சில முக்கியமான கேள்விகளுக்கு -டாக்டர் ராம்தாஸ் பதில்கள் ….!!!

….
….

….

தொலைக்காட்சிகளில் தனி பேட்டி என்றால்
சாதாரணமாக 30 முதல் 40 நிமிடங்களாவது எடுத்துக்
கொள்கிறார்கள்.

இப்போதெல்லாம் முழு பேட்டியை பார்க்க
யாருக்கும் பொறுமையும் இருப்பதில்லை;
நேரமும் இருப்பதில்லை;

எனவே நான் இங்கே தருபவையாவது
முடிந்த வரை சுருக்கமாக இருக்கவேண்டுமென்றே
எப்போதும் முயற்சி செய்கிறேன்..

(சில சமயங்களில் அது இயலுவதில்லை…!!! )

தந்தி டிவி மற்றும் நியூஸ் 7 டிவி -யில் டாக்டர் ராம்தாஸ்
அவர்கள் முக்கியமான சில கேள்விகளுக்கு அளித்த பதிலை
சுருக்கமாக கீழே தொகுத்து தந்திருக்கிறேன்…

தந்தி டிவி –
…….

………..

…….

அன்புமணி முதலமைச்சர் வேட்பாளரா?

……………..

நியூஸ்-7 –
……
திமுக ஆட்சிக்கு வருமா…?

கொரோனா காலத்தில் தமிழக அரசு…?

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சில முக்கியமான கேள்விகளுக்கு -டாக்டர் ராம்தாஸ் பதில்கள் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  டாக்டர் இராமதாஸ் எப்போதுமே மல்டிபிள் பெர்சனாலிட்டி (டிஸார்டர்னு சொல்லலை) உள்ள ஆள். நியாயம் பேசணும் என்று நினைக்கிற சாதாரண மனிதன், மகனுக்கும் கட்சிக்கும் எது நல்லதோ அதைச் செய்யணும் என்ற யதார்த்தம். அதனால, ‘அன்னிக்கி இப்படிச் சொன்னீங்களே’ என்று கேட்க அனேகமாக அவர் வாயைத் திறந்து எதைச் சொன்னாலும் கேட்கக்கூடிய அளவில் அவர் பேசுவார். அவர் பேசுவதைப் பொருத்துத்தான் தற்போது பாமக எந்த திசையில் போகிறது என்பது தெரியும். அப்படிச் சொல்லும்போது உண்மையைப் பற்றி டாக்டர் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

  //கொரோனா காலத்தில் தமிழக அரசு// – அதிமுக அரசைப் பாராட்டியதை நோக்கும்போது, (1) வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் (2) திமுகவிடமிருந்து வரும் சிக்னல் சரியில்லை. 20-25 சீட்டுகளுக்காக அவர்களோடு கூட்டணி வைப்பதில் இஷ்டமில்லை

  //திமுக ஆட்சிக்கு வருமா// – இராமதாஸ் அவர்களின் கருத்து ஆச்சர்யமாக இருக்கு. ஆனால் கருத்து வேறு, தேர்தல் கூட்டணி வேறு, தேர்தல் பிரச்சாரம் வேறு என்பதுதான் அவரின் ஆணித்தரமான கொள்கை (இதுவரை).

  //அன்புமணி முதலமைச்சர்// – ஊடகங்கள் அதை பிரம்மாண்டமாக ஆக்கியிருந்தால் பாமக வெற்றிபெற்றிருக்கும் என்று இராமதாஸ் சொல்கிறார். அதாவது நல்லா விளம்பரம் கிடைத்திருந்தால் நடந்திருக்கும் என்று. அதைத்தான் இப்போ திமுக செய்யுது. ஆலோசகர் சொன்னபடி டோப்பா, அப்புறம் மணிக்கொரு விளம்பரம், திமுக சின்னத்தில்தான் துண்டு துக்கடா கட்சிகள்-திருமா, முஸ்லீம் கட்சிகள் போன்றவை நிற்கணும், காங்கிரசுக்கு மட்டும் கொஞ்சம் கருணையோட 25 சீட்டுகள் மட்டும் எடுத்துக்கிட்டாங்கன்னா அவங்க சின்னத்திலேயே நிற்கலாம் என்று திமுக வேகமாக ஆரம்பித்திருக்கிறது. விளம்பர வருவாய் கிடைப்பதால் நிச்சயம் தொலைக்காட்சி சேனல்கள் ஆதரிக்கும். ஆனால் அது வாக்குகளாம மாறுமா? இந்தியா ஒளிர்கிறது என்று விளம்பரம் கொடுத்தவங்களுக்கும், 2011ல் “சம்பாதித்த காசில்” நிறைய விளம்பரம் கொடுத்த , ஊடகங்களில் பெரும் ஆதரவைப் பெற்ற கருணாநிதிக்கும் மக்கள் பெப்பே காட்டியது நினைவுக்கு வருது.

  இந்தப் பேட்டியைக் கேட்கும்போது பேட்டி எடுத்த நேரம் வரை இராமதாஸ் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. நாளைக்கு ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வந்தால், அப்போது விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது தேதிமுகவோ நெருடலாக நினைக்கக்கூடாது என்ற கவனமும் அவர் பேட்டியில் தெரியுது. துரைமுருகன், சாதிப் பாசத்தில் பாமகவை திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பார் எனப் படித்தேன், அதற்கு ஸ்டாலின் வேட்டுவைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

 2. jksmraja சொல்கிறார்:

  வன்னியர் சங்கமாக, அவர்கள், மரங்களை சாலையின் குறுக்கே வெட்டி போட்டு போராட்டம் பண்ணிய போது எரிச்சலாக இருந்தாலும், அது பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியபோது, ராமதாஸின் பேச்சுக்களால் கவரப்பட்ட, லட்சக்கணக்கோர்களில் நானும் ஒருவன். வன்னியர் சமூகமே இல்லாத எங்கள் ஊரில், ஆயிரக்கணக்கானவர்கள்
  அப்போது ராமதாஸின் பேச்சுக்களால் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தார்கள்.தமிழ் நாடு எங்கும் இதுதான் அப்போதைய நிலை என்று நினைக்கிறேன்.

  தேர்தல்களில் வென்று பதவி சுகத்தை அனுபவித்து பண கட்டுகளை என்ன ஆரம்பித்த பின்பு மொத்தமாகவே சுயநலவாதிகளாக மாறிப்போனார்கள். நானோ அல்லது எங்கள் குடும்ப உறுப்பினர்களோ ஒரு நாளும் கட்சியிலோ அல்லது அரசியல் பதவியிலோ அமர மாட்டோம் ,அப்படி அமர்ந்தால் முச்சந்தியில் கட்டிப்போட்டு எங்களை சவுக்கால் அடியுங்கள் என்ற ராமதாஸின் வசனம் அவராலேயே மறக்கப்பட்டது. இதனை நன்கு புரிந்து கொண்ட பொது மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தூர விலகினார்கள். அன்புமணியை மட்டுமே முன் நிறுத்தி அரசியல் செய்வதால் இப்பொழுது அந்த சமுதாய மக்களில் கொஞ்சம் பேர் எதிராக திரும்பியுள்ளதாகவே நான் நினைக்கின்றேன்.

  ராமதாசின் அப்போதைய வசனங்களில் ஒன்று,

  நூறு ரூபாய் மூலதனம் போட்டு ஒரு ரூபாய் வருமானம் பார்த்தால் அவன் பெயர் விவசாயி .

  நூறு ரூபாய் மூலதனம் போட்டு பத்து ரூபாய் வருமானம் பார்த்தால் அவன் பெயர் வியாபாரி .

  பத்து ரூபாய் மூலதனம் போட்டு நூறு ரூபாய் வருமானம் பார்த்தால் அவன் பெயர் கல்வி தந்தை .

  மூலதனமே போடாமல் கோடிகளில் வருமானம் பார்த்தால் அவன் பெயர் அரசியல் வாதி .

  அவருடைய வசனங்களின் படியே இப்பொழுது அவர் ஒரு சிறந்த கல்வி தந்தையாகவும் அரசியல் வாதியாகவும் மிளிர்கிறார் .இப்பொழுது அவர்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என்று நினைக்கின்றேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   jksmraja,

   // நூறு ரூபாய் மூலதனம் போட்டு
   ஒரு ரூபாய் வருமானம் பார்த்தால் அவன்
   பெயர் விவசாயி .

   நூறு ரூபாய் மூலதனம் போட்டு பத்து ரூபாய்
   வருமானம் பார்த்தால் அவன் பெயர் வியாபாரி .

   பத்து ரூபாய் மூலதனம் போட்டு நூறு ரூபாய்
   வருமானம் பார்த்தால் அவன் பெயர் கல்வி தந்தை .

   மூலதனமே போடாமல் கோடிகளில் வருமானம்
   பார்த்தால் அவன் பெயர் அரசியல் வாதி .//

   நீங்கள் கூறியிருக்கிற மாதிரி ராம்தாஸ் அவர்கள்
   வசனம் சொன்னாரா இல்லையா என்பது எனக்குத்
   தெரியவில்லை; நான் எங்கும் படிக்கவில்லை;

   ஆனால், நீங்கள் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக
   இருக்கிறது. அந்த வசனம் அநேகமாக சரி என்றே நானும்
   நினைக்கிறேன்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.