நக்கல் …!!!

….
….

சில நகைச்சுவை காட்சிகளை உருவாக்க நிறைய
யோசிக்க வேண்டும்… நேரம் செலவழிக்க வேண்டும்…
அப்படி உருவாக்கினாலும், பார்ப்பவர்களுக்கு
சிரிப்பு வரும் என்று guaranteeee கிடையாது.

ஆனால், சிலவற்றைப் பார்த்தவுடனே
பற்றிக்கொண்டு வருகிறது சிரிப்பு…

இத்தனைக்கும் பெரிய செய்தியோ, வார்த்தைகளோ
இங்கே இல்லவே இல்லை…

நீங்களே பாருங்களேன்….

சிரிப்பூட்டும் அதே நேரத்தில், இந்த தலைப்பும்,
புகைப்படமும் எத்தனை செய்திகளை
மறைமுகமாகச் சொல்கின்றன… !!!

அவரை வைத்து இவரையா…
அல்லது இவரை வைத்து அவரையா…???

ஒரே கல்லில் இரண்டு மாங்கா…!!!!!!!!!!!!!!

வாழ்த்துகள் புருஷோத்தமன்…!!!

…………….

……………..

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to நக்கல் …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் எங்க உருப்படப்போகுது?

  2. jksmraja சொல்கிறார்:

    சீமான் பேசக்கூடிய அரசியல், அவரின் கொள்கைகளை பற்றி பேச எந்த நாயுக்கும் துப்பு இல்லை. இந்த லட்சணத்தில் அவர் சாப்பிட்டதாக சொன்ன ஆமை கறி பற்றி கிண்டல் வேறு. நான் சின்ன வயதில் இருந்த போது எங்கள் ஊரில் கறிக்காக ஆமையை கிணற்றில் வளர்ப்பார்கள். வனத்துறை அதிகாரிகள் ஆமையை சாப்பிடுபவர்களை கைது செய்ய ஆரம்பிடித்த பின்பு ஆமை வளர்ப்பதை விட்டுவிட்டார்கள். நான் கல்லூரியில் படிக்கும் போது வட மாவட்ட நண்பர்கள் நண்டு சாப்பிடுவதை பற்றி பேசும் போது நாங்கள் கேலி செய்வோம். இப்பொழுதும் திருநெல்வேலி தென்காசி மாவட்டக்காரர்களை கேட்டு பாருங்கள் நண்டு சாப்பிடுவதை பற்றி தெரியாது. அதுபோல தான் இதுவும். நரி குறவர்கள் பூனை கறி சாப்பிடுவார்கள் உங்களுக்கு தெரியுமா? ஆகையால் சீமானின் அரசியலை பேசுங்கள். சாப்பாட்டை அல்ல

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      jksmraja,

      எது காமெடி, எது சீரியஸ்
      என்று கூட புரிந்துகொள்ளாமல்
      ஏன் இப்படி எதற்கெடுத்தாலும்,
      உணர்ச்சி வசப்படுகிறீர்கள்…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்…

    தமிழக பாஜக தலைவர், பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளில் வெற்றி பெறும்னு சொல்லியிருக்கிறாரே… இந்த 60 தொகுதிகள் எந்த மாநிலத்தில் என்று ஆராய்ந்து சொல்ல முடியுமா?

  4. Ramnath சொல்கிறார்:

    jksmraja: It is just like a Cartoon.
    Enjoy the Fun; See how beautifully
    the other person with “mayil” has been
    brought in .

  5. jksmraja சொல்கிறார்:

    ஒரு தனிப்பட்ட மனிதனின் பழக்க வழக்கங்கள், சாப்பாட்டு முறை, உருவ அமைப்பை வைத்து கார்ட்டூன் போடுவதும் அதை ரசிப்பதும் காமடி அல்ல. அது வக்கிரத்தின் உச்சம்.

  6. jksmraja சொல்கிறார்:

    புதியவன் ஐயா

    அவர் தமிழ் நாட்டில் என்று சொல்வதாக நினைக்கின்றேன்.

    பிஜேபி எலெக்ஷன் கமிஷன் உடன் கூட்டணி போட்டு EVM உதவியோடு பெற்று விட முடியும் என்பதை சொல்கிறார். நடிகர் ரஜினி காந்த்-க்கு இவர்கள் தூபம் போட்டு அதை மீடியா உதவியுடன் ஊதி பெரியதாக ஆக்க முயற்சித்தே: ரஜினி காந்த், பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், AC ஷண்முகம், பிஜேபி, எலெக்ஷன் கமிஷன், பண விநியோகம் மற்றும் சில சில்லறை கட்சிகளுடன் கூட்டணி போட்டு EVM உதவியோடு வெற்றி பெற்று விடலாம் என்பதுதான். ஆனால் ரஜினி காந்த் புத்திசாலி. ஐம்பதை நூறு ஆக்கலாம் ஸிரோவை நூறு ஆக்க முடியுமா என்பதை புரிந்த நடிகர் ரஜினி காந்த் இந்த ஆட்டத்தில் இருந்து விலகி விட்டதாக நினைக்கிறேன்.

    • புதியவன் சொல்கிறார்:

      எலெக்‌ஷன் கமிஷன் என்றெல்லாம் எழுதியிருப்பது ரசிக்கத்தக்கதல்ல. பொதுவா எலெக்‌ஷன் கமிஷன், நீதித்துறை போன்றவை அரசியலுக்கு அப்பாற்பட்டது. எலெக்‌ஷன் கமிஷனை உபயோகிக்க முடியும் என்றிருந்தால் ஊழலில் ஊறிய பொம்மை தலைமையிலான காங்கிரஸ், திமுக, என்றைக்கோ ஊழலில் சம்பாதித்ததை அள்ளி எறிந்து அரசில் அமர்ந்திருக்க முடியும். அப்படி நடந்தது கிடையாது. வாதத்திற்கு பாஜகவை எடுத்துக்கொண்டாலும், அதுவும் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்ரதேசம் போன்றவற்றில் அரிதிற் பெரும்பான்மை பெற்றிருக்க முடியும். தேர்தல் ரிசல்ட் என்பது மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பது. அதனைக் கேள்விக்குரியதாக ஆக்க முடியாது.

      பண விநியோகம், ஒவ்வொரு மதத்தில் உள்ளவர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களை கடவுள்/மதம் /ஜாதி பெயரால் வற்புறுத்தி வாக்களிக்கச் செய்வது என்பதெல்லாம் காலம் காலமாக இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

    • சாமானியன் சொல்கிறார்:

      பிஜேபி ஜெயித்தால், EVM மேல் பழியை போட்டு திருப்தி பட்டு, கொண்டு இருப்பது இன்னும் நகைச்சுவையையாகவே படுகிறது.போன தேர்தல்களில் திமுக ஜெயிக்கும் பொழுது இவர்கள் இந்த EVM கோஷத்தை மறந்து விட்டு, மக்கள் பிஜேபியை நிராகரிக்கிறார்கள் என்று கூறி சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.
      எலெக்ஷன் கமிஷன் ஏதோ இவர்கள் வீட்டு அடியாட்கள் போல சித்தரிப்பது இவர்களது அறிவின்மையின் வெளிப்பாடே.

  7. Jksmraja சொல்கிறார்:

    புதியவன் ஐயா

    துரைமுருகன் பண விநியோகத்தை பிடிக்க தெரிந்த எலெக்ஷன் கமிஷனுக்கு AC சண்முகத்தின் பண விநியோகத்தை பிடிக்க தெரியவில்லையே சார். .சாதாரண வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை பிடிக்க தெரிந்த எலெக்க்ஷன் கமிஷனுக்கு கண்டைனர் முழுவதும் பணத்தால் நிரப்பி சுற்றி வந்த லாரியை பிடிக்க முடியவில்லையே சார். இது எல்லாம் எப்படி சார் .

    • பாலாஜி சொல்கிறார்:

      JKSMRAJA,
      உ்ங்கள் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன்

    • புதியவன் சொல்கிறார்:

      எலெக்‌ஷன் கமிஷன் வேறு. தேர்தல் பணிகள் வேறு. ஒரு உதாரணத்துக்கு ப.சி. எம். பி எலெக்‌ஷனில் வாக்குகளை எழுதியவர் (வேண்டுமென்றே என நான் நம்புகிறேன். விலைக்கும் வாங்கியிருக்கலாம்) மாற்றி எழுதி ப.சி வெற்றிபெற்றவராக அறிவித்தார். காங்கிரஸ்/திமுக ஆட்சியின்போது அதிமுகவுக்கு குடைச்சலும், திருமங்கலம் போன்ற அனைத்து இடங்களிலும் பண விநியோகத்துக்கு அதிகாரிகள் துணை போயினர். அதிமுக ஆட்சியிலும் அப்படி உதவி நடந்திருக்கும். பொதுவா ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக போலீஸும் தேர்தல் அதிகாரிகளும் நடக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் இதற்கும் வாக்குகள் பதிவு, எண்ணிக்கை, ரிசல்ட் வெளியிடுவது இவை, அனைத்துக் கட்சி கண்காணிப்பில் நடப்பவை என்று நம்புகிறேன்.

      எனக்குத் தெரிந்து, ப.சிதம்பரத்துக்குச் செய்தது தவிர, ரிசல்டில் எந்த விதமான குளறுபடிகளும், கோல்மால்களும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

  8. jksmraja சொல்கிறார்:

    புதியவன் ஐயா

    சிதம்பரத்திற்கு நடந்தது ஆளும் கட்சியை சேர்ந்த மற்றவர்களுக்கு ஏன் நடக்காது?. அப்பாவு- க்கு நடந்தது என்ன சார்.

    “காங்கிரஸ்/திமுக ஆட்சியின்போது அதிமுகவுக்கு குடைச்சலும், திருமங்கலம் போன்ற அனைத்து இடங்களிலும் பண விநியோகத்துக்கு அதிகாரிகள் துணை போயினர். அதிமுக ஆட்சியிலும் அப்படி உதவி நடந்திருக்கும். பொதுவா ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக போலீஸும் தேர்தல் அதிகாரிகளும் நடக்க வாய்ப்பு இருக்கு”.

    இதற்க்கு பெயர்தான் தேர்தல் கமிஷன் கூடடணி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.