….
….
….
ஹாங்காங் நகரில் சீன அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக
மக்கள் போராடி வருகின்றனர்….
அத்தகைய ஊர்வலம் ஒன்றைத் தடுப்பதற்காக
பெரும் அளவில் ஹாங்காங் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
தனது 20 வயது அண்ணனுடன், சித்திரம் வரைவதற்கான
ப்ரஷ், வண்ணங்கள் – போன்றவற்றை வாங்குவதற்காக
ஒரு 12 வயதுப் பெண் கடைத்தெருவிற்கு வந்திருக்கிறாள்.
கலவரப்படுத்தும் முறையில் நடந்துகொண்ட போலீஸைப்
பார்த்து மிரண்டு போன அந்தச்சிறுமி அங்கிருந்து தப்பியோடி
வீட்டிற்குச் செல்ல முயல்கிறாள். அவள் எவ்வளவு
மென்மையான பெண் என்பது அவள் ஓடுகிற முறையிலேயே
தெரிகிறது…
ஊர்வலத்திற்கும் அவளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
என்பது பார்த்த மாத்திரத்திலேயே நமக்குத் தெரிகிறது.
ஆனாலும், அவசியமே இல்லாமல் –
காட்டுமிராண்டி ஹாங்காங்-சீன போலீஸ்,
அவளை தொடர்ந்து துரத்திக்கொண்டு போய், கீழே சாய்த்து,
வன்முறையை பயன்படுத்தி அவளை அமுக்கிப் பிடித்துக்கொண்டு,
விலங்கை மாட்டுகிறார்கள்…..
அந்த வீடியோ வெளியாகி, உலகம் முழுவதும்
பரபரப்பை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது…..
ஹாங்காங் மக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற
உலக நாடுகள் உதவிசெய்ய முன்வர வேண்டும்.
சீன அரசின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை
அப்படியே காட்டும் அந்த காணொளி கீழே –
…..
…..
.
———————————————————————————————————————————