….
….
….
தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலே
உலகில் – அமெரிக்கா உட்பட – பல நாடுகள்
இருக்கின்றனவே….
பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒரு தேசத்தில்
குறிப்பிட்ட மொழியை தேசிய மொழி என்று
அங்கீகரிக்க வேண்டிய அவசியமே இல்லை…
முடிந்தால் – அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக
அறிவிக்கலாம்… நடைமுறை சாத்தியம் இல்லையெனில்
ஒன்றுமே வேண்டாமே…
மத்திய அரசின் அலுவல் மொழியாக ஏற்கெனவே
ஆங்கிலமும், ஹிந்தியும் இருந்து வருகின்றன.
அதுவே போதுமே. இதில் ஆங்கிலத்தை ஒழித்துக்கட்டி விட்டு,
ஹிந்தியை மட்டும் கொண்டு வர ஏன் வெறி….?
இது நமது கருத்து.
—————————————————
நமது கருத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில்,
இத்தனை குழப்பங்களுடன்,
இத்தனை எதிர்ப்புகளிடையே –
இந்தியாவிற்கு ஒரு தேசிய பொதுமொழியின் அவசியம் என்ன….?
– என்று கேட்டு அதற்கு பதிலாக
அழகாக, தெளிவாக காரணங்களை அடுக்கி –
புத்திசாலித்தனமாக விளக்கம் தருகிறார் ஒரு பெண்…!!!
Pragya Saini – பெயரிலிருந்து பஞ்சாபி என்று தெரிகிறது….
இந்தப்பெண் வேகத்தைக் குறைத்து, இன்னும் கொஞ்சம் மெதுவாக,
கேட்கிறவர்களுக்கு புரிகிறபடி, பேசியிருந்தால் தேவலை…
இருந்தாலும் பரவாயில்லை; பாராட்டுவோம்.
அவசியம் கேட்கவேண்டிய,
புத்திசாலித்தனமான ஒரு விளக்கம்….
Does India Need A National Language?
………….
………….
.
—————————————————————————————————————————————