ஆவேசத்தில் துவைத்து தொங்கப்போடும் மஹுவா …

….
….

….

பாராளுமன்றத்தில் டிஎம்சி உறுப்பினர்
திருமதி மஹுவா மொய்த்ரா பேசிய இந்த காட்சிகளை
அநேகமாக எந்த டெல்லி, தமிழக – தொலைக்காட்சியும்
வெளியிடவில்லை…..!!!

…………

…………

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஆவேசத்தில் துவைத்து தொங்கப்போடும் மஹுவா …

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  இதில் உள்ள காணொளியை நண்பர்கள் கேட்க வேண்டுகிறேன். இது அரசுக்கு எதிரானது, எனவே தமிழக பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சிகளோ காண்பிக்காது. நன்றி VIMARISANAM.COM

 2. R KARTHIK சொல்கிறார்:

  Excellent speech.
  Must watch.

 3. GOPI சொல்கிறார்:

  தமிழக எம்.பி.க்கள் யாராவது இப்படிப்
  பேசும் நாள் வருமா ?

  • Raghavendra சொல்கிறார்:

   ஏன் ? கனிமொழி ?

   • புதியவன் சொல்கிறார்:

    You have a valid point Mr.Raghavendra. கனிமொழி தைரியமாகக் குரல் கொடுப்பவர்தான். அதனால் அவருக்கு புகழ் கூடுவதை ஸ்டாலின் பொறுக்கமாட்டார். அவருக்கு எப்போதுமே திமுகவில் ஆப்பு இருந்துகொண்டே இருக்கும். என்ன செய்தாலும் அதன் பயன் திமுக என்ற கட்சிக்குப் போகுமாறு பார்த்துக்கொள்வாரே தவிர கனிமொழி புகழ் வெளிச்சத்தில் வருவதை எப்போதுமே ஸ்டாலின் விரும்ப மாட்டார். ஸ்டாலின் கவனம் எல்லாமே உதயநிதியை ப்ரொமோட் செய்வதில்தான் இருக்கும். அதற்கேற்றவாறு உதயநிதி இந்தத் தேர்தலில் போட்டி போட்டு எப்படியாவது அமைச்சராகிடணும் என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.

    அதனால கனிமொழி என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அதனால் பயன் இருக்காது என்றே நினைக்கிறேன். (குறைந்தபட்சம் அவருக்கு கட்சியில். மத்த கட்சி எம்பிக்கள் மத்தியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு பதில் சொல்ல திகாரில் அவர் இருந்தது மறந்துவிடுமா என்ன? அதனால் கட்சித் தலைமையிடமும் வரவேற்பு இருக்காது, மத்த கட்சி எம்பிக்களிடமும் மதிப்பு இருக்காது)

 4. jksmraja சொல்கிறார்:

  எங்க, நம்மமேல ஊழல் வழுக்குப்போட்டு விடுவார்களோ என்று பயந்து, அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்ட தொடை நடுங்கி அடிமைகளிடம் இதை எதிர்பார்க்கும் திரு கோபி அவர்களே உங்கள் நகைசுவை உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.

  என்னுடைய கணிப்பு சரியானால் இன்னும் பத்து வருடத்தில் மத்திய அரசை துவைத்து காயப்போடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் இருந்து வருவதற்கு வாய்ப்பு உண்டு.

  இந்த அம்மையார் போற்றுதலுக்கு உரிய, வணங்க தகுந்த உண்மையான வங்காள புலிதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   இந்த ட்விட்டர் அக்கௌண்ட் யாருடையது
   தெரியுமா…???

   // Ramachandran A
   @RamaChandraan
   Senior Project Engineer |
   President -Udhayanidhi Stalin Fans Welfare Association Qatar |
   Osho ~ Celebrating Life ((Red heart))

   .!!!!!

   வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. jksmraja சொல்கிறார்:

  திரு ராகவேந்திரா அவர்களே,

  உங்களின் வஞ்சக புகழ்ச்சி ரசிக்கும் படி இருக்கிறது . வாழ்த்துக்கள்.

  “AIADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்து விடலாம் என்று கனவு கண்டால் ………….”

  இவ்வளவு தான் சார். அந்த வாக்கியத்தைக்கூட முடிக்கவில்லை. இதற்க்கே குலை நடுங்கிப்போய், இன்னும் இரண்டரை நாளில் கழக ஆட்சிதான், இன்னும் மூணே முக்கால் நாளில் கழக ஆட்சிதான் என்று நான்கு ஆண்டுகளாக உளறி திரியும் கழகத்தை சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நகைசுவையானது.

  இது எல்லாம் சரி

  கருத்து கூறும் முக்கியமான ஒரு உறுப்பினரை காணவில்லை என்று தானே எல்லாரும் தேடுகிறீர்கள். அவர், கல்கி அவதாரமாகிய மோடிக்கு எதிராக பேசும் இந்த அம்மையாரை பற்றி தெரியாதா? இவர் எந்த எந்த முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார் தெரியுமா? என்று நமக்கு எல்லாம் விளக்குவதற்காக ஆதாரங்களை google , you tube மற்றும் பல சோசியல் மீடியாக்களில் தேடிக்கொண்டு இருக்கிறார். விரைவில் ஆதாரத்துடன் வருவார்.

 6. புதியவன் சொல்கிறார்:

  எவ்வளவு அருமையா பேசியிருக்காங்க இந்த எம்.பி. With solid facts. இந்த பி.எம். கேர் ஃபண்ட் பற்றி இந்தத் தளத்திலேயே முன்னால் ஒரு இடுகை வந்தது. இவங்க எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் வந்ததா? அல்லது, brush aside என்று ‘சரி அடுத்த உறுப்பினர் பேசுங்க’ என்று சொல்லி பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்ததா? Very boldly raising valid points. எனக்கு மிகவும் பிடித்த பாயிண்ட், instead of allocating funds to local areas of operation, they are jumping to contribute to PM funds. அடுத்தவன் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பதுபோல, தங்கள் நல்ல பெயருக்காக, காரணமின்றி பொதுப் பணத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ள அதிலும் யாரும் ஆடிட் செய்ய முடியாத fundக்கு ஏன் பாய்ந்து பாய்ந்து பணம் அள்ளித்தர்றாங்க (அவங்க பணம் இல்லை, பொதுப் பணத்தை).

  இவங்க பேசுவது எல்லாமே அர்த்தம் நிரம்பியதாகவும், அரசைக் கேள்வி கேட்பதாகவும் இருக்கிறது. பாராட்டப்பட வேண்டியவர் மொய்த்ரா அவர்கள்.

  இது மாதிரி ஆதாரத்துடன், அருமையாக கேள்வி கேட்பவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.