….
….
….
Zhenhua என்கிற சீன தகவல் தொழில் நிறுவனம் ஒன்று
உலகம் பூராவும், அனைத்து நாடுகளிலும் இருக்கும்
முக்கியமான நபர்களைப் பற்றிய எல்லா தனிப்பட்ட
விவரங்களையும் ரகசியமாக சேர்த்து சீனாவிலுள்ள தனது
தொடர்புக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சுமார் 10,000 (ஜனாதிபதி, பிரதமர்,
பாதுகாப்பு, உள்துறை, நிதியமைச்சர், விஞ்ஞானிகள், முக்கிய
தொழிலதிபர்கள், தனிப்பட்டசமூக அந்தஸ்து உள்ள நபர்கள்
போன்ற) முக்கியஸ்தர்களைப் பற்றிய விவரங்களை –
இந்த நிறுவனம் தனது தகவல் சேகரிப்பு வங்கியில் சேர்த்து
வைத்திருக்கிறதாம்…. இவை அனைத்தையும் சீன அரசால்
தேவைப்படுகிறபோதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதைப்பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டு
வெளிவந்திருக்கின்றன. வாசக நண்பர்களின் பார்வைக்காக
அவற்றை கீழே பதிந்திருக்கிறேன்.
படிப்படியாக,உலக நாடுகள் அனைத்தையும் தன்னுடைய
ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர சீனா செய்யும் சதித்திட்டத்தின்
ஒரு பகுதி தான் இது….
நம் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்…
சீன பொருட்களை பயன்படுத்திக்கொண்டு இருப்போர்
முடிந்தவரை அவற்றை பயன்படுத்தாமலிருக்கும்
வழியைப் பாருங்கள்….
புதிதாக மார்க்கெட்டில் கிடைக்கும் எந்த சீனப் பொருட்களையும்
வாங்காதீர்கள்….
இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்ட
பொருட்களில், நீங்கள் எதிர்பார்க்கும் தரம், விலை இல்லா
விட்டாலும் கூட –
சீனப் பொருட்களை தவிர்ப்பது ஒவ்வொரு இந்தியனின்
அடிப்படை கடமை என்பதை எப்போதும் நினைவில்
வைத்திருங்கள்.
சீனப்பொருட்களுக்கு மாற்று கண்டுபிடிப்பதில்,
விஞ்ஞானிகளும், எஞ்சினீயர்களும், உற்பத்தியாளர்களும்
மற்ற கண்டுபிடிப்பாளர்களும், முனைந்து ஈடுபடுவது
மிக மிக அவசியம்….
கீழே உள்ள விவரங்களைப் பார்க்கும்போது உங்களுக்கே
அதன் அவசியம் புரியும்…..
நமக்கு – நமது நாடும், அதன் சுதந்திரமும், பாதுகாப்பும் தான்
முக்கியம்…. தறுதலை நாடுகளுக்கு (ROGUE NATIONS ) பாடம்
புகட்டும் விஷயத்தில் நம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்வது
மிக மிக அவசியம்.
—————————————————–
…
…
…
…
…
…
…
.
——————————————————————————————————————————————-