….
….
….
ஒரு பாடல்…
கத்ரி கோபிநாத்-தின் அற்புதமான saxaphone இசை …
பிரபு மற்றும் ரமேஷ் அர்விந்த் –
ஆகியோரின் அற்புதமான facial expressions….
இவற்றை வைத்துக் கொண்டு அதகளப்படுத்தி இருப்பார்
இயக்குநர் கே.பாலசந்தர்…
ஒரு பாடலூடே இத்தனை
உணர்வுகளை கொண்டு வர முடியுமா…?
“டூயட்” தமிழ் திரைப்படத்தைத் தான் சொல்கிறேன்.
இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன் 1994-ல் வெளியான
அந்த திரைப்படத்தின் இந்த மறக்க முடியாத பாடலைச்
சொல்ல வந்தபோது –
…………
………….
அண்ணன், தம்பி இருவருமே காதலிக்கும்
பெண்ணாக நடிக்கும் அந்தப்படத்தின் கதாநாயகி
மீனாட்சி சேஷாத்ரி நினைவு வந்தது….
மீனாட்சி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் மற்றும்
ஒடிசி நடனங்களை முறையாகக் கற்றவர்.
தமிழில் அதிகம் இல்லாவிட்டாலும், தமிழ்ப்பெண்ணான
அவர் ஹிந்தி படங்கள் நிறைய பண்ணி இருந்தார்…
நல்ல பாப்புலாரிடியுடன் இருந்தபோதே –
1995-ல் திருமணம் செய்துகொண்டு
அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்று தெரிந்தது….
பின்னர் அவர் பற்றி செய்தி எதுவும்
வெளிவந்ததாகத் தெரியவில்லை;
1993-ஆம் ஆண்டு புனே-யில் நடந்த ஒரு
நிகழ்ச்சியில், மீனாட்சி சேஷாத்ரி மேடையில்
பரத நாட்டியம் ஆடும் வீடியோ ஒன்று கிடைத்தது…
இளமை, நல்ல தோற்றத்துடன் மீனாட்சியின் நடனம்
இடம் பெறும் அந்த காணொலி கீழே –
( காணொலியின் பிற்பகுதியில்
ஹேமமாலினியின் நடனமும் இடம் பெறுகிறது..)
………………………….
………………………….
.
——————————————————————————————————-
இந்த நடிகையை மறக்கமுடியாது.
எனக்கு பழைய நினைவொன்றை மீட்டிவிட்டது இது. ஒர் தேசத்தில் நான் வேலை பார்த்தபோது, அங்கு வட இந்திய ப்ராஜக்ட் மேனேஜர் கீழ் வேலைபார்த்தேன். எனக்கு தமிழ்நாட்டு திரைப்படம் தவிர அமிதாப் மட்டும்தான் தெரியும். வேற எதுவுமே பாலிவுட் திரைத்துறையைப் பற்றித் தெரியாது. ஹிந்தி தெரியாததுனால பாடல்கள்லாம் கேட்டதில்லை நாங்க எல்லோருமே ஆபீஸ் வளாகத்தில் இருந்த தனித்தனி ஃப்ளாட்டில் இருந்தோம் (எல்லோரும் பேச்சலர்ஸ், மனைவி ஊர்ல இருந்திருப்பாங்க, ஆனால் தனித் தனி flat எங்களுக்கு, எங்கள் சீனியாரிட்டி அடிப்படைல). அந்த ப்ராஜக்ட் மேனேஜர் flatக்குச் சென்றேன். சுவரில் ஒரு frameல் பெண்ணின் படத்தை பெரிதாக மாட்டியிருந்தார். உங்க மனைவியா என்று கேட்டேன். I wish என்று பதில் சொன்னார். எனக்கு புரியலை, ஏதேனும் காதல் தோல்வியா என்றேன். அதற்கு, நீ ஹிந்தி சினிமா பார்த்ததில்லையா? பாலிவுட் நட்சந்திரங்கள் தெரியாதா என்று கேட்டார். எனக்கு அமிதாப்பை விட்டால் வேற யாருமே தெரியாது, எந்தப் படமும் பார்த்ததில்லை..ஏன்? என்றதற்கு, இவள்தான் மீனாட்சி சேஷாத்ரி. ஹிந்தி திரையுலகின் சென்சேஷனல் ஆர்டிஸ்ட் என்றார். அது நடந்து 25 வருஷத்துக்குப் பிறகு இப்போ என்ன வாழுது..இப்போவும் பத்து ஆர்ட்டிஸ்டுகளைத் தெரிந்திருந்தாலே அதிகம். ரொம்பவும் கவரப்பட்டு பலமுறை பார்த்த ஒரே(?) ஹிந்தி திரைப்படம் (ஆங்கில சப் டைட்டில்ஸோடு) ராஸி.
புதியவன்,
// உங்க மனைவியா என்று கேட்டேன்.
“I wish” என்று பதில் சொன்னார். //
interesting…
அந்த வயதில் பெரும்பாலானோருக்கு
அப்படித்தான் கனவுகள் இருக்கும்…
ஆனால், அழகிய நடிகையை
திருமணம் செய்துகொண்டவரின்
வாழ்க்கை எப்படி இருக்குமென்று
ஐஸ்வர்யா ராய் கணவர்
“அபிஷேக் பச்சனி’டம்
கேட்டால் தான் புரியும்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மீனாட்சி அவரின் உண்மையான பெயர் இல்லை .
படத்திற்காகக் வைத்தது .
உண்மையான பெயர் – சசிகலா !