வதைக்கும் வங்கிகள் -ATM-கள்… ?

….
….

….

எஸ்.பி.ஐ. தனது வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து
தருவதாகச் சொல்லிக்கொண்டு, மேலும் மேலும்
துன்பமும் தொல்லையும் தருகிறது.

எப்படி….?
எப்படியெல்லாம்….?

முதலில் ஒரு கட்டுப்பாடு –
ஒரு தடவையில் 20,000 -க்கு மேல் எடுக்க வசதி இல்லை;

அடுத்தது இன்னொரு கட்டுப்பாடு –
ஒரு நாளைக்கு மொத்தம் 40,000 -க்கு மேல் எடுக்க முடியாது.

இது இரண்டும் பெரிய பிரச்சினை இல்லை – எதுவரை….?
ஒரு மாதத்திற்கு 3 தடவைக்கு மேல் எடுக்ககூடாது…
எடுத்தால் …? ஒவ்வொரு கூடுதல் தடவைக்கும்
ஒரு தண்ட(னைக்) கட்டணம்…

இடையில் ஒரு சின்ன கேள்வி – சந்தேகம்…

ஆமாம் ஏடிஎம் இருப்பது வாடிக்கையாளர்களின் வசதிக்காகவா… ?
அல்லது வங்கியில் காசாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவா..?

ஏற்கெனவே ஏடிஎம் பராமரிப்பு கட்டணம் என்று
ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ஆண்டுக்கு 200 ரூபாய் வரை
வசூலிக்கப்படுகிறது.. எனவே ஏடிஎம்-மால் வங்கிகளுக்கு
தனியே கூடுதல் செலவு இல்லை ; வரவு தான்.

பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை;
அவை ஒழுங்காக பராமரிக்கப்படுவதும் இல்லை.

நான் நேரில் பார்த்துக்கொண்டிருக்கிற வகையில் –
தி.நகரில், வடக்கு உஸ்மான் தெருவில் –
மகாலிங்கபுரம் நோக்கிச்செல்லும் மேம்பாலத்தின்
இடது பக்கம் – தனியாக உள்ள ஒரு ஏ.டி.எம்.
அநாதையாக பராமரிப்பே இன்றி இருக்கிறது.
மாதத்தில் 5-6 நாட்கள் மட்டுமே இங்கு பணம் இருக்கும்.
பெரும்பாலான சமயங்களில் வழக்கமாக உள்ளே ஒரு நாய்
தான் படுத்திருக்கிறது.

இன்னொரு ஏ.டி.எம். அதே மகாலிங்கபுரத்தை இணைக்கும்
மேம்பாலத்தின் கீழே சற்று தள்ளி வலது புறத்தில் இருக்கிறது.
ஒரு எஸ்.பி.ஐ.வங்கிக் கிளையுடன் இணைக்கப்பட்டிருக்கும்
அந்த ஏ.டி.எம்.மிலும் பல சமயங்களில் பணம் இருப்பதில்லை;

தப்பித்தவறி ஒருவேளை இருந்தாலும் அது பத்தாயிரத்திற்கு மேல்
அனுமதிப்பதில்லை; வங்கிக் கட்டிடத்திலேயே இயங்கும்
ஒரு ஏடிஎம்-ன் நிலை இது.

இந்த லட்சணத்தில் இப்போது –
ஒரு புது அறிவிப்பு வந்திருக்கிறது.

18-ந்தேதி முதல் பகலில்கூட எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில்
பணம் எடுக்கவேண்டுமானால், ஏ.டி.எம். கார்டுடன்
கூடவே செல்போனையும் கொண்டு செல்ல வேண்டும்.

செல்போனில் வரும் ஒன் டைம் பாஸ்வோர்டை
பயன்படுத்தினால் தான் பணமெடுக்க முடியும்.
வெறும் பத்தாயிரம் ரூபாய் எடுக்கக்கூட இந்த கட்டுப்பாடு.

இதில் வேடிக்கை என்னவென்றால் –
இது வாடிக்கையாளர்களுக்கு
கொடுக்கப்படும் புதிய வசதியாம்…!!!!!!!!!!!!!!!!!!!!

இது வசதியா அல்லது தண்டனையா … ?

இன்னுமொரு தண்டனையை கொடுத்து விட்டு
அதை கூடுதல் வசதி என்று வேறு define செய்கிறார்கள் –

வங்கிக்காரர்களும் அரசியல்வாதிகளிடம்
கற்றுக் கொண்டு விட்டார்கள் போலும்.

கொரோனா காலத்தில், முகமூடிக் கவசத்துடன்,
ஏ.சி.யும் இல்லாமல், ஜன்னலும் இல்லாமல்
அடைக்கப்பட்டிருக்கும் ஏ.டி.எம்.முக்குள் முதியவர்களால்
எவ்வளவு நேரம் மூச்சு விட முடியும் …. ?

ஏற்கெனவே நேரம் கூடுதல் என்கிற நிலையில் இப்போது
புதிதாக One time password வேறு. ஏடிஎம் கதவு, பட்டன்களை
எல்லாம் தொட்ட கையோடு, செல்போனையும்
கையாள வேண்டும்…!!!
இது பாதுகாப்பானதா…. ?

வாடிக்கையாளர்களை இப்படியெல்லாம் துன்பப்படுத்துவதில்
இவர்களுக்கு என்ன சந்தோஷம்…? எஸ்.பி.ஐ வங்கிக்காரர்கள்
ஏன் இப்படி சேடிஸ்டாக இருக்கிறார்கள் …?

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க
எஸ்.பி.ஐ. எதாவது (சதி…?) திட்டம் போடுகிறதா…?

இவற்றிற்கு எஸ்.பி.ஐ. வங்கியில் எந்த நிலை-பொறுப்பில்
இருப்பவர்கள் காரணமோ – நமக்குத் தெரியாது;

ஆனால் வங்கிக்கிளையுடன் இணைக்கப்பட்ட ஏ.டி.ஏம்.முக்கு
நிச்சயமாக அந்தக் கிளையின் மேனேஜர் தான்
பொறுப்பேற்க முடியும் /வேண்டும்.

இதையெல்லாம் இங்கே எழுதுவதால் எந்த விமோசனமும்
ஏற்படப்போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் எழுதக் காரணம் –
நேற்று நான் படித்த ஒரு ஜோக்…
நூறு சதவீதம் நியாயமான ஒரு ஜோக்…
நீங்களும் தான் அனுபவியுங்களேன் –

…………

…………


……….

கடந்த வாரம் கூட ஏ.டி.ஏம்.மில் எனக்கு இந்த அனுபவம்
ஏற்பட்டது. எல்லா ஃபார்மாலிடிஸ்-களையும் முடித்த பிறகு –
கடைசியில் – (போடா) – பணம் இல்லை என்று சொல்லி விட்டது.

இங்கு மட்டும் தான் என்றில்லை – பக்கத்தில்
பசுல்லா ரோடு, ஹபிபுல்லா ரோடு ஏடிஎம்-களிலும்…
சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிட்டத்தட்ட
அத்தனை ஏடிஎம்-களிலும் இதே நிலை தான்.

மற்ற இடங்களில் மட்டும் என்ன வாழ்கிறது என்கிறீர்களா…
நான் நேரில் பார்த்துக்கொண்டிருப்பதை மட்டுமே இங்கே எழுதுகிறேன்.

“புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்று” என்று
இளம் வயதில் ஜாலியாகச் சொல்வது வழக்கம்…

இப்போது…?

“ஜோக் படித்து ஆற்று…!!!”

வேறு வழி….?

வங்கி அதிகாரிகள் யாருக்காவது சொரணை இருந்தால் தானே…
மற்றவர் படும் துன்பம் புரியும்…?

———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to வதைக்கும் வங்கிகள் -ATM-கள்… ?

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த மாதிரி பிரச்சனையைச் சந்திக்காதவர்களே இருக்க முடியாது. நான் இருந்த ஊர்கள்ல (கல்ஃப்), ஏடிஎம் சில சமயங்களில் வேலை செய்யாமல் அல்லது மெயிண்டெனன்ஸ்ல இருக்கும், அப்போ நாம வங்கிக்குள் சென்று எத்தனை பணம் (குறைந்த அளவுகூட) வாங்கிக்கொள்ளலாம். ஒரு தடவை எனக்கு ஒரு விநோத அனுபவம் ஏற்பட்டது (இங்க எழுதினேனான்னு நினைவில்லை).

  சுமார் 12 லட்சத்துக்கு மேல வங்கில போய் வாங்கினேன். நான் எப்போதும் எண்ணாமல் கவுண்டரிலிருந்து கிளம்ப மாட்டேன். (எண்ணும் மிஷின் நம் கண் முன்னால் எண்ணும் தொகையைக் காட்டினாலும்). ஒரு ரமலான் மாதத்தில் ஊரை விட்டு தள்ளி ஒரு இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வங்கியில் ரூபாயை (தினாரை) வாங்கினேன், நூறு நூறு கட்டாகத் தந்தார்கள். ஆனால் நான் எண்ணவில்லை. நேரே நான் இருந்த இடத்தில் உள்ள எக்ஸ்சேஞ்சுக்குச் சென்று பணம் அனுப்ப முயன்றேன்-அவசர செலவுக்கு. அவங்க எண்ணிக்கையைச் சரிபார்த்து 24000 ரூபாய் குறையுது என்றார்கள் (நம்ம கணக்கிற்கு). அதுவரை 15 வருடங்களில் இவ்வாறு நடந்ததே இல்லை. ரொம்பவும் ஷாக் ஆகிடுச்சு. அங்கிருந்தே வங்கியைக் கூப்பிட்டால் மாலை 4 மணி என்பதால் கால் செண்டருக்குச் சென்றது. கம்ப்ளெயிண்ட் செய்தேன், என்னையே நொந்துக்கிட்டேன். (எண்ணாமல் இருந்ததில்லையே..இன்று பார்த்து எண்ணாமல் இருந்துவிட்டேனே என நினைத்தேன்) கொஞ்ச நேரத்தில் வங்கியிலிருந்து கூப்பிட்டார்கள். பதட்டப்பட வேண்டாம், நாளை காலை வங்கிக்கு வரவும் என்றார்கள். நேரே மேனேஜரைப் பார்த்தேன். அவர் எவ்வளவு குறைந்தது என்றார். அமவுண்ட் சொன்ன உடனேயே அங்கிருந்த கவர்களில் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்தார். நேற்று கவுண்டரில் டிரெயினி இருந்தார். அவர் எண்ணுவதில் தவறு செய்துவிட்டார். ஷிஃப்ட் முடிந்து டேலி செய்யும்போது இந்த வித்தியாசம் தெரிந்தது. கணக்குகளைப் பார்த்து தனியாக எடுத்து வைத்திருந்தோம் என்று சொல்லித் தந்தார். நான் எண்ணாதது தவறோ என்று கேட்டேன். அப்படி இல்லை.. எல்லா இடத்திலும் சிசி டிவி கேமரா உள்ளது. தவறு நடக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும் உங்கள் திருப்திக்கு எண்ணிக்கொள்வது எப்போதுமே நல்லது என்றார்.

  நம்ம ஊரா இருந்தால், சத்தியமா பணம் கிடைக்காது. (ஆனால் ஒன்று, அந்த ஊரில் சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வட்டி அனேகமா இல்லை. அதுபோல, 10 வருடங்களுக்கும் மேலாக விலை மாற்றமே இல்லாமல் பொருட்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. இந்தியாவிலிருந்து வரும் காய்கறி போன்றவை தவிர)

  நிற்க…. பணப் புழக்கத்தைக் (cash transaction) குறைக்கும் நோக்கத்துடந்தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். ‘பணம் இல்லை’ என்பதும் அன்றைய வித்டிராயலைப் பொறுத்தது, அந்த அந்த ஷிஃப்ட் நேரத்தில்தான் மீண்டும் பணத்தை நிரப்புவார்கள்.

  நம்மைப் போன்றவர்கள்தாம் வங்கிகள் நமக்கு சேவை செய்வதற்காக இருக்கின்றன என்று தவறாக நினைக்கிறோம். அது அவங்களுக்கு எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச். அதுமட்டுமல்ல, அல்லா பரிவர்த்தனைகளும் ஆட்டமேடிக் ஆகிவிட்டதனால் ஆட்கள் மட்டும் குறைவதில்லை. ஹெச்டிஎஃப்சி போன்ற பன்னாட்டு வங்கிகளில் வேலை பார்க்கும் அனேகமா ஒவ்வொருவரும் ப்ராஃபிட் செண்டர். அதாவது ஒவ்வொருவரும் வங்கிக்கு எத்தனை வரவழைக்கிறார்கள் என்றெல்லாம் பார்த்துத்தான் ஆட்களை வேலைக்கு வைப்பார்கள். அரசுடமை வங்கிகளில் எல்லா பொசிஷன்களிலும் ஆட்களை நிரப்பிவிட்டு, வாடிக்கையாளர்களைப் பற்றிக் கண்டுகொள்ள மாட்டார்கள். நான் வங்கி ஆபீசர்களிடம் கேட்டால், அவங்க, அரசியல்வாதிகள் கொடுக்கும் டார்ச்சர் மிக மிக அதிகம், அதனால் வரும் பிரஷர் ரொம்ப அதிகம் என்பார் (வாடிக்கையாளர்களைப் பற்றி இருவருக்கும் கவலை கிடையாதே)

 2. R KARTHIK சொல்கிறார்:

  Sir,
  Consider opening a savings account with modern banks. You can have them for your transactions.

  Today SBI is giving 2.5% only for SB account. Take IDFC First for example it gives 7% and also there is lots of facilities.

  Yes, nationalised banks should change but meanwhile have your account with some customer friendly bank. There are many out there.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கார்த்திக்,

   உங்கள் யோசனையைப்பற்றியும்
   யோசிக்கிறேன்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Rajs சொல்கிறார்:

  Not all nationalized banks are like this. With SBI, I even had a strange experience. SBI once send me a new debit card when my existing debit card was about to expire but I couldn’t receive the card as I wasn’t in the station and the new card was sent back to branch. For this SBI wanted to charge but I shouted at them and gave up debit card facilities with SBI. I have cards with other nationalized banks but never had any such difficulties. With private banks, we do not know when they shut the shop. Because of inflation, we are getting interest on SB accounts – now we are also taxed on this income.

  • R KARTHIK சொல்கிறார்:

   Yes sir.

   You do have a point. But having a savings account with some 50K for your day to day expenses shouldnt be of any harm.

   We do anyway have 1Lakh insurance for the account. Meanwhile i too had that sort of experience with SBI and gave away my SBI debit card.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.