“வேட்டை காத்திருக்கு ” ….வெளியே வாங்க டாக்டர் சுவாமி….!!!

….
….

….

டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு பாஜக தலைமையின் மீது
எக்கச்சக்கமான கோபம். தன்னை மதிப்பதில்லை; தான்
சொல்லும் எந்தக் கருத்தையும் கட்சி லட்சியமே செய்வதில்லை
என்று குறை. கட்சியின் பொருளாதார கொள்கைகள் குறித்து
கடும் வேறுபாடுகளை கொண்டிருக்கிறார்.அதை
வெளிப்படையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
Neet, JEE தேர்வுகளை இப்போது நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு
தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கூறுவது எதையுமே
கட்சி ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; யாரும் பதில் கூட
கூறுவதில்லை;

தற்போது, லேட்டஸ்டாக, தன்னை கட்சியின் ஐ.டி., விங்
தலைவர் அமித் மால்வியா தன்னை மிகவும் தரக்குறைவாக
விமர்சிப்பதாக குற்றஞ் சாட்டியிருந்தார் சுப்ரமணியன் சுவாமி.

இரண்டு நாட்கள் முன்னதாக, அவர் வெளியிட்ட
டிவிட்டர் பதிவில், பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவு மோசமாக நடக்கிறது.
அதன் சில உறுப்பினர்கள் போலி ஐடி-யில் என்னை தனிப்பட்ட
முறையில் தாக்கி விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிடுகின்றனர்.

எனது ஆதரவாளர்கள் கோபமடைந்து பதிலடி கொடுத்தால், நான்
பொறுப்பேற்க மாட்டேன். கட்சியின் ஐடி பிரிவு செய்யும்
இழிவான செயல்களுக்கு பா.ஜ.க தலைமை தான் பொறுப்பேற்க
வேண்டும் என்று தெரிவித்திருந்தார்….

…..

……

இதையும் கட்சித்தலைமை கண்டுகொள்ளவே இல்லை;
கடுப்படைந்த டாக்டர் சுவாமி இன்று (புதன்) வெளியிட்டுள்ள
ட்விட்டர் செய்தியில்,

பா.ஜ.க-வின் ஐ.டி குழுதலைவர் அமித் மால்வியாவை
நாளைக்குள் (வியாழக்கிழமை) பதவியில் இருந்து நீக்காவிட்டால்,
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்களுடன்
கருத்து கேட்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
….

….

இவையெல்லாம் குறித்து மோடிஜியுடன் தொடர்புகொண்டு
பேச முயற்சித்துள்ளார் என்றும் அதற்கு உரிய response
கிடைக்கவில்லையென்றும் தெரிகிறது. எனவே, சுவாமி
அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை அவரது
ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நாம் கூற விரும்புவது –

” தில்’லாக வெளியே வாருங்கள் சுவாமி…வேட்டை
காத்திருக்கிறது;

பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகளில் யாருக்கும்
இப்போது தெம்போ, திராணியோ இல்லை; எல்லாரும்
பம்மிக் கிடக்கிறார்கள்; அம்பானி, அடானி போன்றவர்கள்
போடும் ஆட்டங்களை வெளிக்கொண்டு வருவதற்கு
உங்களை விட்டால் வேறு ஆளில்லை;
அரசியல் சூழல் மிகவும் மந்தமாக இருக்கிறது.
ஜனநாயகம் என்பதே மக்களுக்கு மறந்து போய் விடும் நிலை
வந்து கொண்டிருக்கிறது….. ஊழல்களை வெளிப்படுத்தவும்,
பொருளாதாரம் சீர்படவும், உங்களைப்போன்ற அனுபவசாலிகள்
தீவிரமாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்…!!! ”

“வெளியே வாருங்கள்;
உங்களுக்கான வேட்டை காத்திருக்கிறது…”

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.