….
….
….
சென்ற பகுதியில் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம்…
இயக்குநர் ஸ்ரீதரும் கேமரா வின்செண்டும் சேர்ந்து படைத்த
வித்தியாசமான கோணங்களைக் கொண்ட படங்களைப்பற்றி
சொல்லிக் கொண்டிருந்தேன்….
அதே சமயத்தில், இசையிலும் ஸ்ரீதர் படங்கள் புரிந்த சில
சாதனைகள் பற்றி நினைவிற்கு வந்தது….
இசை காரணமாக ஸ்ரீதரின் மறக்க முடியாத படங்களின்
வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு படம் 1963-ல்
வெளிவந்த “நெஞ்சம் மறப்பதில்லை…”
கல்யாண்குமார், தேவிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில்
நடைத்த அந்தப்படம், நல்ல விமரிசனங்களைப் பெற்றபோதும்,
வசூல் ரீதியாக பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.
ஆனாலும் கூட, நெஞ்சத்தை விட்டு நீங்காத சில பாடல்கள்
அதில் இடம் பெற்றிருந்தன.
இயக்குநர் ஸ்ரீதரின் காலத்தில் வீடியோக்கள் எல்லாம்
வெளிவருகின்ற சூழ்நிலை இல்லை… ஸ்ரீதரின் புகைப்படங்கள்
நிறைய இப்போதும் கிடைக்கின்றன என்றபோதும்
ஸ்ரீதர் பேசுவது போன்ற காணொளிகள் அபூர்வம்…
நெஞ்சம் மறப்பதில்லை பாடல் குறித்து, எம்.எஸ்.விஸ்வநாதனும்,
ஸ்ரீதரும் உரையாடும் ஒரு அபூர்வ காணொளி, தூர்தர்ஷன் மூலம்
கிடைத்தது – ஒரு படத்திற்காக எந்த அளவு அவர்கள்
சின்சியராக உழைப்பவர்கள் என்பதை அது காட்டும்…கீழே ….
……
……
அவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய நெஞ்சம் மறப்பதில்லை
பாடலும், படத்தில் அது வரும் காட்சியும் கீழே –
சந்தோஷம், சோகம் இரண்டையும் பிரதிபலிக்கும் விதத்தில்
அதே பாடல் வெளிவந்தது….இரண்டும் கீழே… உங்களுக்கு
எது பிடிக்கிறதோ அதைப்பாருங்கள்….
……………
சந்தோஷம் –
……………
சோகம் –
…………….
ஸ்ரீதரின் இன்னொரு சுப்பர் டூப்பர் ஹிட் நகைச்சுவைப்படம்
“காதலிக்க நேரமில்லை…” இந்தப்படத்தைப்பற்றி நான் எதுவும்
சொல்லவே தேவையில்லை; நாகேஷும், டி.எஸ்.பாலையாவும்
நடித்த காட்சிகள் இன்றும் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை.
அநேகமாக வாசக நண்பர்கள் அத்தனை பேருமே
அந்தப்படத்தை பார்த்திருப்பீர்கள்.
இதன் இசையமைப்பாளரும் எம்.எஸ்.வி. தான்….
விஸ்வநாதன் வேலை வேண்டும்….!!!
….
….
காதலிக்க நேரமில்லை மற்றும் எம்.எஸ்.வி. குறித்து
தனது அனுபவங்களை யேசுதாஸ்
பகிர்ந்து கொள்ளும் காணொளி ஒன்று கீழே –
…………..
………………
.
—————————————————————————————————————————–