ஒரு “கனத்த” மண்டை பேசுகிறது ….

….
….

——————————————————————————

…………………………

….

———————————————————————-

2014-ல் “நண்பர்” (…? ) மோடி கேட்டுக்கொண்டதால்
பாஜகவில் இணைந்தேன் ….

மதுரையில் ஒரு புதிய கட்சி தொடங்கப்படும்போது,
எல்லாமே மாறும்……..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இப்போதைக்கு (??????????????) பாஜகவைவிட்டு
விலகும் எண்ணத்தில் நான் இல்லை.

அப்படி ஏதாவது முடிவெடுத்தாலும்,
நண்பர் ( தலைவர் இல்லை நண்பர் ….?????? )
மோடியிடம் தெரிவித்து
விட்டுத்தான் எடுப்பேன்….

————————————————————

தேர்தலில் நின்றால் சொந்தமாக 100 ஓட்டுகள் பெறக்கூட
வக்கில்லாத ஒரு ஆசாமி வாய்கிழிய பேசுவதை
நண்பர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே
இதை இங்கே பதிவு செய்கிறேன்…

கவுண்டமணியின் அரசியல் பேச்சை 100 சதவீதம்
நிரூபிக்கும் ஒரு சவடால் அரசியல்வாதி….

தேசியக்கொடியை அவமதித்தது தவறு;
என் ஜென்மத்தில்இந்த மாதிரி ஒரு செயலை இனியும்
செய்ய மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம்
எழுதிக்கொடுத்து விட்டு, கைதாவதில் இருந்து தப்பித்து
வந்திருக்கும் ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி –

——————————————————

பாஜகவில் இருந்து விலகத் திட்டமா? – எஸ்.வீ.சேகர் பேட்டி

‘இந்து தமிழ்’ இணையத்துக்கு அவர் அளித்த
பேட்டியிலிருந்து…

—————————

…..
…..
…..

—–

மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கி
விட்டார் எஸ்.வீ.சேகர், இனி சம்பளத்தைக் குறைத்துக்
கொண்டுகூட சினிமாவில் நடிப்பார் என்று வருகிற
தகவல்கள் உண்மையா?

‘சினிமாவில் இனி நடிக்கவே மாட்டேன்’ என்று நான்
எப்போதும் சொன்னதே இல்லை. நான் அமெரிக்கத்
தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, ஃபாரினில்
செட்டில் ஆகிவிட்டேனா என்ன?

வாராவாரம் நாடகம் போட்டுக் கொண்டுதானே இருந்தேன்.
ஆனால், என்னைப் படங்களில் நடிக்க வைக்க விரும்பும்
தயாரிப்பாளர்கள் நேரடியாக என்னிடம் பேசாமல், புரொடக்ஷன்
மானேஜரிடம் சொல்லியிருக்கிறார்கள் போல. (…!!!! )

அவர்கள், “எஸ்.வீ.சேகர் அரசியலில் பிஸியாக இருக்கிறார்;
நடிக்க மாட்டார்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

சிலர், “சேகர் இயக்குநர்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்”
என்று சொல்லியிருக்கிறார்கள்.

ராமநாராயணன், விசு மட்டுமல்ல
இயக்குநர் ஷங்கர் வரையில் எல்லோரிடமும், ஒரு நடிகனாக
என்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறேன். நான் 24 மணி
நேரமுமா அரசியல் செய்கிறேன்?

நடிப்பதற்கு எப்போதும் தயார்தான்.

பொது முடக்கம் முற்றாக முடிந்ததும், ஒரு படத்தில்
முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். அது என்ன படம்
என்பதைத் தயாரிப்பாளர் விரைவில் அறிவிப்பார். தொடர்ந்து
படங்களில் நடிக்கும் திட்டத்தில் தான் இருக்கிறேன்.

பொது முடக்கத்துக்குப் பிறகு இரண்டு மடங்கு சம்பளம்
வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அல்லவா,
அதில் பாதி சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு
வேண்டுமானால் நடிப்பேன் (சிரிக்கிறார்).

என்னுடைய மகன் அஸ்வினும், இரண்டு படங்களில் நடிக்க
ஒப்பந்தமாகியிருக்கிறார். என்ன ஒன்று, சினிமா படப்பிடிப்பு
மற்றும் வெளியீட்டு முறையில் இனி நிறைய மாற்றங்களைச்
செய்ய வேண்டியதிருக்கும்.

பாஜகவில் நமக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை,
திடீரெனக் கட்சிக்கு வருவோருக்குப் பெரிய அங்கீகாரம்
கிடைக்கிறது என்று வருத்தத்தில் இருக்கிறீர்களாமே?

அண்ணாமலை ஐபிஎஸ்ஸுக்குப் பதவி கொடுத்ததைத்
கேட்கிறீர்களா? அது நல்ல விஷயம். அதற்கு நான் ஏன்
வருத்தப்படப் போகிறேன்.

அவர் என் மகனைவிட ஒரு வயது குறைந்தவர் ( ….!!!!)

————-என்றாலும் நேர்மையானவர்(…. !!!!!! )

அறிவாளிகளையும், பிரபலமானவர்களையும் எந்தக் கட்சி
அங்கீகரிக்கிறதோ அந்தக் கட்சிக்குப் புத்திசாலித்தனம்
இருக்கிறது என்று அர்த்தம். (…!!!)

பிரபலமானவர்களைப் பார்த்தாலே ஒரு கட்சி
பயப்படுகிறது என்றால், அங்கே தன்னம்பிக்கை இல்லாத
தலைவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். (????)

கலைஞரும், ஜெயலலிதாவும் யார் தங்கள் கட்சியில்
சேர்ந்தாலும் பயப்பட மாட்டார்கள். இவர்கள் எங்கே நம்மை
ஓவர்டேக் செய்துவிடுவார்களோ என்று நினைக்க மாட்டார்கள்.

ஏனென்றால், இவர்களைவிட நாம் பிரபலமானவர்கள்,
ஆளுமை மிக்கவர்கள் என்கிற தன்னம்பிக்கை
அவர்களுக்கு உண்டு.

சோ என்னை மோடியிடம் அறிமுகப்படுத்தி
வைத்தார். குஜராத் முதல்வராக இருந்தபோதே,
அவரிடம் நீங்கள்தான் அடுத்த
இந்திய பிரதமர் என்றேன். (………!!!!!!!!!!!!!!!!!)

அதேபோல அவர் பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டபோது, நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.
அப்போது அவர் கேட்டுக்கொண்டதால் (…!!!!!)
கட்சியில் இணைந்தேன்.

1991 முதல் 2004 வரையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்தவன் நான்.
(நண்பர் மோடி கேட்டுக்கொண்டதால், 2014-ல் பாஜவில்
சேர்ந்தார் – ஆனால், 1991 முதல் 2004 வரை மோடிஜி
கேட்காமலே பாஜகவிற்கு பிரச்சாரம்…???? )

அதிமுகவுக்குப் போய்விட்டு, மீண்டும் 2010-ல் பாஜகவில்
இணைந்த பிறகும் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.
நான் சார்ந்த கட்சி என்னைப் பயன்படுத்திக்கொண்டால்
கட்சிக்கு நல்லது. பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால்
எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது.

பாஜகவில் ரவுடிகளும், திருடர்களும் சேர்த்துக்
கொள்ளப்படுகிறார்கள் என்கிற விமர்சனம் இருக்கிறதே?

அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் பொதுவாகச்
சொல்கிறேன். குற்றப்பின்னணி உள்ளவர்களை எல்லாம்
கட்சியில் சேர்க்க ஆரம்பித்தால, கட்சிப் பெயர்
கெட்டுப்போய்விடும். பாஜக என்பது அகில இந்திய ரீதியிலும்,
அகில உலக ரீதியிலும் மதிக்கப்படுகின்ற கட்சி. எனவே,
கவனம் வேண்டும்.

கட்சிக்கு விசுவாசிகள் தேவையில்லை.
……….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!நேர்மையானவர்கள்
தான் முக்கியம்.

விசுவாசம் என்பது யாரோ ஒருவர் மீது வைப்பது.
நாளையே அது இன்னொருவர் மீது மாறிவிடக்கூடும்.(…??????)

நேர்மை என்பது எல்லோரிடமும் நேர்மையாக இருப்பது.

தமிழகத்தில் பாஜகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி
குற்றம் சாட்டிக்கொள்வதைப் பார்த்தால், சட்டப்பேரவைத்
தேர்தலில் பாஜகவை அதிமுக கழற்றி விட்டுவிடும்
போலத் தெரிகிறதே?

கூட்டணி பற்றி டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும்.
தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் என்னவென்று,
நவம்பர் மாதத்திற்குப் பிறகு தெரியும்.

மதுரையில் ஒரு புதிய கட்சி தொடங்கப்படும்போது,
எல்லாமே மாறும்……..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரஜினி கட்சி தொடங்குவதைப் பற்றிச் சொல்கிறீர்களா?
ரஜினி கட்சி தொடங்கினால் அங்கே போய்விடுவீர்கள்
என்று சொல்லலாமா?

மாற்றம் ஒன்றே மாறாதது. (………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )

ஒரு கதவு அடைக்கப்பட்டால்,
10 கதவுகள் திறக்கும். (…………………!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )

ஆனால், இப்போதைக்கு (??????????????) பாஜகவைவிட்டு
விலகும் எண்ணத்தில் நான் இல்லை.

அப்படி ஏதாவது முடிவெடுத்தாலும்,
நண்பர் (தலைவர் இல்லை ….?????? ) மோடியிடம்
தெரிவித்து விட்டுத்தான் எடுப்பேன். எனக்கு யார் மீதும்
வருத்தமும் இல்லை, பொறாமையும் இல்லை.
இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது
என்று நினைக்கிறவன் நான்.

…….
…….

வழக்கமாக உங்கள் பேட்டி காரசாரமாக இருக்கும்.
தேசியக் கொடி அவமதிப்பு பிரச்சினைக்குப் பிறகு அடக்கி
வாசிக்கிறீர்களா?

அந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து
சொல்ல முடியாது. ஒன்றை மட்டும் சொல்லிக்
கொள்கிறேன். 20 வருடமாக சட்டையில் தேசியக் கொடியுடன்
வலம் வரும், தேச பக்தன் நான். அதேநேரத்தில் எனக்கு
உண்மை என்று தோன்றுவதை, உரக்கச் சொல்லத்
தயங்க மாட்டேன்.

இவ்வாறு எஸ்.வீ.சேகர் தெரிவித்தார்.

( நன்றி – தமிழ் இந்து செய்தித்தளம் )

.
———————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Responses to ஒரு “கனத்த” மண்டை பேசுகிறது ….

  1. புதியவன் சொல்கிறார்:

    Employee Can never be bigger than the Company. ‘கனத்த மண்டை’ – இப்போல்லாம் நீங்க சாஃப்டாத்தான் விமர்சனம் பண்ணறீங்க.

    கவுண்டமணி ஜோக் காணொளியை இணைத்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும்.

    நானே தொகுதிக்கு 1001 வாக்குகள் பாஜகவுக்கு இருக்கே, அதிலும் 501 வாக்குகள் இப்போ எஸ்.வி.சேகர் கட்சியை விட்டுப் போயிட்டார்னா போயிடுமே என்ற வருத்தத்தில் இருக்கேன்…. இதில் அவருடைய பேட்டி வேறு.

    இவர் சொல்லியிருக்கும் பலவித கருத்துகள் முரண்பட்டவை, போகாத ஊருக்கு வழி சொல்லுபவை. பேட்டியாளருக்கு கேள்வி கேட்கத் தெரியலை. உங்களுக்கே 60+ இதுல உங்க நாடகத்துல கதாநாயகனாக ஏன் 20+ஐ போடலைன்னு கேட்டா அவர் என்ன பதில் சொல்லுவார்? இத்தனை வருடங்கள் பல கட்சிகளில் இருந்திருக்கிறார். அந்தக் கட்சிக்கு இவரால் என்ன பிரயோசனம் என்று சொல்லுவாரா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.