….
….
….
பீகார் சட்டசபை தேர்தல் : குவியும் நலத் திட்டங்கள்
செப் 16, 2020
https://www.dinamalar.com/news_detail.asp?id=2615078
பீகார் மாநிலத்தில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார்
தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் -பா.ஜ., கூட்டணி ஆட்சி
நடக்கிறது. வரும் அக்., -நவ,, மாதங்களில் சட்டசபை தேர்தல்
நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து மாநில மற்றும் மத்திய அரசுகள் சார்பில்
பல்வேறு மக்கள் நல திட்டப்பணிகள் அதிகளவில்
செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த திங்கட்கிழமை(14ம் தேதி) 900 கோடி ரூபாய் மதிப்புள்ள
திட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்
முறையில் துவக்கிவைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் …………
மாநிலத்தில் சரியான அரசு இருந்தால்,
மத்திய அரசின் திட்டங்கள்,
மக்களை நேரடியாக சென்றடையும் என்பதை,
கடந்த, 15 ஆண்டுகளாக, பீஹார் நாட்டுக்கு உணர்த்தி
வருகிறது என கூறினார்.
நேற்று (15ம் தேதி) பீகார் மாநிலத்தில் இரண்டு கழிவு நீர்
சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட 541 கோடி ரூபாய் செலவில்
ஏழு புதிய நகர்புற வளர்ச்சி திட்டங்களுக்கான துவக்க விழா
மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் வீடியோ
கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார்.
மாநிலத்தில் 20 நகரங்கள் கங்கை நதி கரை ஓரத்தில்
அமைந்துள்ளது. நதியை தூய்மையாக பராமரிக்க ரூ.6,000 கோடி
செலவில் 50 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
என கூறினார்.
ரயில் திட்டங்கள்
இந்நிலையில் பீகார் மாநிலத்தின் ரயில் பயணிகளின்
நலனுக்காக 12 ரயில் திட்டங்களை வரும் வியாழக்கிழமை
( செப். 18 ம் தேதி )வீடியோ கான்பன்ரன்ஸ் மூலம் துவக்கி
வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
அடுத்து வரும் நாட்களில் பீகார் மாநிலத்தில் சுமார்
16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேம்பாட்டு பணிகளை
பிரதமர் துவக்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ
வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
.
——————————————————————————————————————————-