கட்சிக்குள் ரௌடிகள் – இருந்தாலென்ன…?கேட்கிறார் பாஜக தலைவர் முருகன் …

….
….

….

“கட்சிக்குள் ரௌடிகள் – இருந்தாலென்ன…?”
என்று கேட்கிறார் தபாஜக தலைவர் முருகன்…..!!!

பாஜக வழக்கறிஞர்கள் அணித்தலைவர் பால் கனகராஜோ,
“ரவுடிகள், பாதுகாப்புக்காக பாஜகவுக்கு வருகிறார்கள்”
என்கிறார் …!!!

தமிழகத்துக்கு முற்றிலும் புதிய,
விசித்திரமான, நியாயப்படுத்தும் வாதம்….!!!

————————

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில்,
மாங்கரைப் பகுதியில் ரிலாக்ஸாக ஆயுர்வேத
சிகிச்சை எடுத்துவருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர்
எல்.முருகன்.

முதலில் முருகன் அவர்களின் பேட்டியிலிருந்து –

————-

”ஒருபக்கம் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கட்சியில்
இணைகிறார். மறுபக்கம், குற்றப் பின்னணி இருப்பவர்களும்
இணைகிறார்கள். என்னதான் உங்கள் திட்டம்?”

”தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், ஓய்வுபெற்ற
அதிகாரிகள் என்று பலதரப்பட்டவர்களும் எங்கள் கட்சிக்கு
வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஏன்… மிஸ்டு கால் கொடுத்தால், யார் வேண்டுமானாலும்
வரலாம். ஆனால், கட்சியில் சேர்ந்த பிறகு அவர்கள்
எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.”

————-

”ஆனால், ரெளடிகளையெல்லாம் கட்சிக்குள் சேர்த்து,
தேர்தலில் கலவரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அல்லவா
எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன?”

“அரசியலுக்காக அப்படிச் சொல்கிறார்கள். அப்படிக் குற்றம்
சாட்டுகிற கட்சிகளை ஆராய்ந்தால், அங்கும் ஏகப்பட்ட பேர்
குற்றப்பின்னணியுடன் இருப்பார்கள்.”

————-

“சமீபத்தில் `டிசம்பர், ஜனவரியில் தமிழக அரசியலில்
திருப்புமுனை ஏற்படும்’ என்று கூறியிருந்தீர்கள். அப்படி
என்னதான் மாற்றம் வரும்?”

”பொறுத்திருந்து பாருங்கள்… நிறைய அரசியல் மாற்றங்கள்
வரும். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள்
வரவிருக்கின்றன. அவை என்னென்ன வழக்குகள் என்பது
எல்லோருக்குமே தெரியும். அது பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய
ஓப்பன் கார்டாக அமையும்.”

—————-

“உங்கள் ஆட்சியில் ஜி.டி.பி வீழ்ந்துகொண்டே போகிறதே…
அதைப் பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையே
இல்லையா?”

”இது உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் நல்ல நிலையில்தான்
இருக்கிறோம்.”

—————————————————————————–

….

….

இது பாஜக வழக்கறிஞர்கள் அணியின் தலைவர்
பால் கனகராஜ அவர்கள் கூறுவது –

-“பாதுகாப்புக்காக இங்கு வருகிறார்கள்!” –

”குற்றப் பின்னணிகொண்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதில்
பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மிகுந்த ஆர்வம் காட்டி
வருகிறார். இதற்கான அசைன்மென்ட் தமிழக பா.ஜ.க
வழக்கறிஞர்கள் அணித் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜிடம்
கொடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

இந்நிலையில், பால் கனகராஜைத் தொடர்புகொண்டு
கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் –

——————

”கட்சிக்குள் ரௌடிகளைச் சேர்ப்பதே நீங்கள்தான்
என்கிறார்களே?”

”கட்சிக்குள் வருபவர்கள் அனைவருமே எனக்குப்
பழக்கமானவர்கள் என்று கூற முடியாது….!!!

குறிப்பாக, `கல்வெட்டு’ ரவி என் மூலமாகக்
கட்சியில் சேரவில்லை. அவர், எஸ்.சி பிரிவுத் தலைவர்
மூலமாகக் கட்சியில் சேர வந்தார். எல்லோரும்
வருகிறார்களென்றால், பா.ஜ.க மீது அவர்கள் வைத்துள்ள
நம்பிக்கையைத் தான் இது காட்டுகிறது……!!!!!!!!!!!!!!!!!! `

இந்தக் கட்சியில் பாதுகாப்பு கிடைக்கும்’ என நம்புகிறார்கள்….”

————————

”இத்தனை நாள்களாக இல்லாத நம்பிக்கை,
இப்போது வருவது ஏன்?”

”பா.ஜ.க வளரும் கட்சி என்பதால், வாழ்க்கையில் ஏதாவது
முன்னேற்றம் கிடைக்கும் என நம்பிச் சேர்கிறார்கள்.

எந்தக் கூட்டணி அமைந்தாலும், அதை பா.ஜ.க-தான்
கட்டுப்படுத்தும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.
பொய் வழக்கு போடாமல் தடுக்க பா.ஜ.க-வால் முடியும்…
இப்படிப் பல நம்பிக்கைகள் இருப்பதால்தான்,
பாதுகாப்புக்காக இங்கு வருகிறார்கள்.”

————————-

” ‘குற்றப் பின்னணி உள்ள நபர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும்,
வக்கீல்களாக இருந்தால் மத்திய அரசு வழக்கறிஞர் பதவியும்
வழங்கப்படும்’ எனப் பல வாக்குறுதிகள் கட்சியிலிருந்து
கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?”

“இருக்கலாம்……!!!!!!!!!!!!!!!!!!

எதிர்பார்ப்பு யாருக்குத்தான் இல்லை…??????

ஒரு சாதாரண ரௌடிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு
மற்றவர்களுக்கும் இருக்கும்தானே.

ஒரு வக்கீல் கட்சிக்குள் இணையும்போது,
தொழில்சார்ந்த உயர்வை எதிர்பார்ப்பது இயல்புதானே…?

மத்திய அரசின் வக்கீல் பதவியை அனைவருக்குமே
கொடுக்க முடியாது. சீனியாரிட்டி, கட்சிப் பணி
ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான் கொடுக்க முடியும்.”

———————
(நன்றி – விகடன் செய்தித்தளம்….)

.
—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கட்சிக்குள் ரௌடிகள் – இருந்தாலென்ன…?கேட்கிறார் பாஜக தலைவர் முருகன் …

 1. புதியவன் சொல்கிறார்:

  இதுக்கு ஹாஹாஹா என்று போட்டால் நீங்கள் ரசிப்பதில்லை.

  ஒருத்தருக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று மக்களுக்கு நல்லது போதித்து, கெட்டவைகளைச் சாடி, அவங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டு போவது. இன்னொன்று, தானும் அவங்க லெவலுக்குக் கீழ இறங்கி மத்த கட்சிகள் செய்வதையே தானும் செய்வது. இங்க பாஜக தமிழகத் தலைவர் முனைவது இரண்டாவது வாய்ப்பை.

  பதவி கிடைக்கும் என்ற தூண்டுதல், குற்றப் பின்னணி இருந்தால், கவலைப்படாதீர்கள், உங்களுக்கு பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கை கொடுப்பது. என்ன அருமையான ஸ்டிராடஜி பாஜக தமிழகத் தலைவருக்கு. என்ன செய்தாலும் கவலையில்லை, ஆட்சிக்கு வருவதை நோக்கி அடியெடுத்து வைக்கணும் என்ற எண்ணம். ஒரு காலத்துல கருணாநிதி, சப்பைக் காரணத்தை முன்னிட்டு சிறைல இருந்த தொழில்முறை குற்றவாளிகளை விடுவித்தார். அதை மக்களும், பத்திரிகைகளும் ஏற்றுக்கொண்டன. அது மாதிரியான லெவலுக்கு இறங்கி, முருகன் இந்த மாதிரித் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறார் போலிருக்கு.

  வாழ்க வாழ்க. தமிழகம் உருப்பட்டமாதிரிதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .
   யோசித்துப் பார்த்தேன்…

   திமுக-வுக்கும் பாஜக-வுக்கும்
   அதிகம் வித்தியாசங்களை காண முடியவில்லை –

   இரண்டும் வெவ்வேறு வெறி
   கொண்டவை என்பதைத் தவிர…?

   .

 2. jksmraja சொல்கிறார்:

  KM சார்,

  சட்ட பாதுகாப்பு வேண்டி, ரௌடிகளே பிஜேபி யில் இணைவதாக எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மையாக இருப்பதற்கு வாய்ப்பு ரெம்பவும் குறைவு. பிஜேபி காரர்களே ரௌடிகளிடம் ஒரு பெரிய தொகைக்கு பேரம் பேசி அவர்களை இணைத்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரௌடிகளை ஏன் அப்படி இணைகிறார்கள், காலம் உங்களுக்கு கூடிய விரைவில் பதில் சொல்லும்.
  இதற்க்கு மேல் இப்பொழுது இதை விவாதிக்க நான் விரும்பவில்லை.

  இரண்டாவதாக, அடுத்த பாராளுமன்ற தேர்தல் இந்தியை தேசிய மொழி ஆக்க வேண்டும் என்ற கோசத்தில் வட இந்தியர் தென் இந்தியர் என்ற பிரிவினையின் பேரிலே நடக்கும் என்று நினைக்கிறேன் அதற்க்கான சில முன்னெடுப்புகளை நான் காண்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.