திமுக-வில் ஸ்டாலின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறதா …?

….
….

PTI1_24_2020_000084B

….

திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது,
பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளராக
செயல்பட்டார்.

அப்போதெல்லாம், தலைவரான கலைஞர் –
பொதுச்செயலாளரான அன்பழகனிடம்
கலந்துபேசி விட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார்.

அன்பழகன் அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக
பல சமயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க முடியாமல்
போன சமயங்களில் கலைஞரே உரிய முடிவுகளை
எடுத்தாலும் கூட, பொதுச்செயலாளரிடம் கலந்து பேசி
முடிவுகள் எடுக்கப்பட்டன என்று தான் பொதுவெளியில்
அறிவிப்பார். பொதுச்செயலாளருக்குரிய அந்தஸ்து
தொடர்ந்து காப்பாற்றப்பட்டது.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு, திரு. ஸ்டாலின்
தலைவர் பொறுப்பேற்றபின்னரும் இந்த நிலை
தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.

ஆனால், அன்பழகன் அவர்களின் உடல்நிலை மிகவும்
மோசமான சமயத்தில், பொதுச்செயலாளருக்குரிய
சில முக்கிய அதிகாரங்கள் தற்காலிகமாக தலைவருக்கு
(அதாவது ஸ்டாலின் அவர்களுக்கு ) மாற்றப்பட்டன.
இது அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.

அன்பழகன் அவர்களின் மறைவிற்குப் பிறகு,
பொதுச்செயலாளர் பதவி நிரப்பப்படாமலே இருந்ததால்,
ஸ்டாலின் – தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய
இருவரின் அதிகாரங்களையும் ஏற்று, கிட்டத்தட்ட
கழகத்தின் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார்.

தற்போது பொதுச்செயலாளராக துரைமுருகன்
பொறுப்பேற்றுக் கொள்வதால், இதுவரை ஸ்டாலின்
அனுபவித்து வந்த பல அதிகாரங்கள் மீண்டும்
பொதுச்செயலாளர் (அதாவது துரைமுருகன்) வசம்
போகிறது.

எனவே, இனி ஸ்டாலின் எந்த முக்கிய முடிவுகளையும்
தானே அறிவிக்க முடியாது…. குறைந்த பட்சம்
பொதுச்செயலாளரிடமாவது கலந்தாலோசித்து, அவரது
ஒப்புதலையும் பெற்ற பிறகு தான் அறிவிக்க முடியும்.

அது போலவே, இதுவரை பொருளாளர் பொறுப்பை
தற்காலிகமாக துரைமுருகன் வகித்து வந்ததால்,
முன்னாள் பொருளாளராக, ஸ்டாலின் நிதி விஷயங்களில்
கிட்டத்தட்ட சுதந்திரமாக செயல்பட முடிந்தது.

தற்போது பொருளாளர் பதவிக்கென்று தனியே
டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால்,
நிதி விஷயங்களிலும் தன்னிச்சையாக ஸ்டாலின்
செயல்பட முடியாது.

ஆக, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரை
உரியமுறையில் கலந்தாலோசிக்காமல், இனி ஸ்டாலின்
தன்னிச்சையாக செயல்பட முடியாது….!!!

கடந்த 2 ஆண்டுகளாக திமுகவில் தனிக்காட்டு ராஜாவாக
செயல்பட்ட ஸ்டாலினின் தன்னாட்சி முடிவுக்கு வருகிறது.

துரைமுருகன் பொதுச்செயலாளராக வருவதைத் தவிர்க்க முடியாத
நிலையில், குறைந்த பட்சம் பொருளாளர் பதவிக்கு,
ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான எ.வ.வேலுவை
கொண்டுவர வேண்டுமென்று ஸ்டாலினும், அவரது
குடும்பத்தினரும் மிகவும் விரும்பினார்கள்…
ஆனால், துரதிருஷ்டவசமாக அதுவும் நடக்கவில்லை;
இந்த மாற்றங்கள் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின்
விருப்பம் இல்லாமலே தான் நிகழ்கின்றன.

துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகிய இருவருமே
தலைவரான ஸ்டாலினை விட, அரசியல் அனுபவமும்,
புத்திசாலித்தனமும் ( cunningness…? ), கட்சியில்
சீனியாரிட்டி அடிப்படையில் செல்வாக்கும் பெற்றவர்கள்.
ஸ்டாலினால், இவர்களை ஓரம்கட்டி விட்டு, தனிப்பட செயல்பட
முடியாது.

எனவே, திமுக-வில் ஸ்டாலின் அவர்களின் அதிகாரங்கள்
மட்டுப்படுத்தபடுகின்றன ( அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன)
என்று தான் சொல்ல வேண்டும்..

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திமுக-வில் ஸ்டாலின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறதா …?

 1. Karthikeyan சொல்கிறார்:

  இது எல்லாம் மாயை… பொதுச் செயலாளர் பதவி கூடிய விரைவில் அவங்க குடும்பத்திற்கே வந்து சேரும்… உதயநிதி அல்லது கனிமொழி

 2. புதியவன் சொல்கிறார்:

  அப்படி நான் நினைக்கவில்லை. டி.ஆர்.பாலுவும் துரை முருகனும் இனிமேல், தலைவர் ஸ்டாலின் அவர்கள் என்றுதான் எப்போதும் பேச வேண்டியிருக்கும். இருவரும் ஸ்டாலின் தயவு கிடைத்தால்தான் தங்கள் வாரிசுகளை கட்சியில் வளர்க்க முடியும். ஸ்டாலின் நினைத்தால் எந்தச் சமயத்திலும் மாவட்டங்களைப் பிரித்து அதிகாரங்களைக் குறைத்துவிட முடியும் (பாலம் என்ற காரணத்தைச் சொல்லி விஜயகாந்தின் இடத்திற்கு இடைஞ்சல் தந்ததைப்போல)

  அதுபோல ஸ்டாலினும் உதயநிதியை சுலபமாக கட்சியில் வளர்ப்பது கடினம். கருணாநிதிக்கு 50 வருடங்கள் நேரம் இருந்தது. ஸ்டாலின் பதவிக்கு வந்தே ஒரு வருடம்தான் ஆகிறது. கனிமொழிக்குத்தான் கட்சியில் எதிர்காலம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 3. Gopi சொல்கிறார்:

  // துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரை
  உரியமுறையில் கலந்தாலோசிக்காமல், இனி ஸ்டாலின்
  தன்னிச்சையாக செயல்பட முடியாது….!!! //

  உண்மை. ஸ்டாலினின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு
  விட்டன் என்பது உண்மை தான்.

 4. Gopi சொல்கிறார்:

  // ஸ்டாலின் நினைத்தால் எந்தச் சமயத்திலும்
  மாவட்டங்களைப் பிரித்து அதிகாரங்களைக்
  குறைத்துவிட முடியும். //

  மன்னிக்கவும். ஸ்டாலின் மட்டும் நினைத்து
  எதையும் இனி செய்திட முடியாது.
  அந்த அதிகாரம் தான் இப்போது
  மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

  • புதியவன் சொல்கிறார்:

   ஏதோ..யாரோ செய்ததைப் போலச் சொல்றீங்க… ஸ்டாலினுக்கு இருப்பது சில வாய்ப்புகள்தாம். இப்போ பதவிக்கு வந்திருப்பவர்கள் மக்கள்/கட்சி ஆதரவைப் பெற்றவர்களும் இல்லை, பெற வாய்ப்பும் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.