….
….
….
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து
டெல்லியில் உள்ள தொலைக்காட்சிகள் அத்தனையும்,
(ஒன்றைத்தவிர) அதிதீவிர அக்கறை காட்டி வருகின்றன.
சுஷாந்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் –
தவறான சில பழக்கங்களுக்கு அடிமையாகி விட்ட,
வளர்ந்து வரும், ஒரு திறமையான இளம் நடிகராக
அவர் உருவாகிக் கொண்டிருந்தார். ஆனால், அவர்
அரசியல்வாதியாகவோ, எந்த அரசியல் கட்சியின்
சார்புடையவராகவோ இருந்ததில்லை என்பதே உண்மை.
டெல்லி தொலைக்காட்சிகள் ஒன்றுடன் ஒன்று
போட்டி போட்டுக்கொண்டு,
கதை கதையாக, பல கதைகளை ரிலீஸ் செய்து,
ஒரு பெண்ணை (அவர் சரியோ, தவறோ நமக்குத் தெரியாது..)
குற்றம் சாட்டி, குதறியெடுத்து, குற்றப்பத்திரிகை கொடுத்து,
டிவியிலேயே விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பும் கொடுக்கப்பட்டு விட்டது.
தண்டனை கொடுப்பது மட்டும் தான் பாக்கி….!!
(அதைச் செய்ய துரதிருஷ்டவசமாக
அவர்களுக்கு அதிகாரமில்லாமல் போய் விட்டது… !!!)
சரி; மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை
செய்து கொண்டார் என்று முதல் கட்டத்தில் சொல்லப்பட்ட
ஒரு வழக்கு இத்தனை விளம்பரம் பெற்றது எப்படி…?
சுஷாந்த் சிங் ராஜ்புத் பீஹாரைச் சேர்ந்தவர்…
அவர் செத்துப்போனது மும்பையில்;
அங்கே ஆட்சி நடப்பது சிவசேனா, காங்கிரஸ்,
NCP கூட்டணியின் ஆட்சி.
அவர்கள் வழக்கை சரியாக முன்கொண்டு செல்லவில்லை;
அநியாயமாக அகால மரணமடந்த பீஹார் நடிகருக்கு
மஹாராஷ்டிரா கூட்டணி அரசில் உரியநீதி கிடைக்கவில்லை
என்று …………………… பீஹாரில் போராட்டம் நடக்கிறது…!!!
போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது –
பீஹார் மாநில பாஜக….
காரணம்….?
அடுத்த 2 மாதங்களில், பீஹாரில் சட்டமன்ற தேர்தல்கள்
வரவிருக்கின்றன….ஏற்கெனவே பீஹாரில் கடந்த
10 ஆண்டுகளாக, பாஜக+நிதிஷ்குமார் கூட்டணியின்
ஆட்சி தான் நடந்து வருகிறது.
ஆட்சி எப்படி நடந்தாலும், இயல்பாகவே, மக்கள் மனதில்
கடந்த 10 ஆண்டுகளாக அதே முகங்களை அதிகாரத்தில்
பார்ப்பது அலுப்பைத்தான் உண்டாக்கும். எனவே –
அந்த அலுப்பையும், சலிப்பையும் போக்க ஒரு புதிய
உத்வேகம் – புஷ் – தேவைப்படுகிறது….
எனவே, இதை மஹாராஷ்டிராவுக்கும்,
பீஹாருக்கும் இடையே நடக்கும் போர் போன்ற
ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.
பீஹாரைச் சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்’துக்கு நியாயம்
கிடைக்க வேண்டுமானால், அது பீஹாரில் மீண்டும்
பாஜக+நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்
தான் நடக்கும்.
பீஹார் அரசியலில் இது –
எப்படி முன்னெடுத்துச் செல்லப்படுகிறது…..?
பாரதிய ஜனதா கட்சியின் கலாசார பிரிவு
‘சுஷாந்த் சிங்கிற்கு நீதி’ என்ற ஹாஷ்டேக்குடன்
ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
(போஸ்டரின் புகைப்படம் மேலே, தலைப்பில்….)
பீஹார் தேர்தலை ஒட்டி மக்கள் கவனத்தை ஈர்க்கவும்,
அவர்களது அனுதாபத்தைப் பெறவுமே பா.ஜ.க
இவ்வாறு செய்வதாக அரசியல் விமர்சகர்கள்
தெரிவிக்கிறார்கள்.
சுஷாந்தின் புகைப்படத்துடன் கூடிய அந்த சுவரொட்டியில்,
“நாங்களும் மறக்கவில்லை, யாரையும் மறக்கவும்
விடமாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பீஹாரில் பாரதிய ஜனதா கட்சி இது வரை இத்தகைய
25 ஆயிரம் சுவரொட்டிகளை அடித்துள்ளதாகவும், சுஷாந்த் சிங்
முகம் தாங்கிய 30 ஆயிரம் மாஸ்க்குகளும் அச்சடிக்கப்பட்டு
ஜூலை மாதம் முதல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
….
….
பா.ஜ.கவின் கலை மற்றும் கலாசார பிரிவு
ஒருங்கிணைப்பாளர் வருண் குமார் சிங், “நாங்கள் சுஷாந்த்
விஷயத்தை உணர்வுப்பூர்வமாக பார்க்கிறோம். அரசியலாக
பார்க்கவில்லை,” என்று கூறுகிறார்.
சுஷாந்த் தொடர்பாக இரண்டு காணொளிகளை தயாரித்து
உள்ளதாகவும், விரைவில் அவை சமூக ஊடகங்களில்
வெளியிடப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது.
அதுபோல பீஹார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு
மாநில பா.ஜ.க எழுதிய கடிதமொன்றில்,
பாட்னாவின் ராஜிப் நகர் செளகிற்கு ராஜ்புத் என்று
பெயர்சூட்ட வேண்டும் என்றும்,
நாலந்தா ராஜ்கிரில் உள்ள திரைப்பட நகரத்திற்கும்
அவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ஆனால் பீஹார் எதிர்க்கட்சிகள் இந்த சமயத்தில்
இன்னொரு விஷயத்தை நினைவுபடுத்தி,
பாஜகவை சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன….
….
….
சுஷாந்த் சிங் ஒரு இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில்
தோன்றி, ஒரு ஹிந்து பெண்ணை காதலிப்பதாக கதையுள்ள
“கேதார்நாத்” ஹிந்தி திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு
முன் வெளிவந்தபோது, அதை “லவ் ஜிஹாத்” என்று
வர்ணித்து, அதில் நடித்த சுஷாந்த் சிங்குக்கு கடும் எதிர்ப்பைத்
தெரிவித்தது இதே பாஜக தான் என்று அவை
நினைவுபடுத்துகின்றன…
ஆக பீஹார் சட்டமன்ற தேர்தலில் சுஹாந்த் சிங் சாவும்
ஒரு முக்கிய பங்காற்றப்போகிறது…!
பீஹார் மாநில மக்களிடையே, தங்கள் பத்தாண்டுக்கால
ஆட்சியின் எதிர்வினையை/ சலிப்பைப் போக்க –
ஒரு சப்பை விஷயத்தையும் கூட பெரிய தேர்தல்
பிரச்சினையாக மாற்றக்கூடிய முயற்சியில் பாஜக
முனைப்புடன் ஈடுபட்டிருப்பதைக் காண்கையில்,
அந்தக் கட்சியினரின் சாமர்த்தியத்தை பாராட்டவே
தோன்றுகிறது.
.
—————————————————————————————————————————–
Karunanidhi also boarded a train without ticket or money to Chennai and later became chief minister and got half of his family in billionaire list. If you can praise a rogue party like BJP for their crooked thinking, you should praise karuna 100 times more. Because he only looted but didn’t create mass riots like BJP.
சித்தலப்பாக்கம் வேலன்,
கட்டுரையை சூப்பரா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க.
எதற்கும் இன்னுமொரு தடவை படிச்சு பாருங்களேன்.
ஒருவேளை அப்போ வேற மாதிரி தோணலாம்.
சித்தலப்பாக்கம் வேலன்,
எல்லாருக்கும் புரியும்படி மிக எளிமையான நடையில்
எழுதுகிறேன் என்றல்லவா நான் நினைத்துக்
கொண்டிருக்கிறேன்… நீங்கள் இப்படி பின்னூட்டம்
போடுவது எனக்கே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது…..
எப்படி…… இப்படி…. ?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
KM Sir,
ஆர் எஸ் எஸ் காரர்களால், ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்து, ஆர் எஸ் எஸ் காரர் வக்கீல் சங்க தலைவராக இருக்கும் பொழுது அந்த வழக்குடன் தங்களை இணைத்து, கோர்ட்டில் வாதாடி, கோர்ட்டின் தீர்ப்பு வருவதற்கு கொஞ்சநாள் முன்னதாக ஒரு இஸ்லாமியரை வக்கீல் சங்க தலைவராக்கி, இதற்க்கு இணையாக ஒரு இந்து பெண்ணை முஸ்லீம் மதத்திற்கு மாற வைத்து, அந்த பெண்ணின் பெயரையும் முஸ்லீம் பெயராக மாற்றி, அதே பெண்ணை திரும்பவும் இந்து மதத்திற்கு மாறவைத்து ,மாநில பிஜேபி தலைவருடன் சந்திக்க வைத்து, போட்டோ எடுத்து அதை மீடியாவில் வர வைத்து, நான் திரும்பவும் தாய் மதத்திற்கு திரும்பிவிட்டேன் ஆனால் பெயரில் என்ன இருக்கிறது என்பதால் அதே முஸ்லீம் பெயரிலே தொடருவேன் என்று பேட்டி எல்லாம் கொடுக்க வைத்து விட்டு, கோர்ட்டில் இருந்து பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்றும் அதற்க்கு மாநில அரசு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தீர்ப்பையும் வாங்கிக்கொண்டு அதன் பின்பு பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று போராட்டமும் அறிவித்து விட்டு அந்த பெண்ணை கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடுயெல்லாம் செய்து அந்த பெண் கோவிலுக்கு சென்றவுடன் பார்த்தீர்களா வக்கீல் சங்க முஸ்லீம் தலைவர் அய்யப்பனை அவமதிப்பதற்காகவே இந்த தீர்ப்பை வாங்கிவிட்டார் அதே போல ஒரு முஸ்லீம் பெண் ஐயப்பன் கோவிலுக்கு சென்று அய்யப்பனின் புனிதத்தை கெடுத்துவிட்டார் என்று விளம்பரம் எல்லாம் செய்ததை ஒப்பிட்டால் இது ஒரு மேட்டரே கிடையாது
ஆமாம். ராமன் என்ற பெயருடைய இந்துவான ஓவைசியை, முஸ்லீம் மதத்துக்கு மாறவைத்து, பெயரையும் பாஜகவே ஓவைசி என்று சூட்டி, பிறகு அவரை தீவிர இஸ்லாமியராக கூட்டங்கள் நடத்தச் சொல்லி, அதை வைத்து இந்து உணர்வை இந்தியாவில் உருவாக்கி பாஜக ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தின் 97 கோவை கலவரத்துக்குக் காரணமான அல் உம்மாவும் ஆர்.எஸ்.எஸ் ஆல் ஆரம்பிக்கப்பட்டது, பாஷாவும் பிறந்த போது கிருஷ்ணன் என்ற பெயரில் இந்துவாகப் பிறந்தவர்….
இன்னும் நிறைய எழுதவேண்டியதுதானே. படிக்கறவங்க யாரும் பத்திரிகைகள் படிப்பதில்லை, படித்தாலும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை என்ற நம்பிக்கைதான் போலும்.
புதியவன்,
ராஜா ஒரு extreme என்றால்
நீங்கள் இன்னொரு extreme….!!!
நாம் மதத்தால் பிளவுபட்டதெல்லாம் போதுமே…
மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை
நிறுத்தி விட்டு, மனிதத்துவத்திற்கு
முக்கியத்துவம் கொடுப்போமே…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
jksmraja
அப்பாடா…
ஃபுல் ஸ்டாப்பே இல்லாமல் எழுத எங்கே ராஜா
கற்றுக் கொண்டீர்கள்…?
நீங்கள் கொதிப்பதை நிறுத்தி விட்டு,
கொஞ்சம் கூலாக இதையெல்லாம் ரசிக்க
கற்றுக் கொள்ளுங்கள்…B.P.யாவது
ஏறாமல் இருக்கும்…!!!
(வேறு வழி….?)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சுஷாந்த் சிங் – ஆரம்பத்தில் தற்கொலை. திடும் என்று கொலை, விசாரணை என்று படு ஸ்பீடில் போகுது. இதற்கு இணையானது சசிதரூரின் மனைவியின் கொலை. அப்புறம் காரியம் ஆனபிறகு, அம்போன்னு அந்த மேட்டரை விட்டுவிட்டு வேற மேட்டருக்குத் தாவுவது.
பாஜக ஆட்கள் செய்யும் இந்தவித தேர்தல் ஸ்டண்ட்…. படிக்கவே நாராசமாக இருக்கு. கிராமத்துல ‘சல்லித்தனம்’ என்று இதைத்தான் சொல்லுவோம்.
பத்து வருட ஆட்சியில் சாதனையாக சொல்ல எதுவுமேவா இல்லை? அப்படி இல்லை என்றால் மறுபடி இவர்கள் எதற்கு ஆட்சிக்கு வரவேண்டும்?
bandhu,
இது பீஹாரிகளுக்கு புரிய வேண்டுமே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன் ஐயா,
வேலை பளு காரணமாக இந்த பக்கம் வர முடியவில்லை. வந்து பார்த்தால், பிஜேபி நாராயணன் மாதிரி சம்பந்தமே இல்லாமல் நான் என்ன நினைப்பேன் என்று நீங்களாகவே கற்பனை பண்ணி ரசிக்கும் படி எழுதியுள்ளதால், உண்மையாக நான் என்ன நினைக்கிறேன் என்பதை எழுத வேண்டியுள்ளது.
ஒவைசி பிறப்பிலே முஸ்லீம் தான். அவர் செய்வது, பிஜேபி – ஆர் எஸ் எஸ் செய்யும் சமுதாயத்தை பிளவு படுத்தும் வெறுப்பு அரசியலில் இருந்து கொஞ்சமும் குறைவில்லாதது தான். இதில் என்ன சந்தேகம் .
தமிழகத்தின் 97 கோவை கலவரத்துக்குக் காரணமான அல் உம்மாவும் முஸ்லீம் அமைப்புதான். பாஷாவும் பிறப்பிலே முஸ்லீம் தான்.இதில் என்ன சந்தேகம்.
நான் எழுதியதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் படி எழுதியுள்ளதால் உங்களிடம் நேரடியாகவே கேட்கிறேன். நான் எழுதியவற்றில் எது எல்லாம் பொய் ? கொஞ்சம் விவரமாக எழுதினால் நான் உங்களுக்கு பதில் சொல்ல ஏதுவாக இருக்கும் .