“அந்தக் காலம்….”

….
….

….

“அந்த காலம்..” என்கிற தலைப்பில்
ஒரு மெஸேஜ் forward – ஆகி வந்தது….

சிலர் ஏற்கெனவே படித்திருக்கலாம்.
படிக்காத பலருக்காக கீழே –

ஒவ்வொரு தலைப்பையும் நின்று ஒரு நிமிடம்
யோசித்தால்…..அந்த தலைப்பில் நடந்த பல விஷயங்கள்,
அனுபவங்கள் நினைவிற்கு வரும்….!!!
———————————————————– .

ஊசி போடாத *Doctor* ..

சில்லறை கேட்காத *Conductor* ..

சிரிக்கும் *police* …

முறைக்கும் *காதலி* ..

உப்பு தொட்ட *மாங்கா* ..

மொட்டமாடி *தூக்கம்* ..

திருப்தியான ஏப்பம்…

Notebookன் *கடைசிப்பக்கம்* …

தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ….

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..

இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* …

கோபம் மறந்த *அப்பா* ..

சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..

அக்கறை காட்டும் *அண்ணன்* ..

அதட்டும் *அக்கா* …

மாட்டி விடாத *தங்கை* ..

சமையல் பழகும் *மனைவி* …

சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..

வழிவிடும் *ஆட்டோ* காரர்…

*High beam* போடாத லாரி ஓட்டுனர்..

அரை மூடி *தேங்கா* ..

12மணி *குல்பி* ..

sunday *சாலை* …
(கொரோனா காலத்தில் நிறையவே கிடைத்தது..!)

மரத்தடி *அரட்டை* …

தூங்க விடாத *குறட்டை* …
(இப்போதும் உண்டே…!)

புது நோட் *வாசம்* ..
(இதுவும் இப்போது நிறையவே உண்டு…!)
மார்கழி *மாசம்* ..

ஜன்னல் *இருக்கை* ..

கோவில் *தெப்பகுளம்* ..

Exhibition *அப்பளம்* ..

முறைப்பெண்ணின் *சீராட்டு* …

எதிரியின் *பாராட்டு* ..

தோசைக்கல் *சத்தம்* ..

எதிர்பாராத *முத்தம்* …

பிஞ்சு *பாதம்* ..

எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,

சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,

முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,
(எனக்கு நாலணாவிற்கே வெட்டிக்கொண்ட
அனுபவம் உண்டு…)

*மிதி வண்டி* வைத்திருந்தோம்.,

*எம்ஜிஆர், கலைஞர்* உயிரோடு இருந்தார்கள்.

*ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.

கபில் தேவின் *கிரிக்கெட்* .

குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.

*வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,

சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,*

தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,

பேருந்துக்குள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
*உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,

கொளுத்தும் வெய்யிலிலும்
முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* …

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து ,
நம்மை மறக்காத *ஆசிரியர்* …

கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,
நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* …

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி
சுத்தும் *பாட்டி* ..

பாட்டியிடம் பம்மும் *தாத்தா* …

எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்*
பாடல் கேட்பது சுகமானது

வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள்,

*மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

*சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்

பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,

சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை*
யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள்
*நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,

இதை எழுதும் *நான்* ..

படிக்கும் *நீங்கள்* ..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,

*நம்பிக்கைகளும் தான்…..* .
—————————————————————————
இவற்றோடு இன்னும் சிலவற்றையும்
சேர்த்துக் கொள்ளலாம்…..யோசித்தால் இன்னும்
நிறைய -நிறைய – நினைவிற்கு வரும்…
———————————————————-


……

இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு பாடல்கள்…

புழக்கடையில் -கிணற்றடி குளியல் ….

டூரிங் டாக்கீஸ் தரை டிக்கெட் மணலில்
உட்கார்ந்து, சாய்ந்து, படுத்து பார்த்த சினிமா
இடைவேளைகளில் தட்டை, முறுக்கு…

தினத்தந்தி கொட்டையெழுத்தில் தலைப்புகள் –
“கோர்ட்டில் குபீர் சிரிப்பு” –
“முத்தம் கொடுத்த சத்தம் – 10 அடி தூரம் ”
“இரவு ராணி” ….”சிந்துபாத்”

நவராத்திரி கொலு –
தெருவில் பாவாடை தாவணி சிறுமிகள் கூட்டம்

மார்கழி மாத பஜனைக்கூட்டம் –
முடிவில் சுடச்சுட சுண்டல்…

—————————————————————————

பின் குறிப்பு – ஆனால், தொலைந்து போனவற்றை
மீண்டும் நினைத்துப் பார்ப்பதும்,
அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் கூட
ஒரு சுகம் தானே… இல்லையா …. !!!

இதே போல், இந்தக் காலம் என்கிற தலைப்பில்
யாராவது எழுதி அனுப்புவார்களா…?

.
—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “அந்தக் காலம்….”

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    தினத்தந்தி எழுதும் தமிழ் :

    அழகி கைது ( அப்படினா என்ன அர்த்தம்? )
    போலீஸ் நாய் தேடுகிறது.
    போலீஸ் வலை வீச்சு .
    பலே ஆசாமி கைது .

    அப்புறம் ஆச்சரியக்குறி !!!

  2. புதியவன் சொல்கிறார்:

    அந்தக் காலம் என்பதற்கு வரையறை இருக்கா?

    //ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,// – நான் 11ம் வகுப்புக்கும் டவுசர்தான் போட்ட்டுக்கொண்டு சென்றேன். அதில் இன்னொரு ஆபாசம் (இப்போ நினைக்கும்போது) சட்டை, டவுசரை மறைக்கும் அளவு.

    //எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,// – பெண்ணை மதிக்காத, அடக்கும் தன்மை அதிகம் அப்போ இருந்தது.

    //கோபம் மறந்த *அப்பா* ..// – நான் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அந்தக் காலத்தில் பசங்களை அடித்து வழிக்குக் கொண்டுவராத அப்பாக்கள் வெகு அபூர்வம்.

    ஆசிரியர் பையனைக் கண்டிப்பதை, அடித்து ஒழுங்குபடுத்துவதைக் கண்டுகொள்ளாத பெற்றோர், பல நேரங்களில் பையன் இதைச் சொல்லும்போது தாங்களும் சேர்ந்துகொண்டு பையனை வெளுக்கும் பெற்றோர்

    ஆசிரியருக்குப் பயந்த மாணவர்கள்

    நீங்கள் குறிப்பிட்டதில் பல, அப்போ மக்கள் தொகை அதிகமில்லாமல் இருந்ததால்தான் நிகழ்ந்தவை. அதனால் அதனை காலமாற்றம் என்பதில்தான் சேர்க்கணும். வானொலிலாம் வேற ஆப்ஷன் இல்லாததால். உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். பஞ்சாயத்து ஆபீசில்தான் ரேடியோ, ஒலிபெருக்கி உதவியோட செய்திகளை ஒலிபரப்புவாங்க.

    காலமாற்றம் நல்லது செய்திருக்கா என்று யோசித்தால், வாழ்க்கையை சுகமாக ஓட்ட நல்லது நடந்திருக்கிறது, ஆரோக்கியமாக, உறவுகளுடன் கூடிய வாழ்க்கை நம்மிடமிருந்து விலகியிருக்கிறது. உறவுகளோடு உட்கார்ந்து பேசுவது மிகவும் குறைந்திருக்கிறது.

  3. R.Gopalakrishnan சொல்கிறார்:

    I had experience in almost all the above.You have left out one important topic. That is
    Tram journey incities.

  4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    கிரிக்கெட் லைவ் டெலிகாஸ்ட் பார்க்க சென்ற கதை.
    நாங்கள் ஒரு 40 குடும்பம் கொரட்டூர் EB கோட்ரஸ்ல் தங்கி இருந்தோம். அதில் ஒரு நண்பரின் சொந்தக்காரர் வில்லிவாக்கத்தில் டிவி வாங்கியிருப்பதாக சொல்லி ஒரு ஞாயிறு முழுவதும் கிரிக்கெட் பார்ப்பது என்று கிட்டத்தட்ட எட்டு பத்து பேர் முடிவெடுத்து வீடுகளில் சொல்லி பர்மிஷன் வாங்கிவிட்டோம்.
    அடுத்த நாள் காலை பஸ் பிடித்து அந்த வீட்டுக்கு சென்று முழு நாளும் ஆட்டம் பார்த்தோம்.
    இரண்டு வேளை உணவும் வாழை இலையில் பரிமாறப்பட்டது.
    அந்த அன்பு இன்று இல்லையே ஐயா.
    தவறு நம்மிடமும்தான் உள்ளது.
    நல்லவற்றை நம் சந்ததிக்கு கடத்தாமல் விட்டு விட்டோம்.
    பகிர்வதில் கிடைப்பதே சந்தோஷம் என்பதை மறந்து பெறுவதில் தான் சந்தோஷம் என்று பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டோம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.