உலகம் சீனாவை எப்படி, எப்போது தண்டிக்கப்போகிறது….?

….
….

……………………………………………………………………………………………………………………………………..

.

…………………………………………………

.
உலக நாடுகள் அத்தனையுமே மைனஸ் ஜிடிபி-யில்
இருக்கும்போது,

முதல் முதலாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட
சீனா மட்டும் ப்ளஸ் 3 ஜிடிபி-யில்
இருக்கும் மாயம் என்ன …?

-என்பதை உலக நாடுகள்
ஏன் இன்னமும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை….?

இன்று அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஒரு
சீன பெண் மருத்துவ விஞ்ஞானி கொரோனா வைரஸ்
சீனாவில், வூஹான் ஆய்வகத்தில் தான் செயற்கையாக
தயாரிக்கப்பட்டது என்றும் தன்னிடம் அதற்கான
ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறர்….

குறைந்த பட்சம் அமெரிக்கா-வாவது இதை தீவிரமாக
முன்கொண்டு செல்லும் என்று நம்புவோம்.

உலக மக்கள் அத்தனை பேரையும் கடுமையாக
வதைத்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களையும்
பலி வாங்கி இருக்கும் இந்த வைரசை செயற்கையாக
உருவாக்கி, அனைத்து நாடுகளுக்கும் பரவ விட்டிருக்கும்
சீனா மீது உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து
மிகக்கடுமையான நடவடிக்கைகளையும், பொருளாதார
முடக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

பல நாடுகள் தங்கள் சொந்த பொருளாதார நலன் கருதி,
சீனாவுடன் இன்னமும் உறவு வைத்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் பல சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருட்களை நம்பி இருக்கின்றன…. இந்தப்போக்கு
மாற வேண்டும்…. இறக்குமதிக்கு மாற்று ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும்.. சீனா கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
என்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்திற்கும் சீனாவை நஷ்ட ஈடு
கொடுக்க வைக்க வேண்டும். முதலாவது மற்றும், 2-ம் உலகப்போரில்
நஷ்ட ஈடு கொடுக்க நிர்பந்தித்து தண்டனை விதித்த முன்னுதாரணங்கள் ஏற்கெனவே இருக்கின்றன.

உலக மகா அயோக்கிய நாடு(Rougue Nation) சீன அரசு.
அதை தண்டிக்க உலக நாடுகள் விரைவாகவும்,
தீவிரமாகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தப்பியோடி வந்த பெண் விஞ்ஞானி சொல்வதை எந்த அளவிற்கு
சீரியசாக எடுத்துக் கொள்ள முடியும் என்று யோசிப்பவர்கள் –

உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு,
லட்சக்கணக்கில் உயிர்களை பலி கொடுத்தும், வேலையின்மையாலும், பொருளாதாரச் சீரழிவாலும் தவிக்கும்போது –

சீனா மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல்,
பொருளாதார வசதிகளோடு,
ஜிடிபி வளர்ச்சியோடு, இன்னமும் ஏற்றுமதிகளைத்
தொடர்ந்து வருவது எப்படி என்றும் யோசித்துப் பார்த்தால் –
சீனா ஒரு ROGUE என்பதில் எந்தவித சந்தேகமும் ஏற்படாது.

சம்பந்தப்பட்ட செய்தி கீழே –
https://www.dinamalar.com/news_detail.asp?id=2613674

————————–

கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்
தயாரிக்கப்பட்டது உண்மை: சீன வைராலஜிஸ்ட் டாக்டர்
செப் 14, 2020
————

….

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்
தயாரிக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் டாக்டர்
லி-மெங் யான் (Dr. Li-Meng Yan) திடுக்கிடும் தகவலை
வெளியிட்டுள்ளார்.

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா
வைரஸ் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கான மக்களை
பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால்
உயிரிழந்தனர். இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில்
செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது எனவும்,
வேண்டுமென்றே சீனா பரவவிட்டதாகவும் அமெரிக்கா
தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதற்கு சீனா தரப்பில் மறுப்பும்
தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவை சேர்ந்த வைராலஜிஸ்ட்டான
டாக்டர் லி-மெங் யான் (Li-Meng Yan), கொரோனா வைரஸ்,
வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான
விஞ்ஞான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்
கூறியதாவது: கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்
தயாரிக்கப்பட்டது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் தன்னிடம்
இருக்கிறது. கொரோனா பதிவாகியபோது உலக சுகாதார
அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. உலகம்
எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை அறிந்திருந்தாலும்
சீன அதிகாரிகள் எனது எச்சரிக்கைகளை புறக்கணித்தனர்.

இந்த வைரஸ் இயற்கையிலிருந்து வந்ததல்ல. உள்ளூர்
மருத்துவர்கள் மற்றும் சில விஞ்ஞானிகள் மூலமாக இது
தயாரிக்கப்பட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

SARS CoV-2 ஒரு உயர் விகாரி வைரஸ். இதை யாரும்
கட்டுப்படுத்தாவிட்டால் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த ஆபத்து குறித்து உலகிற்கு தெரியப்படுத்த
முயற்சிக்கையில், சீன அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தினர்.
இதன் காரணமாக நான் சீனாவை விட்டு அமெரிக்கா வர
வேண்டியிருந்தது. என்னைப் பற்றி வதந்திகளை
பரப்புவதற்கும், எனது அனைத்து தகவல்களையும்
நீக்குவதற்கும் சீன அதிகாரிகளை நியமித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

யானின் இந்த குற்றச்சாட்டிற்கு இதுவரையில் சீனா தரப்பில்
பதில் வரவில்லை. தனது பாதுகாப்பிற்காக அவர்,
சீனாவில் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில்
தஞ்சமடைந்துள்ளார்.

ஒரு ரகசியமான மறைவிடத்தில் இருந்துகொண்டு,
இந்தப் பேட்டியை அவர் மீடியாக்களுக்கு தந்திருக்கிறார்.

————————————————————————
https://www.livemint.com/news/world/-coronavirus-created-in-a-govt-lab-in-wuhan-says-whistleblower-chinese-virologist-11600056197730.html

—————-

A new twist in the origins of virus story has left people shocked.
A Chinese virologist, Dr Li-Meng Yan, has claimed that the
novel coronavirus was made in a government controlled laboratory
in Wuhan.

The virologist, who became the whistleblower against the
Chinese government over its handling of the coronavirus pandemic,
claims that she has proof that the virus came from a virology lab
in the city and not from the wet-food market.

On Friday, she participated in an interview on British talk show
“Loose Women” from a secret location in the USA and talked
about her research on the coronavirus disease.

She claims that she was tasked with looking into a cluster of
Sars-like cases coming out of mainland China in December 2019.

The top scientist working in Hong Kong claimed that she discovered
a cover-up operation during her investigation and said that the
Chinese government knew about the spread of the virus before
publicly acknowledging it.

“I will show evidence to tell people why this has come from the
lab in China, why they are the ones who made it,” she adds.
“Anyone, even if you have no biology knowledge, will be able to
read it, and check and identify and verify it yourself.”

She adds that the Chinese authorities began to discredit her
even before she fled the country for the USA. “They deleted
all my information and also they told people to spread rumours
about me,” she said.

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to உலகம் சீனாவை எப்படி, எப்போது தண்டிக்கப்போகிறது….?

 1. புதியவன் சொல்கிறார்:

  அமெரிக்கா, இதனை எளிதாக எடுத்துக்கொள்ளாது என்றே தோன்றுகிறது. இப்போது தேர்தலில் பிஸியாகிவிட்டாலும், இந்த கொரோனா பல உலக நாடுகளின் கண்களைத் திறந்திருக்கும். கம்யூனிஸ அரசுகள், சீன அரசு உயிரி போர் (Bio war) ஆரம்பித்தால் அதனை எந்த நாடுமே எதிர்கொள்வது கடினம், இப்போது நடந்ததைப் போல. அதனால் நிச்சயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும். This would have opened the eyes of many a big countries.

  ஆனால் உடனடி நடவடிக்கை சாத்தியமில்லை. ஆனால் தங்கள் மன எரிச்சலைக் காட்டும் விதமாக சீனாவுக்கு எதிராக எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மற்ற வல்லரசுகள் செயல்படும் என்றே நினைக்கிறேன்.

  சீனா எப்போதுமே நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. அதனை அதன் தோழமை குட்டி குட்டி நாடுகள் புரிந்துகொள்ளும்போது காலம் கடந்துபோயிருக்கும். (ஆனால் என் அனுபவப்படி தாய்வான் போன்ற நாடுகள் நெறிமுறைகளைக் கடைபிடிப்பவை. எப்போதுமே ஜனநாயக நாட்டில்தான் எதிர்கட்சிகள் இயங்குவதால் நெறிமுறைகளற்ற அரசுகள் வீழ்த்தப்படும். ஆனால் கம்யூனிச நாடான சீனா, உலகத்துக்கே ஒரு சவால் என்றுதான் நான் நினைக்கிறேன்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு
   நடவடிக்கைகள் வெளிப்படையாக நடந்தன.

   ஆனால், சீனாவின், பொருளாதார
   ஆக்கிரமிப்பு மறைமுகமாக நடக்கிறது.
   பல நாடுகள் விட்டில்பூச்சிகள் போல்
   அதன் வலையில் சென்று வீழ்கின்றன.

   விழுந்து விட்டால் வெளியே வருவது
   மிக மிகக் கடினம்… பக்கத்தில் இருக்கும்
   இலங்கையும், பாகிஸ்தானும் அதற்கு
   எடுத்துக்காட்டு.

   எதிர்காலத்தில் உலகநாடுகள் அனைத்துமே
   சீனாவை எதாவதொரு விதத்தில்
   நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையை
   அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

   உலகம் விழித்துக் கொள்ள இந்தியா
   முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
   இதில் வெளிப்படையான முயற்சிகளை விட,
   மறைமுகமான முயற்சிகள் அதிகம்
   பலன் கொடுக்கும் என்று தோன்றுகிறது.

   நமது அரசுக்கு தெரிந்திராத விஷயம் அல்ல.
   ஏற்கெனவே இதற்கான நடவடிக்கைகள்
   துவங்கியிருக்கும் என்று நம்பலாம்.

   இந்த இடுகையின் நோக்கம் –
   நமது மக்களுக்கு சீனாவின் கொடூரத்தை
   உணர்த்த வேண்டும்; சீனப்பொருட்களை
   பயன்படுத்துவதை பொதுமக்களும்,
   தொழில்துறையினரும்,
   கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க –
   ஒரு பொதுக்கருத்து உருவாக
   உதவ வேண்டும் என்பதே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    ஒரு செய்தியை முன்பு படித்தேன். ஒரு தொழிலதிபர் எழுதியது. சீனா எப்படி நம்மை வளைக்கிறது, எதையாவது செய்து தொழிலதிபர்களை மடக்குவது, அரசின் கொள்கைகளுக்கு எதிராக வழக்குப் போடச் சொல்லித் தூண்டி, மிக மிக நல்ல வக்கீலை வைத்துக்கொள்ளும்படியும் அதற்காகும் செலவை கம்பெனி தந்துவிடும் என்றெல்லாம் சொல்லி எப்படி தொழிலதிபர்களை மடக்குகிறது என்பதை எழுதியிருந்தார்.

    இயல்பாகவே நமக்கு (இந்தியர்கள்) சிக்கனமாக இருக்கும் எண்ணம் அதிகம். (அதனால்தான் வெளிநாட்டில், குறிப்பாக கல்ஃப் தேசங்களில் இந்தியன் என்றால் அதற்கு ஒரு சம்பளமும் வெள்ளைத் தோல் என்றால் அதற்கு ஒரு சம்பள ரேஞ்சும் உண்டு. நம்ம ஆட்கள் 50,000 வீட்டு வாடகை என்று கொடுத்தால், இவங்க 10,000ல் வீடு எடுத்துக்கொண்டு மிச்சத்தை சேமிப்பாங்க, ஆனால் வெள்ளையர்கள் அப்படி அல்ல, 50,000க்கு ஏற்ற வீட்டைத் தேடுவான்). அதனாலத்தான் ‘சொந்தச் சகோதரர்கள் சிவகாசியில் துன்பத்தில் சாதல் கண்டும், சீனா வெடியை தீபாவளிக்கு வெடிக்கிறான்’. நமக்கு சீனப் பொருட்களைத் தவிர்க்கும் எண்ணம் மனதளவில் வரணும்.

    நாம இந்த எம்.பி. இவ்வளவு அதிகமா பாராளுமன்றத்துல கேள்வி கேட்டார் என்றெல்லாம் சிலாகிக்கிறோம். என்ன என்ன கேள்விகள் கேட்டாங்க என்பது வெளியில்வந்தால் இவங்க செய்யும் தகிடுதத்தங்கள் நமக்குத் தெரிந்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.