அன்றைய அப்பாவும் இன்றைய மகனும்….

….
….

….

அந்தக்காலத்து அப்பா ஒருவர் தன் மகனுக்கு எழுதியது
போன்ற கிளாசிக் கடிதம் ஒன்றைப் பார்த்தேன்.


ஒரே வீட்டில் இருந்துகொண்டு, வாரக்கணக்கில் அப்பாவுடன்
பேசாமல் இருக்கும் சில மகன்களை நான் அறிவேன்.

அவர்கள் வேண்டுமென்று அதைச் செய்வதில்லை;
பேசுவது அவசியம் என்றே அவர்கள் நினைப்பதில்லை;
அதுவே அவர்களின் இயல்பாகி விட்டது.

மனதிற்குள்ளேயே வருத்தப்பட்டுக்கொண்டு
இப்படியும் சில அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்…

ஆனால், பொதுவாக –
இப்போதெல்லாம், அப்பா-அம்மாக்களை தங்களுடன்
வைத்துக் கொள்ளும் பிள்ளைகளும் வெகுவாக
குறைந்து விட்டார்கள்….

வயதான காலத்தில், பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்க
வேண்டுமென்று நினைக்கும்
அப்பா-அம்மாக்களும் குறைந்து விட்டார்கள் …

அப்பா-அம்மா இருந்தால், தங்கள் குழந்தைகளை
பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று
நினைக்கும் சில பிள்ளைகளும்,

தனியே சொந்த வருமானம் இல்லாமல் அல்லது
உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்படும் சில
அப்பா-அம்மாக்களும் மட்டும் –

இதற்கு விதிவிலக்கு.

அப்பா-அம்மாவை கடைசி வரையில் தங்களுடன்
வைத்துக் கொண்டு, நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று நினைக்கும் சில பிள்ளைகளும் இல்லாமல் இல்லை…

ஆனால், அந்த தலைமுறை பிள்ளைகள்
அநேகமாக அருகி வருகிறார்கள்….

இல்லையா…????

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அன்றைய அப்பாவும் இன்றைய மகனும்….

 1. புதியவன் சொல்கிறார்:

  இதற்கான காரணங்களை அனலைஸ் பண்ணுவது கொஞ்சம் கடினம்தான். சின்னப் பையனாக இருந்தபோது பையன் நிறைய அட்ஜஸ்ட் செய்துகொள்ளணும் (யோசித்தால் உண்மைதானே). அதுபோல வயதாகும்போது, பையன் குடும்ப priorityகளுக்கு பெற்றோர் அட்ஜஸ்ட் செய்துகொள்ளணும்.

  நல்ல வேலைக்குப் போ, வெளி மாநிலம் போ, வெளிநாடு போ என்று ஊக்கமூட்டி அனுப்பும்போது, இயற்கையாகவே பசங்களோட சேர்ந்திருக்கும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது.

  பசங்க, தங்கள் அப்பா/அம்மா தங்களை கண்ட்ரோல் செய்வாங்க, சுதந்திரமா இருக்க முடியாதுன்னு நினைக்கறாங்க (அப்படி நினைக்கும்படி பெற்றோர் நடந்துகொள்றாங்க). ஆனால் மாமனார்/மாமியார் அப்படி இல்லை என்பது அவங்க அபிப்ராயமா இருக்கு.

  பேச்சைப் பொறுத்தவரையில், அப்பா/அம்மா பலவிஷயங்களைப் பேசுவதில்லை, பசங்க சொல்லும் இக்காலத்தைய விஷயத்தைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அனேகமா எப்போப் பார்த்தாலும் அட்வைஸ், அதில்லைனா, ‘சாப்பிட்டயா, இதைச் செய்தயா, அதைச் செய்தயா, சனிக்கிழமை ஆச்சே எண்ணெய் தேச்சுக் குளிச்சயா’ என்பதுபோல ஸ்டாண்டர்ட் பேச்சுக்குமேல் வேறு பேசாததால் பேசுவதற்கான டாபில் இல்லாமல் போய்விடுகிறது. அவ்ளோதான். மனதில் அன்பு இருக்கும், ஆனால் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமே அமைவதில்லை.

  இது ஏதோ இந்தக் காலத்தில்தான் என்று நினைக்கவேண்டாம். எப்போ கூட்டுக் குடும்பமா ஒரே இடத்தில் இருப்பதை விட்டுவிட்டு, வேலை நிமித்தமாகப் பிரிய ஆரம்பித்தோமோ அப்போதே இதற்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது.

 2. Gopi சொல்கிறார்:

  //எப்போ கூட்டுக் குடும்பமா ஒரே இடத்தில்
  இருப்பதை விட்டுவிட்டு, வேலை நிமித்தமாகப்
  பிரிய ஆரம்பித்தோமோ அப்போதே இதற்கான
  விதை விதைக்கப்பட்டுவிட்டது.//

  எப்போது l லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும்
  I.T. கம்பனிகளில் வேலை கிடைக்கிறதோ,
  அப்போது இதற்கு உருவம் கொடுக்கப்படுகிறது.

  செல்போனும், ஃஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் எல்லாம்
  பெருக ஆரம்பித்தனவோ, அப்போது உறவுகளுக்கெல்லாம்
  உயிரோடு சமாதி கட்டியாகி விட்டது.

  • புதியவன் சொல்கிறார்:

   உங்க பின்னூட்டத்திற்கு பதில் கொடுக்கணும் என்று தோன்றியது. நான் இந்தத் துறையில் சமீப வருடங்கள் வரை பணியாற்றியவன் (ஆனால், 90களின் கலாச்சாரம் பரவ ஆரம்பித்தபோது இங்கு இல்லை). கீழே உள்ளது என் தனிப்பட்ட கருத்து.

   1. Brainy people மற்ற துறைகளில் பலப்பல வருடங்கள் அனுபவம் பெற்று 8000 ரூ சம்பளத்திற்கு உயர்ந்தபோது (நான் சொல்வது புற்றீசல் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு அல்ல, மிகக் குறைவான கல்லூரிகளில் கடும் போட்டியில் இடம் கிடைத்துப் படித்தவர்கள். இப்போ உள்ளவர்கள் பெரும்பாலும் மெஷின்கள்), டிப்ளமா, டிகிரி முடித்தவர்கள் சட் சட் என்று ஆரம்ப சம்பளமாக 15-18,000 பெற ஆரம்பித்தனர். அளவுக்கதிகமான பணம், அதுவும் இருபாலாருக்கும் கிடைக்க ஆரம்பித்த பிறகு ஐ.டி. என்று முகத்தைச் சுளிக்கும் கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது. இதனால் நடுத்தர மக்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டது உண்மை (3,000 வாடகை கிடைத்த இடத்தில் 8000 தரத் தயாரான ஐ.டி. கூட்டம், எதையும் வாங்க முடிந்த, பணத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறை காட்டாத, டாஸ்மாக் கலாச்சாரத்தை டீசண்டாக பின்பற்றிய கூட்டம்). ஆனாலும் சமூகம் இதனால் கடுமையாக பாதிப்படையவில்லை என்பதே என் எண்ணம். எத்தகைய பணம் வந்தாலும், வளர்ந்த கிராமத்து மெண்டாலிட்டி மாறாத, சேமிப்பது சிக்கனமாக இருப்பது இரண்டுமே இரண்டு கண்கள் போன்றவை என்று சொல்லி வளர்க்கப்பட்ட என்னைப் போல நிறைய பேரும், சதவிகிதம் குறைவாக இருந்த போதும், இந்தத் துறையில் இருந்தார்கள்.

   2. தொலைக்காட்சி, அதன் மோசமான சீரியல்கள், விஷ விதைகளைத் தூவும் அதன் போக்கு போன்றவைகள் சமுதாயத்தின் நல்ல பண்புகளைப் புரட்டிப்போட்டுவிட்டது. 90ல், மூன்று அல்லது நான்கு ஸ்லாட்டுகளில்தான் மக்கள் பிஸியாக இருப்பது போய் (பிஸி என்றால் வரும் உறவினர்களை வேண்டாதவர்களாகப் பார்க்கும் போக்கு, செவ்வாய் இரவு நாடகம், வெள்ளி-?-ஒலியும் ஒளியும், ஞாயிறு இராமாயணம், இரவு திரைப்படம் போன்று. 90ல் எங்கள் ஊரில் மளிகைக்கடை 3 மணிக்கு மேல் கிடையாது, இரவு திரைப்படம் என்பதால் சாலைகள் வெறிச்) தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு மக்கள் அதிலும் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களின் அடிமையாகிவிட்டார்கள். இதுதான் உறவுச் சங்கிலியை உடைத்ததற்கான முழுமுதல் காரணம்.

   3. 2000களில் மொபைல் போன், பிறகு ஸ்மார்ட் போன் இவை, மற்றவர்களையும் அடிமைப்படுத்தியது. இதைத் தவிர availability of food options ம் மிகப் பெரிய காரணம் என்பது என் அபிப்ராயம். உணவு, நம் எண்ணப் போக்கை முழுவதுமாக மாற்றியமைக்கக் கூடியது.

   உறவுகளுக்கு மரியாதையும் நேரமும் ஒதுக்குபவர்கள் குறைவு. இப்போவும் அனேகமாக எல்லோருக்கும் வாட்சப் செய்திகள்தான் துணை. ஏதோ மொபைல்ல பார்க்கலைனா பத்துகோடி பிஸினெஸ் போய்விடும் என்பதுபோல எப்போப் பார்த்தாலும் மொபைல்லதான் வாழ்க்கை. அப்புறம் உறவு, பெற்றோர் இவையெல்லாம் கசக்காமல் என்ன செய்யும்?

   ஆனால் ஐ.டி. கம்பெனிகளுக்கு இதில் பெரும் பங்கில்லை என்பது என் அபிப்ராயம். அவங்களுக்கு (நான் சொல்வது 90களில் இருந்தே) அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து சமுதாயத்தில் imbalance வந்துவிட்டது என்பது என் எண்ணம். இதுபோல அளவுக்கு அதிகச் சம்பளம் நாடக மற்றும் திரைப்பட நடிகர்களுக்குத்தான் இருந்தது, அது அளவில் குறைவு என்பதால் ரொம்பவும் சமுதாய imbalance வந்துவிடவில்லை. என் சக ஐ.டி. உறவினர்கள் நண்பர்கள் சொல்வது, ‘உன் கம்பெனிக்கு உன்னால் என்ன வரவோ அதில் ஒரு சிறு பகுதியை உன்னுடன் பகிர்கிறார்கள், அதனால் இது opportunist earning. ஓய்வூதியம், வேலை செய்யாமலேயே மற்ற அரசுப்பணியாளர்கள் போல் ஓபி அடித்து ஓய்வூதியம் பெறுவது என்பதெல்லாம் கிடையாது’. இதிலும் அர்த்தம் இருக்கிறது.

   என்னுடைய வாழ்வை, ஐ.டி. Profession ஐந்து சதவிகிதத்துக்கு மேல் மாற்றவில்லை, அதற்குக் காரணம் சிறு வயதிலிருந்தே எனக்கு என் அப்பா சொல்லிக்கொடுத்த நெறிமுறைகள், மற்றும் இந்தப் பணத்துக்கு நான் தகுதியானவன் இல்லை, I am only a custodian of the funds என்ற என் எண்ணவோட்டமும்தான்.

 3. Gopi சொல்கிறார்:

  மாறாத புதியவன் அவர்களுக்கு
  என் மரியாதையையும்
  பாராட்டுகளையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்.
  ஆனால், ஆயிரத்தில் ஒருவர் அல்ல;
  லட்சத்தில் ஒருவர் மட்டும் தான்
  இன்னமும் உங்களைப்போல்
  இருக்கிறார்கள். எனவே, சமூகம்
  என்பது மிக மிக பெரும்பான்மையான
  அவர்களை வைத்துதான்
  மதிப்பிடப்படுகிறது அல்லவா ?

 4. ranjani135 சொல்கிறார்:

  இன்றைய மகன் நாளைய ‘அன்றைய அப்பா’ உரையாடல் மாறுபடலாம். ஆனால் அவரும் தனது மகனிடம் பேச்சுக் கேட்கத்தான் போகிறார். அவரது இன்றைய மகன் இவரது நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்! இது ஒரு vicious சர்கிள். மாறாதது முடியாதது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக ரஞ்சனி மேடம்,

   நீண்ட நாட்களாயிற்று..
   இந்த தளத்தை மறந்து விட்டீர்களென்று
   நினைத்தேன்… மீண்டும் உங்களைக் காண
   மகிழ்ச்சி.

   நீங்கள் சொல்வது உண்மையே.
   இது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம்.
   பொருளாதார ரீதியாக பெற்றோர்கள்
   தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தால்,
   புறக்கணிப்பை ஓரளவு புறந்தள்ளி விடலாம்.
   தங்களை மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக்
   கொண்டு, அதில் நிம்மதியும், சந்தோஷமும்
   காண இயலலாம். பெற்றால் தான் பிள்ளையா…?
   உலகில் எவ்வளவோ பேர் அன்பிற்கும்
   ஆதரவிற்கும் தவிக்கிறார்களே; அவர்களுக்கு
   நம்மால் முடிந்ததை செய்யலாம்.
   அவர்கள் ஆனந்தத்தில் நாம் மகிழ்ச்சியடையலாம்.

   ஆனால், வறுமை, நோய் – ஆகியவற்றால்
   பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களுக்கு இது ஒரு
   மிகப்பெரிய வேதனை…

   அப்பேற்பட்டவர்களுக்கு ஒரே பிடிப்பு –
   இறை நம்பிக்கை தான்..

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.