அதிர்ச்சி தரும் கொல்லி மலைப்பாதை ….

….
….

….

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி…
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும்
கொல்லி மலைக்கான பாதை இது…
இதில் எத்தனை குறுகலான, எவ்வளவு ஆபத்தான
வளைவுகள் பாருங்கள்… கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர்
(அதாவது கிட்டத்தட்ட 4000 அடி ) உயரத்தில் அமைந்திருக்கிறது
கொல்லிமலைச்சிகரம்.

இதில் சில வளைவுகளில் வண்டி ஓட்டுநர்கள் படும் சிரமத்தைப்
பார்த்தால், எடுக்கும் ரிஸ்க்’கைப் பார்த்தால் காணொலியில்
காணும் நமக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் எதாவது செய்து, இந்தப்பாதைகளை
கொஞ்சம் விரிவுபடுத்தக்கூடாதா…?

…..

…..

.
——————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அதிர்ச்சி தரும் கொல்லி மலைப்பாதை ….

 1. புதியவன் சொல்கிறார்:

  நான் 90ல் இந்தப் பாதையில் பயணம் செய்து கொல்லிமலைக்குச் சென்றிருக்கிறேன். அரப்பளீஸ்வரர் கோவில்… அங்கிருந்து நடந்து (இறக்கமான பாதை) சென்று அங்குள்ள அருவிக்குச் சென்று குளித்திருக்கிறேன். போகும்போது நன்றாக இருந்தது. குளித்து முடித்து திரும்ப அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு வருவது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. நாங்கள் சென்றது ஒரு வேனில். ஆனால் பேருந்து செல்வதைப் பார்த்தபோது கொஞ்சம் பகீர் என்று இருந்தது. இதைத் தவிர கொல்லி மலையில் view points களில் தொலைநோக்கி இருந்தது. அங்கு அரசு பழத்தோட்டம் உண்டு. ஆனால் இயற்கையான சூழல்.

  இங்கெல்லாம் பாதையை விரிவுபடுத்துவது மிகக் கடினம். நிறைய கூட்டம் வந்து பெரிய சுற்றுலாத் தலமானால், இறங்குவதற்கு தனிப் பாதை அமைக்கலாம். பாதையின் ஓரங்களில் திருப்பதியில் வைத்திருப்பதைப்போல ரீ இன்ஃபோர்ஸ்ட் கான்க்ரீட் மற்றும் இரும்பினால் தடுப்புகள் அமைக்கலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   வாய்ப்பு கிடைக்கும்போது கொல்லிமலை
   போக வேண்டுமென்று நினைத்திருந்தேன்.
   ஆனால் இந்த வீடியோவை பார்த்தால்
   தயக்கமாக இருக்கிறது.

   கொல்லிமலை – பார்க்க வேண்டிய
   இடம் தானா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    என் கருத்து…. அது அவ்வளவு முக்கிய இடம் இல்லை. சும்மா அவுட்டிங் என்று சாப்பாடு கட்டி எடுத்துக்கிட்டுப் போய், நண்பர்களோட ஒரு சில இடங்களுக்குப் போய், குளிச்சுட்டு சாப்பிட்டுட்டு வரலாம். அதற்கு மேல் அங்கு வேலையில்லை. அதற்கு கொடைக்கானல் எவ்வளவோ மேலான இடம். உங்களுக்கு மலையில் பேருந்தில் ஊசி வளைவுகளில் செல்லும் அனுபவம் வேணும்னா அதுக்கு சத்தியமங்கலத்திலிருந்து (கோயமுத்தூர் அருகில்) தாளவாடி செல்லலாம். 23 ஊசி முனை வளைவு உள்ள மலைப்பாதை. நான் 7ம் வகுப்புக்கு அந்த ஊருக்குத்தான் சென்றேன். லாரியில் வீட்டுப் பொருட்கள், நாங்க பசங்க லாரி பின்னால, பெற்றோர் டிரைவர் சீட் அருகில். போகும் பாதையில் காட்டில் யானையைப் பார்த்தோம்.. அந்த ஊரில் இருந்தது தனி அனுபவம். (சிலர், வெந்நீர் போட, விறகில் சந்தன மரக் கிளையையும் ஒன்றாகப் போடுவார்கள். (சந்தன மரத்தை எரித்து வெந்நீர் போட்டா உடலுக்கு சூடு என்பார்கள்) பொதுவா வெந்நீர் போடும்போது யூகலிப்டஸ் இலைகளைக் கொத்தாக தண்ணீரில் அள்ளிப்போடுவார்கள்.) கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்த ஊரில் இருந்தேன். அந்த ஊரிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில்தான் கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த ஊர்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     மிக்க நன்றி புதியவன்.

     ஊசி வளைவுகளில் நிறைய
     அனுபவம் ஆகி விட்டது…!!!

     உங்கள் சின்ன வயது அனுபவம்
     அறிய மகிழ்ச்சி. பரவாயில்லையே –
     பள்ளி வயதில்
     அருமையான இடங்களில்
     வசித்திருக்கிறீர்களே…! இப்போது
     நினைத்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.
     அப்போதைய மனநிலை எப்படி இருந்ததோ…!

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     அது மிக அருமையான இடம்தான். நான் 7ம் வகுப்பு படித்தபோது பக்ருதீன் அலி அஹமது மறைவுக்கு விடுமுறை விட்டது நினைவுக்கு வருகிறது. அப்போ பக்கத்தில் (திம்பம் அருகில்) யானை ஆட்களைக் கொன்றது என்பது சாதாரணச் செய்தி. சொன்னால் ஒரு மூட்டை பெரிய நெல்லிக்காய்கள் (மூட்டை என்பது 3 அடி உயரம்) 5 ரூபாய். கடுக்காய்கள் அதைவிட விலை மலிவு. நான் காட்டுக்குள் சிலருடன் நடந்து சென்றிருக்கிறேன். நிறைய சந்தன மரங்கள் பார்த்திருக்கிறேன். அங்கதான் (அந்த ஊர்ல) மசூதிக்கு 20 அடி தூரத்துக்குள் மாரியம்மன் கோவில் உண்டு. அங்கு தீ மிதிக்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடக்கும். தீ மிதிப்பதற்கு 30 அடி நீளத்துக்கு இருக்கும் குண்டம் மசூதியிலிருந்து 10 அடி தூரத்துக்குள் நெடுக இருக்கும். நாகப் பாம்புகள், நட்டுவாக்கிளிலாம் ரொம்ப சர்வ சாதாரணம். பள்ளி (புத்தம் புதியது) வளாகத்தில் மலைப்பாம்பையும் பார்த்திருக்கிறோம். அந்த ஊரில்தான் எப்படி பட்டுப் பூச்சிகளை வளர்க்கிறார்கள், அதிலிருந்து எப்படி பட்டு நூல் எடுக்கிறார்கள் என்று பார்த்தேன். அங்கு பட்டு வாரியமும் உண்டு, பட்டுப்புழு வளர்ப்பது குடிசைத் தொழில். முசுக்கொட்டை செடி வளர்ப்பதும் அங்கு குடிசைத் தொழில்தான். இப்போ அந்த ஊர் எப்படி மாறி உள்ளது என்று தெரிந்துகொள்வதற்காக, அங்கு பிரயாணம் செய்ய ஆசை.

     You wont believe. அப்போதும் தமிழன் கன்னடன் என்ற உணர்வு கன்னட ஸ்டூடண்ட்ஸ் இடையே இருந்தது. (இராமனாத புரம் மாவட்டத்தில் 6ம் வகுப்பு வரை படித்த எனக்கு அந்த மொழி உணர்வு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது) ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று பிரிவுகளில் ஒன்று கன்னட மாணவர்களுக்கான பிரிவு. அதில் பாடம் கன்னடத்தில் இருக்கும். பள்ளி ஆசிரியர்களில் பெரும்பான்மை கர்னாடகாவைச் சேர்ந்தவர்கள்.

     அந்த ஊரிலிருந்து பல கிலோமீட்டர் தள்ளி ஒரு கிராமத்தில் என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்தார். அவரைப் பார்க்க ஒரு முறை சென்றிருந்தபோது, கரும்பிலிருந்து வெல்லம் காய்ச்சுவது போன்ற இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றிருந்தார். அவர் தேர்தல் பூத் கண்காளிப்பாளராக இருந்தபோது, எப்படி தேர்தல் நடக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.

     அந்த ஊரில்தான் மாவட்ட அளவு 8ம் வகுப்பு முடிந்த பிறகு தனித் தேர்வு நடத்தி-அதாவது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் முதலிரண்டு மாணவர்கள் கலந்துகொள்ளும்படியாக, மாவட்டத்தில் உள்ள சிறந்த இரண்டு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள். அதில் தேர்வாகி அந்த ஊரை விட்டு நெல்லைக்கு வந்து சேர்ந்தேன் (பிறகு ஹாஸ்டல்). இப்போல்லாம் அந்த முறை இருக்கா என்று சந்தேகம்.

     தாளவாடியைப் பற்றி நினைத்ததில், என்னன்னவோ நினைவுகள் வருகின்றன. பதின்ம வயதின் ஆரம்ப காலம் இல்லையா?

     இதைவிட என் மனதில் நிற்கும் சம்பவம், நான் திருநெல்வேலி மாவட்டத்தில் எழுதின (அப்போ ஹாஸ்டல்) பத்தாம் வகுப்பு பரீட்சையின் கணக்கு விடைத்தாள் என் அப்பா விடைத்தாள் திருத்தும் செண்டரின் கண்காளிப்பாளராக இருந்த செண்டருக்கு வந்திருந்தது. ஒவ்வொரு 50-100 பேப்பருக்கும் 3 விடைத்தாள்கள் சரியாக திருத்தப்பட்டிருக்கா என்று அவர் செக் பண்ணணும் என்று ரூல் என நினைவு. அதுல என் பேப்பர் வந்தது என்றும் சொல்லியிருக்கார். அப்போதெல்லாம் திருத்திய விடைத்தாள்கள் கண்காணிப்பாளர் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அதை சில மாதங்கள் வைத்திருந்து அரசுக்கு அனுப்பணும் என்று நினைக்கிறேன். அப்படி என் மேத்ஸ் விடைத்தாளை நான் (தாளவாடியில்) பார்க்கும் சந்தர்ப்பமும் வந்தது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      எல்லாமே அருமையான அனுபவங்கள் தான்.
      எல்லாருக்கும் இத்தகைய வாய்ப்புகள்,
      அதிருஷ்டம் கிடைக்காது.

      உங்கள் அப்பா ஆசிரியராக இருந்தது தான்
      உங்கள் கூடுதல் டிசிப்ளினு’க்கு
      காரணம் என்று நினைக்கிறேன்…!!!

      எனக்கு மிகவும் பிடித்த பணி ஆசிரியர் பணி.
      அதிகாரபூர்வமாக அதைச்செய்ய எனக்கு
      வாய்ப்பு கிடைக்கவில்லை; ஆனால்,
      நான் நிர்வாகத்தில் இருந்தபடியால்,
      எங்கள் பாதுகாப்புத் துறையின்
      பள்ளியும் அதன் பார்வையில் இருந்ததால்,
      நானாக சில சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொண்டு,
      பொது அறிவு, சமூக அறிவியல், போன்ற
      பொதுவான வகுப்புகளை அந்தப் பள்ளியில் விரும்பி
      நடத்தி இருக்கிறேன்.

      அந்த பள்ளியின் ஆசிரியர்களும்,
      மாணவர்களும் எனக்கு மிகவும்
      பரிச்சயமானவர்களாக ஆகி விட்டார்கள்.
      ஒவ்வொரு வருடமும் பள்ளியின்
      ஆண்டு விழாக்களை நடத்துவதில்
      எனக்கும் பங்கு இருந்தது.

      என் பணிக்காலத்தில், பணிச்சுமையும்,
      anxiety, tension -உம் மிக அதிகமாக
      இருந்தாலும் – இது போன்ற ஈடுபாடுகள்
      எனக்கு பெரும் relief ஆக இருந்தது.

      இந்த நாட்டின் எதிர்காலத்தை,
      எதிர்கால குடிமக்களை உருவாக்குவதில்
      ஆசிரியர்களுக்கு பெரும் பங்கும் கடமையும்
      இருக்கிறது. துரதிருஷ்டவசமாக
      பெரும்பாலான ஆசிரியர்கள் (எல்லாரையும்
      நான் சொல்லவில்லை…) இதை
      புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்.
      கடமைக்காகவும், வாங்குகிற சம்பளத்திற்காகவும்
      மட்டுமே உழைப்பவர்களாக ஆகி விட்டார்கள்.

      எங்கோ இருக்கும், துடிப்பு மிக்க –
      அந்த சில நல்ல ஆசிரியர்களின்
      எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக,
      இந்த நாட்டில் நல்ல குடிமக்களின்
      எண்ணிக்கையும் உயரும்.

      நல்லதையே நினைப்போம்.
      நல்லது நடக்கட்டும்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   மறுமொழி நீண்டுக்கிட்டே போகுது என்ற எச்சரிக்கை உணர்வும் வருகிறது. ஆனால் இந்த டாபிக் ஆசிரியர்களைப் பற்றி. இதை நீங்க தனி இடுகையா போடலாம் எனத் தோணுது. இடுகைக்கு சம்பந்தமில்லை என்று கருதினால் நீக்கிவிடலாம்.

   சின்ன வயதுல எல்லா ஆசிரியர்களும் கடமையே கருத்தாக இருந்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது (அதாவது அந்தக் கால, இந்தக் கால ஒப்பீடு). அப்போவும் கடனுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இருந்தனர், ரொம்ப சின்சியரா, கொஞ்சம் கடுமையா பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் இருந்தனர். பொதுவா கல்லூரி வரை நான் ‘தமிழ்ப்பாடம்’ (மற்றும் ஆங்கிலம்) எடுத்தவர்கள் ரொம்பவே சின்சியராக இருந்ததைத்தான் அனுபவப்பட்டிருக்கிறேன். நான் இதைச் சொல்ல qualified என்று நினைக்கிறேன். நான் மூன்று மாவட்டங்களில் (ராமனாதபுரம், கோயமுத்தூர், நெல்லை) நான்கு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். (இதை எழுதும்போது ஒரு ஒழுக்கக்கேட்டையும் எழுதுகிறேன். 7வது படிக்கும்போது என்று நினைவு. கருணாநிதி கோயமுத்தூருக்கு ஒரு விழாவுக்கு வந்தபோது, அதை அட்டெண்ட் செய்ய மாணவர்கள் சென்றால் அதற்கு பள்ளி அனுமதி தரும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள், எங்கள் பள்ளியையும் சேர்த்து)

   ஆனால் நெல்லையில் நான் கல்லூரி லெவலுக்கு வந்தபோது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலர் குடிப்பதை ஒரு தொழிலாக வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன் (80கள்ல). குடித்துவிட்டு அவர்கள் பள்ளிக்குச் செல்வதும் எனக்குப் புதிதாக இருந்தது. நான் +1 படிக்கும்போதும் கொஞ்சம் சுருதி ஏற்றிக்கொண்டு தமிழ் கற்றுக்கொடுக்க வந்த ஆசிரியரையும் தெரியும், ஆனால் வகுப்பில் சொல்லிக்கொடுப்பதில் குறையில்லை.

   நான் என் உயர்நிலைப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியராக இருந்த (அவரே என் ஹாஸ்டலில் வார்டனாகவும் இருந்தவர்) ஃபாதரை 20+ வருடங்களுக்குப் பிறகு (12+ வருடங்களுக்கு முன்னால்) அவரது இடத்தில் சந்தித்தபோது, அவர் சொன்னார்… ‘உங்க காலம் மாதிரி இல்லை இப்போ. அப்போ கொஞ்சம் கண்டிக்க முடிந்தது. ஆனால் இப்போ கண்டிப்பு என்ற ஆயுதத்தை எடுக்கவே முடியாது. அப்படிக் கண்டிக்க முனைந்தால் இந்த ஃபாதருக்கும் அந்த சிஸ்டருக்கும் இது என்று சுவர்களில் எழுதிவிடறாங்க இல்லைனா, எழுதிவச்சுட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டறாங்க’ என்றார். (இந்த ஃபாதரிடம்தான், நான் பள்ளி மாதாந்திரத் தேர்வு ஒன்றில் நான் செய்த ஒழுக்கக்கேட்டை என் மனசு கேளாமல் ஒரு வாரம் கழித்து நானே போய்ச் சொன்னேன். அவர் பிறகு அங்கு இன்னொரு கல்லூரியில் பேராசிரியராக இருந்த என் பெரியப்பாவிடம் சொல்லிவிட்டார்-FYI இந்த ஃபாதர்கள், ப்ரதர்கள் நிறையபேர் என் பெரியப்பாவிடம் கணக்கு படித்தவர்கள். )

   இப்போ உள்ள ஆசிரியர்கள் மோசம் என்று நாம சொல்லவே முடியாது. அப்போ பசங்க வளர்வதில், படிப்பதில் பெற்றோர்கள் அக்கறை காட்டினாங்க. இப்போ பெற்றோர்களுக்கு பசங்க ஒழுக்கத்தில் அவ்வளவு அக்கறை இல்லை. They don’t want to hear any complaints from school. They dont want teachers to discipline their children. நாம நம் ஆபீஸ் வேலையைப் பார்த்தோமா, டிவி பார்த்தோமா என்று இருக்காங்களே தவிர பசங்களோட கூடவே வாழறவங்க குறைந்துவிட்டார்கள். நான் காசு கொடுத்து என் பையனை சேர்த்திருக்கிறேன். நீ வெறும் கூலிக்கு மாரடிக்கிறவந்தானே என்ற அலட்சியப் போக்கு பெற்றோருக்கு இருப்பதால்தான் மாணவர்கள் மீது அதிக அக்கறை காட்டணும் என்று நினைக்கிற ஆசிரியர்களை கொஞ்சம் பின்வாங்க வைக்குது. மற்றபடி ஸ்டார் பெர்ஃபார்மரை, கலைகளில் ஆர்வம் உள்ளவர்களை இன்னும் ஊக்கப்படுத்தி அவனை மேலே வரச் செய்யணும் என்பதில் இன்றும் ஆசிரியர்கள் செயல்படறாங்க. அந்த அந்தப் பள்ளிகளும் ஆசிரியர்களை வெறும்ன ரிசல்ட் காண்பிக்க வைக்கும் மெஷின்களாகப் பார்ப்பதால் அவங்களுக்கு கூடுதல் சுமையாகிடுது. பசங்கள்ல ஒழுக்கக்கேடான பசங்களின் விகிதம் ரொம்பவே அதிகமாக ஆகிவிட்டது. ஆசிரியர்கள் மேலான நம்பிக்கை பெற்றோருக்கு அதிகம் தேவை. அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் அதிகமாக இருந்தாலும், அரசுப் பள்ளிகளிலும் பரவலாக நிறையவே இருக்கிறார்கள் என்றுதான் நான் நம்புகிறேன். கல்லூரிகளைப் பற்றி நிறையவே எழுதலாம். இதுவே அதிகம்…

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    விவரமான பின்னூட்டம் மூலம் நிறைய
    செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி.

    மனம் விட்டுப் பேசும் ஒரு இடமாக
    இது அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.