….
….
….
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த
விவாதத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதி மட்டும் இங்கே –
(நேரம் பற்றி பயம் வேண்டாம் – அதற்காகத் தான்
குட்டி குட்டியாக வெட்டியதை தேடியெடுத்து
போடுகிறேன்….வெறும் 6 நிமிடம் மட்டுமே…)
இதில் ஆழி.செந்தில்நாதன் அவர்களின் கருத்தில்
கொஞ்சம் ஆழமான செய்தி அடங்கி இருக்கிறது.
ஓரளவு நியாயமான வாதம்…
யோசிக்கப்பட வேண்டிய விஷயம்….
கிருஷ்ணன் சொல்வது போல்,
வட இந்தியாவில் 3-ம் இல்லை; 2-ம் இல்லை –
ஒரே ஒரு மொழி – ஹிந்தி என்கிற ஒரே மொழியை மட்டுமே
தான் கற்கிறார்கள். மும்மொழித் திட்டம் என்பது
தென்னிந்தியாவுக்கு மட்டுமான வெறும் ஏமாற்றுத் திட்டம்.
…..
……
.
——————————————————————————————————————————-
ஹிந்தி தெரிந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு. அடுத்தவர்கள் ஹிந்தி கற்று கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறார்கள். எனது அலுவலகத்தில் வட இந்தியர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழலில் நான், ஹிந்தி தெரியாததனால் பல தர்ம சங்கடங்களை அனுபவிகிறேன்.கற்று கொள்ளும் ஆர்வம் இவர்கள் கூறுவதுபோல் அவ்வளவு எளிதாக எனக்கு இல்லை.மூன்று மாதத்தில் தேவையானால் ஒரு மொழியை கற்று கொண்டு விடலாம் என்பது நிதர்சனமான உண்மை கிடையாது.இங்கு எல்லாமே அரசியல்.கற்று கொள்ள மாணவர்கள் தயாராக இருந்தாலும் அரசியல் வாதிகள் நம்மை விடமாட்டார்கள்.ஆனால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் ஹிந்தி கற்று கொண்டு, ஹிந்தி வேண்டாம் போடா என்று நம்மையே ஏமாற்றுகிறார்கள்.
இங்கு ஹிந்தி திணிப்பு என்று கூவுபவர்களின் பிள்ளைகளுக்கு நிச்சயம் தமிழ் எழுத படிக்க தெரியாது. ஆனால் அவர்களே தங்களின் பிள்ளைகளின் நிலைகளுக்கு தலை குனியாமல் , கடைசியில் மத்திய அரசாங்கத்தினால் தான் தமிழ் அழிந்து கொண்டு வருகிறது என்று கதறுகிறார்கள்.
மோடி எதிர்ப்பு அரசியல் நம்மை இன்னும் என்ன என்ன நிலைகளுக்கு கொண்டு செல்ல போகிறதோ?
உங்களுக்கு இந்தப் பிரச்சனை என்னன்னு புரியலை. இது உணர்வு பூர்வமானது. நமக்கு முதல்ல நம் தாய்மொழி முக்கியம், ஹிந்திக் காரர்களுக்கு இருப்பதுபோல. அவங்க எல்லா பரீட்சைகளையும் ஹிந்தியில், அதாவது அவங்க தாய் மொழில எழுதுவாங்க. ஆனா நாம தமிழ்ல எழுத வாய்ப்பு கிடையாது. ஹிந்தி வேண்டாம் என்று ஆங்கிலம் படிப்பதனால நமக்கு எவ்வளவு அட்வாண்டேஜ் தெரியுமா? தமிழகத்தை விட்டு வெளில போய் (மாநிலம், நாடுகள்) நம்மால ஆங்கிலத்தின் துணைகொண்டு பிழைத்துக்கொள்ள முடியும். 50ஏ வாக்கியங்கள் தெரிந்துகொண்டு (எந்த மொழியிலும்) நம்மால survive பண்ண முடியும்.
இந்த திமுக அரசியல்வாதி அல்லக்கைகள் சொல்வதனால் நாம ஹிந்தியை எதிர்க்கவேண்டாம். நாளைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும்னா சொந்த அம்மாவையே, மனநிலை சரியில்லாதவங்க என்று சொல்றவங்க அவங்க. அரசியல்வாதிகள் சொல்வதால் நாம ஹிந்தியை எதிர்க்கவேண்டாம். அவங்க எல்லோரும் ஹிந்தி கத்துக்கிட்டு காசைச் சுருட்டறவங்க. மத்திய அரசுகள் ஏன் ஹிந்தியை நம் தலையில் கட்ட நினைக்கறாங்க? அவங்களால நம்ம மொழியை கத்துக்க முடியலை, தங்கள் கருத்தை நமக்கு communicate செய்ய முடியலை, அரசியல் ரீதியாக ஹிந்தியை நம் தலையில் கட்டப் பார்க்கிறாங்க. அதனால நம் தாய் மொழிக்காக நாம் எல்லோரும் ஹிந்தி மொழியை (அதாவது மத்திய அரசு நம் மீது திணிப்பதை) எதிர்க்கவேண்டும்.
நாம, தமிழர்கள் கட்டாயம் ஹிந்தி நுழைவை எதிர்க்கணும். உங்களுக்கு சரித்திரம் தெரியாது. சுதந்திரம் கிடைக்கும் சமயத்தில், தமிழை தேசிய மொழியா அறிவிக்கலாமே என்று வட இந்திய பிரபலஸ்தர் நேரு.. இந்தக் குழுல பேசினபோதுதான் ஹிந்திக்காரங்க சுதாரிச்சுக்கிட்டு, அதனையும் ஆங்கிலத்தையும் தேசிய மொழியா அங்கீகரித்தார்கள். அப்போ நாம சுதாரிச்சுக்கலை. இந்தியாவின் தொன்மொழிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழ், இரண்டாவது சமஸ்கிருதம். தமிழ் தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொண்டு வந்துள்ளது. சமஸ்கிருதம் பேச்சு மொழியாக பரவலாக எப்போதுமே இருந்ததில்லை. உலகின் தொன் மொழிகளில் நம் தமிழ்தான் இன்றும் வளர்ந்துகொண்டிருக்கும் மொழி. தமிழ் மொழி என்று சொல்லும்போதே நம் மனசு பூரிக்கணும், நாம் பெரிய பாரம்பர்யத்தைச் சேர்ந்தவங்க என்ற பெருமிதம் வேணும்.
///மூன்று மாதத்தில் தேவையானால் ஒரு மொழியை கற்று கொண்டு விடலாம் என்பது நிதர்சனமான உண்மை கிடையாது// – இதெல்லாம் ஒரு வாதமா? பெரிய வேலைல, கனவிலும் கிடைக்காத சம்பளத்துல இருக்கீங்க. 3 மாசத்துல ஆஃப்ரிகன் மொழி பேசச் தெரிந்தா வேலை, இல்லைனா நாங்க வேற ஆளைப் பார்த்துக்கறோம்னு சொன்னா, நம்மால 3 மாதமென்ன ஒரு மாதத்துலயே ஒரு மொழியைக் கத்துக்க முடியும். நான் சொல்வதை நம்புங்க. நான் இருந்த ஊர்ல, நம்ம ஊர் கைநாட்டுப் பசங்கள்லாம் (உதாரணத்துக்குச் சொல்றேன்) அரபிக் மொழில பேசறதைப் பார்த்திருக்கேன் (பழங்கள் காய்கறி விற்கிறவங்க, கடைகள்ல வேலை செய்யறவங்க). ஆனா நான் 20 வருடங்களுக்கு மேல் அரபுமொழிக் காரர்களுடன் வேலை பார்த்தும் அவங்க மொழியைக் கத்துக்கலை தேவை என்றால் எதையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.
புதியவன்,
இந்த விஷயத்தில் –
நீங்கள் சொல்வது மிகச்சரி.
அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம்
அவர்கள் சுயநலம் கருதியே.
அவர்கள் -ஆதாயம் கிடைக்குமென்றால்
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஹிந்தி மொழி திணிப்பு குறித்து
நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகளை
நான் முற்றிலுமாக ஏற்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
………..
உன் வீட்டிற்குள் வந்து அவன் உன் மொழியில் பேச மாட்டான்,
நீ தான் அவன் மொழியில் பேச வேண்டும். இது எந்தவிதமான
சர்வாதிகார போக்கு.
சராசரி மனிதன் என்று பெயர்வைத்துக்கொண்டு
இங்கு உலவும் பாஜக வெறியர் நீர் என்பது
உங்கள் பழைய பின்னூட்டங்கள் மூலம்
ஏற்கெனவே தெரிந்த விஷயம் தான்.
//எனது அலுவலகத்தில் வட இந்தியர்களுடன்
பணியாற்ற வேண்டிய சூழலில் நான், ஹிந்தி
தெரியாததனால் பல தர்ம சங்கடங்களை
அனுபவிகிறேன்.கற்று கொள்ளும் ஆர்வம்
இவர்கள் கூறுவதுபோல் அவ்வளவு எளிதாக
எனக்கு இல்லை. //
இந்த மாதிரி கதைகளை எல்லாம் இங்கு
விட வேண்டாம் பாஜக பக்தரே.இங்கே
உலவும் ஜந்து தான் என்பது எளிதாகவே
புரிகிறது.
7 கழுதை வயசான ஜென்மங்களுக்கே
ஹிந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை
என்றால், பச்சிளம்பாலகர்களின் தலையில்
அதை ஏன் சுமத்த துடிப்பவர்களுக்கெல்லம்
ஜால்ரா போடுகிறீர் ?
அய்யா,
முதலில் உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் சரளமாக எழுத படிக்க தெரியுமா என்பதை தாங்கள் என்றாவது கவனித்ததுண்டா?
தமிழை வளர்க்க முதலில் அவர்களுக்கு தமிழை கற்று கொடுத்து விட்டு, பிறகு மற்றவர்களால்தான் தமிழ் அழிகிறது என்று கொடிபிடிப்போம்.உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு முதலில் தமிழை கற்று கொடுத்தாலே போதுமே, தமிழை அழிக்க முடியாது
நீங்கள் எந்த கூட்டத்திற்கு ஜால்றா அடிக்கிறீர்களோ அந்த கூட்டத்திற்கு , அதன் தலைவனுக்கு சரளமாக ஹிந்தி தெரியும். அவன் போட்டு கொண்டுள்ள “ஹிந்தி தெரியாது போடா ” வாசகம் பொறித்த பனியனை கண்டு ஏமாறும் சாமானியன் அல்ல நான் .
எனது அலுவலகத்திலும் உங்களை போன்று தமிழ் அழிகிறது என்று முதலை கண்ணீர் வடிப்பவர்களின் குழந்தைகளை கவனித்திருக்கிறேன் .அவர்கள் யாவருக்கும் தமிழ் எழுத படிக்க தெரியாது. CBSE சிலபஸில் படிப்பவர்கள்.என்னை தமிழ் துரோகி என்று வர்ணிப்பார்கள், இந்த நவீன தமிழர்கள்.
போய்யா போ பாஜக வெறியா
முதலில் இந்தி திணிப்பு எதிர்ப்பை முதலில் உங்கள் குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளிலிருந்து இருந்து ஆரம்பிக்கலாமே? உங்கள் குழந்தைகள் இந்தி கற்பதை தடை செய்து நமது தாய்தமிழை காக்கலாமே.
ஏன் போயும் போயும் அரசாங்க பள்ளி மாணவர்களின் மீது மட்டும் ஏன் இந்த முதலை கண்ணீர் வடிப்பு
அவர்களுக்கு வேறு மொழி அவசிய பட்டால் கற்று கொள்ளுகிறார்கள் இல்லையெனில் தூர ஏறிய போகிறார்கள். நாம் ஏன் நடுவில் பொங்கி எழ வேண்டும் .
கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் ,பிஜேபி வெறியன்,சங்கீ ,தமிழின துரோகி……. .
மொதல்ல “சராசரி மனிதன்”
அப்புறம் “சாமானியன்”
எதுக்கு இத்தனை மாறுவேஷம் ?
அதுக்கு நேரடியா பிஜேபி ஆதரவாளன்’னு
பேரு வெச்சுண்டே வாதத்துக்கு
வரலாமே ?
வெக்கமா இருக்கா ?
தகுந்த கருத்தை முன்வைத்தால் , அதை எல்லோரும் ஏற்று கொள்ளுவார்கள்.ஆனால் தாங்களோ அதை விட்டு விட்டு…தங்கள் கருத்தை முன் வைப்பவர்களுக்கு பட்ட பெயரை சூட்டி மகிழும் உயர்ந்த அறிவு ஜீவியாகவே திகழ்கிறீர்கள்.அதற்கு பதில், தாங்கள் உங்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கலாமே.
என்ன செய்வது, ஹிந்தி படிக்கும் தங்களது குழந்தைகளையோ, பேரன்களோ தடுக்கிறார்களோ?
//எனது அலுவலகத்தில் வட இந்தியர்களுடன் பணியாற்ற வேண்டிய சூழலில் நான், ஹிந்தி தெரியாததனால் பல தர்ம சங்கடங்களை அனுபவிகிறேன்.//
Semma comedy sir…
இல்லை எழில். இதில் உண்மை இருக்கிறது. நானும் அத்தகைய நிகழ்வுகளைக் கடந்துவந்திருக்கிறேன் (வெளிநாட்டில்). என் boss ஹிந்தி பழமொழியை எனக்கு மெயிலில் அனுப்பினார் (ஒரு நிகழ்வு சம்பந்தமா). அதை என் முன்னாள் bossக்கும் காப்பி பண்ணியிருந்தார். எனக்கு அர்த்தம் புரியவில்லை என்று பதில் எழுதினேன், பிறகு அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இதுபோல பல meetingகளில் சிலர் ஹிந்தியில் பேசிக்கொள்வர், எனக்கு முழுவதுமாகப் புரியாது. சில நேரங்களில் இன்னொரு boss என்னிடம் தமிழில் பேசுவார், மற்றவர்களுக்குப் புரியாது. சில நேரங்களில் அரபிக்காரன் ஹிந்தில பேசுவான், எனக்குத் தெரியாது. என்ன, இந்தியன் உனக்கு ஹிந்தி தெரியாதா என்று கேட்கும்போது, நாங்க, மதராசிகள் ஹிந்தி படிப்பதில்லை, எங்கள் மொழி தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் தெரியும் என்பேன். இதையெல்லாம் கடந்துதான் வரணும்.
ஆனால் அதற்கு தீர்வு ஹிந்தியை பள்ளிகளில் சொல்லித்தருவதல்ல. நாளைக்கு ஆப்பிரிக்காவில் வேலை பார்க்க நேர்ந்தாலோ அல்லது ஃப்ரான்ஸில் வேலை பார்க்க நேரிட்டாலோ என்ன செய்வோம்? வேற வழியில்லைனா அந்த மொழியைக் கத்துப்போம். அதுதான் தீர்வு.
கண்டிப்பா மூன்று மொழிக் கொள்கை வேணும்னா, தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் அல்லது ஃப்ரெஞ்ச் அல்லது மாண்டரின், தகலாக். இதைப் படித்தால் நமக்கு உபயோகம், வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும். இந்தியாவில் மட்டும் வேலை செய்யப்போகிறான் என்றால் மலையாளம் கத்துக்கிட்டால் உபயோகம். ஹிந்தி தெரிந்துகொள்வதால் உபயோகம் இல்லை. இந்த மூன்றாவது மொழியுமே பேச, எழுதத் தெரிந்தால் போதும். அந்த மொழி இலக்கியங்கள் என்றெல்லாம் நீநீள வேண்டாம். அந்த ஊர்க்காரங்களுக்கே அவ்வளவுதான் தெரியும்.
நம்ம எம்.பிக்கள், கேண்டீனில் இலவச இட்லி வடை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் காராஜ் முதல்கொண்டு வாடகைக்கு விடலாம் என்று செயல்படுவதை நிறுத்திவிட்டு, எந்த அரசுத் திட்டமும், தமிழிலும் இருக்கவேண்டும், யோஜ்னா போஜ்னா என்றெல்லாம் பெயர் கொண்டு எந்தத் திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று போரிடணும். ஆனா இவங்க பெரும்பாலானர் கோர்ட் கேசில் மாட்டிக்கொண்டிருப்பதாலும் பல்வேறு மாநில வியாபாரத்தில் கொழிப்பதாலும், இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேச மாட்டாங்க. (ஒரு தடவை எதேச்சையாக சன் குழும தொலைக்காட்சிகளைப் பார்க்க நேரிட்டது. தமிழகத்தில், ‘தமிழ்தான் வேணும், காவிரி வரணும்’ என்றெல்லாம் ஆவேச விவாதம், விவாதத்தை நடத்துபவரும் அப்படிப் பேசறார், அதே சமயத்தில் கன்னட சேனல்ல-அவங்களோடதுதான், ‘கன்னடம் தமிழைவிட உயர்ந்தது, காவிரி அனுப்பக்கூடாது’ என்று விவாதம் பண்ணறான். இவங்க கொள்கையெல்லாம் ‘கொள்ளை’ ஒன்றுதான்.
புதியவன் சார், என்னுடைய அலுவலகத்திலும் இதே பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறேன், கொண்டும் இருக்கிறேன். ஆரம்பத்தில் பெரிய பிரச்சனையாகத்தான் நானும் பார்த்தேன். ஆனால் அதன் பிறகு என்னை மாற்றிக்கொண்டேன். அவன் இந்தியில் பேசினால், எனக்கு இந்தி தெரியாது எனவே ஆங்கிலத்தில் கூறுமாறு கூறுவேன். என்னுடைய தாழ்வுமனப்பான்மையை நானே மாற்றிக்கொண்டேன். இப்பொழுது ஓரளவுக்கு அலுவலகத்தில் பேசும் இந்தி புரியும் ஏனென்றால் கண்டிப்பாக ஏதாவது ஆங்கில வார்த்தையை சேர்த்தே பேசுவார்கள்.
//கண்டிப்பா மூன்று மொழிக் கொள்கை வேணும்னா, தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் அல்லது ஃப்ரெஞ்ச்// உங்களோட பல கருத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிச்சிருக்கேன். ஆனால் இதுக்கு கண்டிப்பா ஒதுக்குறேன். இந்த உலகம் எப்பவோ ஒரே குடியின் கீழ் இயங்கும் கிராமமா மாறிடுச்சு. இந்திய பிடிச்சு தொங்குறதுக்குப்பதிலா, இந்த மொழிகள்ல எதாவது ஒன்னு படிச்சிட்டா இன்னும் வேலை வாய்ப்புகள் சுலபம். மொழியை கத்துக்கிற நம்மளோட முக்கிய குறிக்கோளே வேலைக்காகத்தானே..
அதே மாதிரி இந்தியை தாய்மொழியாக கொண்டிராதவர்கள் கூட இதற்கு சொம்படிக்கப்பார்க்கையில் ஒரு வித ஏளனமே மிஞ்சுகிறது. எனக்குத் தெரிந்தே நிறைய வடஇந்தியர்கள் தங்கள் தாய்மொழியினை விடுத்து இந்தியில் பேசுகிறார்கள். இதனால் விரைவில் அவர்கள் மொழி, அதை சார்ந்த கலாச்சாரம் எல்லாமே குறுகிப்போகும் என்று உணராத மூடர்கள்.
EZHIL ,உங்கள் பதிவிலிருந்து என்னால் புரிந்து கொள்ளமுடிவது, இன்னும் தாங்கள் தமிழ்நாடு எல்லையை கூட தாண்டாத, குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக்கொண்டிருப்பவர் என்று.நான் வேலை பார்ப்பது ஒரு பன்னாட்டு நிருவனத்திருக்காக.எனது மேனேஜர் மும்பையை சார்ந்தவர்.எனது குழு உறுப்பினர்கள் பல மாநிலங்களில் உள்ள கிளைகளில் வேலை செய்பவர்கள்.ஒவ்வொருவரின் தாயமொழியும் வேறு வேறு.ஆனாலும் அனைவரும் இந்தியில் சரளமாக உரையாடுபவர்கள். தினமும் நடை பெரும் போன் கால்களில் நான் பல வித தர்மசங்கடங்களை அனுபவிக்கிறேன்.அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் பெரும்பாலும் ஹிந்தியே.ஒருவேளை என்னிடம் மட்டும் ஏதாவது கேள்வி எழுப்பினால் மட்டும் ஆங்கிலத்தை உபயோகப்படுத்துவார்கள்.மற்றபடி எனக்கு நிலை பரிதாபம் தான் .
கிணற்று தவளையாக இதுவரை தமிழ் நாட்டு எல்லையையே தாண்டிராத உங்களை போன்ற அறிவாளர்களுக்கு இது புரிவது கடினமே.
சாமானியன் அவர்களுக்கு, உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துகள் சார். நானும் அதே பன்னாட்டு நிறுவனத்தில் தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை மூன்று நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன். இதே பிரச்சனை எனக்கும் இருந்தது/இருக்கின்றது. அவர்கள் பேசும்பொழுது எனக்கு தேவையானவற்றை அவர்களிடம் ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டுக்கொள்வேன். அனைத்து மொழிக்காரர்களும் இருக்கும் போது, இந்தியில் தான் பேசுவேன் என்று நாகரீகம் தெரியாத அவர்கள் பேசுவதற்கு நான் எதற்கு கவலைப்பட/வெட்கப்பட/தாழ்வு மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் ? அவர்கள் அவ்வாறு பேசினால், கூட இருக்கும் தமிழர்களிடம் தமிழிலேயே பேசுவேன்.
நீங்கள் வடஇந்தியாவில் இருந்தால் உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன், நீங்கள் தினமும் மற்றவர்களிடம் உரையாட சிரமப்படுவீர்கள் என்பதால். நான் வேலை சேர்ந்த புதிதில் இதைப்பார்த்து வேறு மாதிரி செய்தேன். என் தம்பியை இந்தி படிக்குமாறு கூறினேன். அவனும் 2 வகுப்புகள் முடித்தான். ஆனால் அவன் என் அளவுக்குக்கூட இந்தி பேசமாட்டான். என் அளவு என்பது சுருக்கமாகக் கூறினால், வாசலில் நிற்கும் காவலர்களிடமும் (வடஇந்திய செக்யூரிட்டி) வழி கேட்பது, கடைகளில் இருக்கும் இந்திவாலாக்களிடமும் பொருள் கேட்பது அவ்வளவுதான்.
உங்களது மேலதிக தகவலுக்கு, நான் இருப்பது கர்நாடகத்தில். என் தினசரி தேவைக்கு கன்னடமும், இவர்களில் உரையாடலில் இருந்து இந்தியும் தேவையான அளவுக்கு நான் கற்றுக்கொண்டேன். அதற்குமேல் தெரிந்துகொள்ள தேவை வரும்பொழுது கண்டிப்பாக கற்பேன்.
மொழிகளில் உயர்வு என்றோ தாழ்வு என்றோ கிடையாது .
மொழி கற்றுக்கொள்வது அவசியம் .
பழக , வேலை பார்க்க ஆங்கிலமோ இந்தியோ தெரிய வேண்டும் .
என்னை பொறுத்தவரையில் இந்தியாவின் தேசிய மொழி
மலையாளம் ! எங்கே போனாலும் ,குறிப்பாக site ல் !
துபாய் போனாலும் மலையாளம் தெரிந்தால் போதும் /
வட இந்தியாவில் நிறைய பேர் இந்தி பேசுகிறார்கள் என்பது
உண்மைதான் .
அதில் பெரும்பாலோர்க்கு இந்தி எழுத ,படிக்க தெரியாது .
ராஜஸ்தான் , ம பி , பீகார், ஜார்கன்ட் குஜராத் , பெங்கால் , ஒரிசா
மகாராஷ்டிரா , பஞ்சாப் ,அசாம் போன்ற மாநிலங்களில்
உள்ளூர் வாசிகள் பேசுவது இந்தி கிடையாது .
ஓரளவு படித்தவர்கள் மட்டுமே இந்தி பேசுவார்கள் .
இந்தி தெரிந்தால் “படிச்ச ஆள் ” என்று அர்த்தம் .
சிற்றூர்களில் போனால் இந்தி எடுபடாது .
இந்தி பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றது ;
அதுவும் ஓரளவு பெரிய ஊர்களில் மட்டுமே !
இந்தி தேசிய மொழி என்றும் .ஒருமைப்பாட்டிற்கு
இந்தி அவசியம் என்றும் கதை விடுகிறார்கள் .
முதலில் இந்தி என்று ஒரு மொழியே கிடையாது .
இந்தியா பிரிவினை ஆக இந்தி ஒரு காரணம் .
இந்துஸ்தானி ஒன்றுதான் இருந்தது .
அதை முஸ்லீம்கள் பேசும் மொழி என்று
முத்திரை குத்தி , இந்தி உருவாக்கப்பட்டது .
சந்திப்பதற்கு முலாகாத் என்று சொல்வார்கள் .
அது உருதுவாம் – எனவே சம்பர்க் என
குறிப்பாக RSS காரர்கள் சொல்கிறார்கள் .
அரசியல் அமைப்பு சட்டம் வரைந்த போது
இதை பற்றி விவாதம் நடந்தது .
இந்தி வந்தால் மறுபடியும் தேசம் துண்டாகும்
என T T K சொன்னார் .
இந்தி மொழி இலக்கண நூல் 1950ல் வெளிவந்தது .
அதற்கு முன் கிடையாது .
எனக்கு விவரம் புரிந்த வரையில், வெகு வருடங்களுக்கு முன்பாக, (30,40 வருடங்கள்) ஹிந்தி இந்தியா முழுவதும் திணிக்க பட்டது என்பது .உண்மையே.மத்திய அரசாங்கம் சார்ந்த அணைத்து சேவை பிரிவுகளிலும் ஹிந்தி மட்டுமே பயன்படுத்த பட்டது.உதாரணமாக போஸ்ட் ஆபீஸ்களில் உபயோகப்படுத்தப்பட்ட அணைத்து விண்ணப்பங்களும் ஹிந்தியில் தான் இருக்கும். மணி ஆர்டர் பார்ம் கூட முழுவதும் ஹிந்தியில் தான் இருக்கும்.
ரயில்வே பார்ம் அனைத்தும் ஹிந்தியிலே இருக்கும். மத்திய நெடுஞ்சாலை, ரயில்வே ஸ்டேஷன் பெயர்கள் முழுவதும் உள்ளூர் மொழிகள் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டு, முழுக்க முழுக்க ஹிந்தியிலே எழுத பட்டிருக்கும்.இந்த திணிப்புதான் தமிழகத்தில் கண்டிக்க பட்டு,இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாக தமிழகத்தில் உயிர்பெற்றது. பிறகு ஓரளவு(ஓரளவு மட்டுமே,முழுவதுமாக இன்னும் இல்லை ) மத்திய அரசாங்கம் இறங்கி வந்து, உள்ளூர் மொழி, மற்றும் ஆங்கிலமும் இடம் பெரும் வகையில் வசதி செய்தது.
ஆனால் திராவிட கட்சியினர் இதை வைத்து கடைசியில் பள்ளிகளில் ,வேற்று மொழி கற்கும் வாய்ப்பு உள்ள நிலையை கெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.கற்கும் வாய்ப்பு என்பது வேறு, திணிப்பு என்பது வேறு.ஆனால் பாவம் மக்கள் வித்தியாசம் தெரியாத வகையில் குழப்பப்பட்டுள்ளனர்.
பிஜேபி தான் இந்தி திணிப்பு செயகிறது என்னும் வகையில் பிரச்சாரங்கள் முடுக்க பட்டுள்ளன.ஆனால் வரலாறு வேறு.
சார், நீங்க இங்க வந்துடீங்களா… எங்க ஏரியாவில் வீடுகள்ல ‘இங்கு இந்தி கற்றுக்கொடுக்கப்படும்’னு போர்ட் வச்சிருப்பாங்க. அங்க யாரும் இதுவரைக்கும் போய் நீங்க சொல்லிக்கொடுக்கக்கூடாதுனு சொன்னதில்லை. இந்தி பிரச்சார சபானு ஒன்னு இருக்கு. நீங்க சொல்றபடி பார்த்தா இந்நேரம் அது இருக்கக்கூடாது.
பள்ளிகள்ல கற்கும் வாய்ப்பை கெடுத்துட்டாங்கனு சொல்லுறீங்க. தமிழ்நாட்டுல எத்தனையோ பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித்தர்றாங்க. இல்லைனு சொல்லுவீங்களா ? உடனே அரசுப்பள்ளில சொல்லித்தரலைனு சொல்லுவீங்க. தன் மாநிலத்தில, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்கிற பள்ளிகள்ல எதுக்கு சார் வேற ஒரு மொழியை சொல்லித்தரனும் ? உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் சொல்லித்தர்றாங்களே. அது வேண்டாம்னு சொல்ல வர்றீங்களா? உங்களுக்கு வேலை கிடைச்சது உங்ககிட்ட இருக்கிற திறமை மற்றும் ஆங்கில அறிவுனாலதான், ‘இந்தி’யால கிடையாது. இதையாவது ஒத்துக்குவீங்களா?
இத்தனை நாள் இதே இந்தியாவில், எந்த அரசும் இந்தி தான் நம்மளை ஒன்றிணைக்கிறதுனு பகிரங்கமா சொல்லல. ஆனால் பாஜக சொல்லுது. சரி அகில இந்திய தலைமை தான் அப்படி சொல்லுதுனு பார்த்தா, பாஜக கட்சிக்காரனுங்க என்னமோ இந்திக்காரனுங்களுக்கு பிறந்தா மாதிரி பேசுறாங்க. அவங்க பருப்பு வேகலைன்னா உடனே, தாய்மொழியுடன் இந்தியையும் சேர்த்து வளங்கனு சொல்றாங்க. அடுத்தவன் பிள்ளையை நாம எதுக்கு நம்ம காசுல வளக்கணும்? சமஸ்கிருதத்தை ஆராய்ச்சி பண்ண அரசு செலவு பண்ணுது, அதுவும் உங்ககிட்ட, என்கிட்டே இருந்து வாங்கின வரிப்பணத்தில். அதால உங்களுக்கும், எனக்கும் என்ன பிரயோஜனம் ?
கற்கும் வாய்ப்பை யாரும் தடுக்கவில்லை. திணிப்பைத்தான் தடுக்கணும்னு சொல்றாங்க, அது பாஜகவா இருந்தாலும் சரி காங்கிரசா இருந்தாலும் சரி.
மெய்ப்பொருள்,
நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Ezhil – SUPER
// பாஜக கட்சிக்காரனுங்க என்னமோ
இந்திக்காரனுங்களுக்கு பிறந்தா மாதிரி
பேசுறாங்க.
அவங்க பருப்பு வேகலைன்னா
உடனே, தாய்மொழியுடன் இந்தியையும்
சேர்த்து வளங்கனு சொல்றாங்க. //
// இந்தியாவில், எந்த அரசும் இந்தி தான்
நம்மளை ஒன்றிணைக்கிறதுனு பகிரங்கமா
சொல்லல. ஆனால் பாஜக சொல்லுது. //
appadi aani adinga antha moorkka mandaila.
GOPI அவர்கள் ,
வெளிப்படுத்தும் கோபத்தை பார்த்தால் , அது ஹிந்தி மீது உள்ள கோபம் போல் இல்லையே.பிஜேபியின் மீது உள்ள கோபமாகவே தெரிகிறது.
2010 அன்று, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள போது நமது ப.சிதம்பரம் அவர்கள் ஹிந்தி நாள் அன்று, ஹிந்தியை அனைவரும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவேண்டும் என்று கூறிய பொழுது நமது தமிழ் காவலர்கள் அமைதியாக தானே இருந்தார்கள்.
ஒருவேளை பிஜேபியினர் ஹிந்தியை இனிமேல் யாவரும் கற்றுக்கொள்ள கூடாது என்று கூறியிருக்கலாம்.
அப்பொழுதான் நமது தமிழ் காவலர்கள் ஹிந்தி கற்பேன் என்று போறட்டம் நடத்தியிருப்பார்கள்.
லூசை லூசுன்னும் சொல்லலாம் –
——————- ன்னும் சொல்லலாம்.
GOPI,
எனக்கு தங்கள் நிலை மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது.
இது போல் பட்டங்கள் மட்டும் கொடுத்து கொண்டே இருந்தால் , இந்த உலகத்தில் எந்த மாற்றமும் நிகழாது.
உங்கள் கோபம் தான் என்ன, பிஜேபி மீதா அல்லது ஹிந்தியின் மீதா?
எனக்கு புரிந்த வரையில் பிஜேபி மீதுதான் மிகு கோபம் போல் உள்ளது. அடுத்த 50 வருடம் வரை உங்கள் நிலை மேலும் பரிதாபம் தான்.
// இது போல் பட்டங்கள் மட்டும் கொடுத்து
கொண்டே இருந்தால் //
அப்ப இது உங்களுக்கு தான் என்கிறீர்களா ?
மொழி கற்றுக் கொள்வது என்றுமே அவசியம் .
தேவைக்கு ஏற்ப மொழி !
நாமக்கல்லில் லாரி ஓட்டுபவர்கள் அதிகம் . படிப்பு கிடையாது .
அவர்கள் சரளமாக மூன்று நான்கு மொழி பேசுவார்கள் .
நடிகை குஷ்பு பஞ்சாபி , இந்தி , மராத்தி , ஆங்கிலம் ,
தமிழ் , தெலுங்கு சரளமாக பேசுகிறார் .
இந்தியாவில் ஆங்கிலம் எழுத்து மொழியாக உள்ளது .
அலுவலக வேலை பெரும்பாலும் ஆங்கிலமே !
ஆங்கிலம் சரளமாக பேசுபவர்கள் அதிகம் கிடையாது .
ஆனால் ஆங்கிலத்தில் FORM இருந்தால்
எல்லாருக்கும் புரியும் . ஒரு மாநிலம் விட்டு
வேறு மாநிலம் போனாலும் ஆங்கிலத்தில்
இருந்தால் அதை படித்து விடுவார்கள் .
உ -ம் ஆதார் அட்டையில் ஆங்கிலத்தில் இருப்பதால்
எல்லாரும் ஏற்று கொள்கிறார்கள் !
ஒரியா மொழியில் மட்டும் ஆதார் அட்டை இருந்தால்
வேறு மாநிலத்தில் செல்லாது .
இப்போது இந்தி படித்தால் மட்டுமே மத்திய அரசு
வேலை கிடைக்கும் என்று வருகின்றது .
இதே போல் போனால் உ பி காரர்கள் மட்டுமே
வேலைக்கு எடுக்கப்படுவார்கள்
இந்தி திணிப்பு இதனாலேயே எதிர்க்க நேர்கிறது .
மாநில உரிமைகள் பறி போகும் என்று சொல்வது இதனால்தான் .
ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி என்று
ஜோதியில் ஐக்கியம் ஆகி etc etc
இந்தி தெரியாதவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் !