக்குப் போடும் சோப் 80-100 ரூபாய் என்று நினைவு. விரைவில், பசுஞ்சாணியில் தயாரித்த செண்ட், மாஸ்க் என்றெல்லாம் வியாபாரம் பெருகும் (எங்கள் வளாகத்தில் மார்வாரிகள்/ஜெயின்ஸ்-வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களில் ஒரு பெண், கலம்காரி டிசைனில் மாஸ்க், ஓவியத்துடன் கூடிய மாஸ்க், குழந்தைகளுக்காக கார்ட்டூன் கேரக்டர்ஸ் பிரிண்ட் பண்ணி இருக்கும் மாஸ்க் என்றெல்லாம் விளம்பரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். வியாபாரிகள், எதை வேண்டுமானாலும் வியாபாரம் செய்து பிழைக்க நினைப்பார்கள் என்பது தெரிந்ததுதானே. அதில் பெரும்பாலும் மாட்டுவது அப்பாவிகள்தான்.
பதஞ்சலி உப்பு போட்ட டூத்பேஸ்ட், மூலிகை கலந்தது என்றெல்லாம் வியாபாரம் செய்து கோல்கேட்டின் வியாபாரம் 7 சதவிகிதம் குறைந்த உடனே, அவர்கள், வேதத்தில் சொல்லியுள்ள மூலிகை கலந்த பேஸ்ட், உங்க பேஸ்டில் உப்பிருக்கா, கரி கலந்த பேஸ்ட் என்றெல்லாம் விதவிதமா வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.