….
….
….
இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்….?
இந்த அவலம் என்று மறையும் ….?
என்ன செய்தால் ஒழியும்….?
………………………………………………………….
…
…
…
…
…
…
…
…
…
.
—————————————————————————————————————————————–
….
….
….
இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்….?
இந்த அவலம் என்று மறையும் ….?
என்ன செய்தால் ஒழியும்….?
………………………………………………………….
…
…
…
…
…
…
…
…
…
.
—————————————————————————————————————————————–
சார்… வெறும் படத்தைப் பார்த்துவிட்டு நாம பரிதாபப்படக்கூடாது. அதில் சிலர், சொந்தக் கால்களில் நின்னு பத்து ரூபாயாவது சம்பாதிக்கணும் என்று வயதானபோதும் எதையாவது வியாபாரம் செய்யறவங்க. சிலரை, அவங்க தங்கியிருக்கும் ஹோம், இந்த இந்தப் பொருட்களை விற்றுவிற்றுவா என்று கட்டாயப்படுத்தி அனுப்பும். இதுமாதிரி பார்வை குறைபாடு உடையவர்களை, உடல் குறைபாடு உள்ளவர்களை இரயில், பேருந்து மற்றும் தெருவோரம் சந்தித்திருக்கலாம். சிலரை (பலரை), வியாபாரம் செய்பவர்கள் அவர்களுக்கும் ஒரு துண்டை விரித்து அதில் அவர்களது பொருட்களைக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். 10% அல்லது குறைந்த பட்ச ரூபாய்களை சம்பளமாகக் கொடுப்பார்கள். இதனை நான் பெங்களூர் நடைபாதைகளில் பார்த்திருக்கிறேன் (I am sure there also same method).
ஆனால் எது பரிதாபம் என்று எனக்குத் தோன்றுகிறதென்றால், பொருட்களை உழைத்து விளைவித்துவிட்டு அதனை வாங்க சரியான ஆட்கள் இல்லாமல் அல்லலுறுபவர்கள்தாம். மழை அல்லது இயற்கைப் பேரிடர்கள் போன்ற அனைத்தையும், அது கொண்டுவரும் நஷ்டமும் விவசாயிகளைச் சார்ந்தது. விளைவித்தவைகளை கமிஷன் ஏஜெண்டுகளுக்கு சாதாரண விலைக்குக் கொடுக்கும் பரிதாபம் அவர்களுடையது.
நாவல் பழம் விற்பனை செய்பவர், நிச்சயம் குறைந்த விலைக்குத்தான் விற்பார். சுரைக்காயும் ஒன்று 10 ரூபாய்க்குத்தான் விற்பார். ஆனா சூப்பர் மார்க்கெட்ல நிறைய விலை கொடுத்து நாட்பட்ட பொருட்களை வாங்கவேண்டிய கட்டாயம்.
இங்க ஊரடங்கு சமயத்தில் இரண்டு வகையான கொத்தமல்லி கட்டுகளை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். நாட்டி என்பது 40 ரூபாயும் லோக்கல் வெரைட்டி 30 ரூபாயும் என்று. (நாட்டி-மிக வாசனையா இருக்கும், அதன் விதைகள் சாதாரணமானவை அல்ல என்பதை பிறகு தெரிந்துகொண்டேன்). நான் அவரிடம், நாட்டிக்கு ஏன் 40 ரூபாய், அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம், சாதா கொத்தமல்லி பார்க்க இன்னும் அழகா இருக்கே, அது 25 ரூபாய்க்குக் கிடைக்காதா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்கு அந்த அம்மா சொன்னாங்க, ‘ராஜா.. நான் 4000 ரூபாய் முதல் போட்டு, காலை 3 மணிக்கே சந்தையில் இவைகளை வாங்கிக்கொண்டு விற்றாகணுமே என்ற கவலைல இருக்கேன். நீ ஒரு கட்டு வாங்குவதற்கு இவ்வளவு கேள்வி கேட்டால் நான் எப்படி எல்லாவற்றையும் விற்பது’ என்றார். எனக்கே மனதுக்கு கஷ்டமாகிவிட்டது. நடைபாதை வியாபாரிகள் 4000-5000 ரூபாய் முதல் போட்டு சுற்றிச் சுற்றி விற்றால்தான் அவங்களுக்கு அன்று 500-1000 ரூபாய் கிடைக்கும். இந்த முதல் அவங்கள்ட இருக்காது. அதையும் யாரிடமோ 100-200 ரூபாய் வட்டில வாங்கிக்கிட்டுத்தான் வந்திருப்பாங்க. இவங்களுக்கு அரசாங்கம், வங்கிகள் உதவி செய்தால், அரசாங்கம் இருப்பதற்கான அர்த்தம் இருக்கும். இவங்கள்லாம் 5000 கோடி ஸ்வாஹா பண்ணற ஆசாமிகள் இல்லை. இதற்கு எம்.எல்.ஏக்கள் ஏதும் செய்யக்கூடாதா? அவங்களுக்குத் தெரியாதா யார் யார் உண்மையான ஆட்கள் என்று?
இவர்கள் எல்லாம் ஓட்டு வங்கிகள். ஆமாம் , இவர்களை சிறுமையாக சொல்ல வில்லை. இவர்களின் கையறு நிலைதான் ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலையில் வைத்துள்ளது. கழுத்து நிறைய நகைகளும், கைகளில் இரண்டு ஜோடி பொன் வளையல்களும் அணிந்த பெண்களும்,எதாவது ஒரு பைக் வைத்துக்கொண்டு சொந்தவீட்டில் வாழ்ந்துகொண்டு, சில வங்கிகளில் ATM கார்ட் வைத்துகொன்டுள்ள வர்களும் ஓட்டுக்கு பணம் பெற்றுக்கொள்ளும் போது இந்த அப்பாவி, கையறு நிலை முதியவர்கள் என்ன செய்வார்கள். ஊரில் இருக்கும் எந்த ஒரு அரசியல் பிழைப்பவர்களுக்கும் இவர்களின் நிலை நன்கு தெரிந்த ஒன்றுதான். இவர்கள் இப்படியே இருப்பதுதான் அவர்களுக்கு நிலையான ஒரு ஓட்டுவங்கியின் பகுதியாக போய்விட்டுள்ளது. இந்த அமைப்பை எந்த ஒரு அரசும் மாற்ற இயலாது. அப்படி எதுவும் ஒரு திட்டம் இருந்தாலும், அதனுள் பல தில்லாலங்கடி வேலைகள் செய்து அந்த உதவிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக்கொள்ளவே இங்கே நூற்றுக்கணக்கில் காட்சிகள் உள்ளன. இதுதான் இங்கே நடைமுறை. சமீபத்தில் மத்திய அரசின் விவசாயிகளின் உதவி திட்டத்தில் பொய்யாக ஆயிரக்கணக்கில் நபர்களை சேர்த்து பலகோடிகள் சுரண்டப்பட்டு, சில கோடிகள் திரும்ப வசூல் ஆனா நடைமுறைகளும் இங்கே சாதாரணமான ஒன்று.
இவர்களுக்கு tender விட்டு கொள்ளை அடிக்க தெரியாது. கூவம் ஆற்றை
சுத்தப்படுத்தி படகு விடுகிறேன் என்று கதை விட தெரியாது. வீராணம்
தண்ணீரை சென்னைக்கு கொண்டு வருகிறேன் என்று ராட்சச குழாய்களை வீணாக
தெருவோரம் போட தெரியாது.ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறேன்
என்று பொய் சொல்லத்தெரியாது, சாராய வியாபாரிக்கு மெடிக்கல் இன்ஜினியரிங் கல்லூரி
கட்ட அரசு நிலத்தை தாரை வார்க்க தெரியாது. அலைக்கற்றையை விற்று
அதன் மூலம் கோடி கணக்கில் கொள்ளை அடிக்க தெரியாது.
இவர்களுக்கு தெரிந்தது தங்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை
விற்று அன்றாடம் வயிற்றை கழுவுவது ஒன்றே. எலக்ட்ரிக் ட்ரைனினில் இது
போல கடலை மிட்டாய், நெய் பிஸ்கேட் விளையாட்டு சாமான்கள் விற்று
வருபவர்களிடம்{ பெரும்பாலும் கண்பார்வை இல்லாதவர்கள் } பயணிகள்
பரிதாபப்பட்டு தேவை இருக்கிறதோ இல்லையோ வாங்குபவர் பலர் உண்டு.
அதையும் இந்த கொரோனா கொள்ளை நோய் முடக்கி விட்டது. ஆனால் 1967 முதல் தமிழகத்தை
ஆண்ட இரண்டு கட்சி தலைவர்களும் தொண்டர்களும் இப்போதும்
வெள்ளை சட்டை அணிந்து இன்னோவா கார்களில் கொடி பறக்க வலம் வருவது
நிச்சயம் நெஞ்சு கனக்க செய்கிறது.
தமிழ்மணி…. திமுக கருணாநிதியால் இந்த மாதிரி தாரைவார்க்கப்பட்ட இடங்கள், கல்லூரிகள், சாராய ஆலைகள், தொலைக்காட்சிகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதில் அவருக்கு, அவர் குடும்பத்துக்கு பங்கு கண்டிப்பாக இருக்கும். (This is to ensure mafia leader’s political protection). இதை யாராவது ஆராய்ந்தால் கண்டிப்பாக இதனைக் கண்டுபிடிக்கலாம். சிஐடி நகர் வீட்டையே வாடகைக்கு இருந்தவரிடம் கடன் வாங்கி விற்று பிறகு அதற்கே தானே ஓனர் ஆன கதைகள்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் இந்த அன்னாடங்காய்ச்சிகளுக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்திருக்கும்? ஆனானப்பட்ட சன் தொலைக்காட்சியே இவருக்கு பங்கு கொடுத்து ஆரம்பிக்கப்பட்டது, அதை செட்டில் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகள்தாம் கருணாநிதிக்கும் கேடி பிரதர்ஸுக்கும் இடையிலான பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதையெல்லாம் நீங்க படித்திருப்பீர்களே. சாராய ஆலையில் டி.ஆர்.பாலுவுக்கு எவ்வளவு பங்கு என்பதையே கண்டுபிடிக்க முடியாமல் நம் அதிகாரிகள் திணறுவதுதான் பெரிய சந்தேகத்தை வரவழைத்தது.