பத்தோடு பதினொண்ணு …… !!!

….
….

….

வேடிக்கையாகச் சொல்வார்கள்…
பத்தோடு பதினொண்ணு – அத்தோடு இதுவும் ஒண்ணு – என்று…

ஆனால் பாஜக-வில் நிஜமாகவே
அப்படி நடக்கிறது பாருங்கள்…

பத்திரிகைச் செய்தி –
( https://www.minnambalam.com/politics/2020/08/29/40/annamalai-appointed-
state-bjp-vice-prisident )
————-

பாஜகவில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளேயே முன்னாள்
ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பதவி
வழங்கப்பட்டுள்ளது.
———–
தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் இன்று (ஆகஸ்ட் 29)
வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா
கட்சியின் மாநில துணைத் தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ( …???)
அண்ணாமலை நியமிக்கப்படுகிறார்.
அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
————-

அண்மையில் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த
வி.பி.துரைசாமிக்கும் துணைத் தலைவர் பதவி
வழங்கப்பட்டிருந்தது.

தமிழக பாஜகவில் தற்போது வி.பி.துரைசாமி, நயினார்
நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட 10 பேர் மாநில
துணைத் தலைவர்களாக உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

——————

மேலே புகைப்படத்தைப் பாருங்கள்…
காமெடியாக இல்லை….?
அண்ணாமலை திக்கு முக்காடி, திகைத்துப்போய்
இருப்பது போல் தெரியவில்லை…?

பாஜகவில், தமிழக பாஜகவில் –
11 துணைத்தலைவர்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கும்…?

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பத்தோடு பதினொண்ணு …… !!!

 1. Ramnath சொல்கிறார்:

  இதுக்கே அசந்தால் எப்படி சார்
  பாஜக சார்பில் நின்று ஜெயிக்கும்
  எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேருக்கும்
  துணை முதல்வர் பதவி காத்திருக்குதாமே !

 2. புதியவன் சொல்கிறார்:

  //பாஜகவில், தமிழக பாஜகவில் – 11 துணைத்தலைவர்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கும்…? //

  இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவேண்டி இருக்கேன்னு நினைக்கிறேன். அவங்கள்லாம், இத்தனை பதவிகளில் ஆட்கள் இருப்பதனால் வாக்கு சதவிகிதம் அதிகமாகாது, தொண்டர்கள் வரமாட்டார்கள் என்பதை பாஜக வுக்கு lesson teach பண்ணும் வேலையைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

  அடுத்த கட்சியிலிருந்து ஆட்களை வைத்து நம் கட்சியை வளர்க்கலாம் என்ற நினைப்பு, பக்கத்து வீடுகளில் இருக்கும் செடியைப் பிடிங்கி நம் தோட்டத்தில் நட்டு, பூங்கா அமைப்பது போன்று அல்ல. இவையெல்லாம் ஒரு நாள் செய்திக்கு உதவும். பாஜக செய்வது, காங்கிரஸுக்கு போட்டியா. பொதுவா காங்கிரஸில்தான் தலைவர்கள், தொண்டர்கள் எண்ணிக்கையைவிட அதிகம்.

  Grass root levelல் தொண்டர்களை வளர்க்கணும். (RSS போன்று). இது நடந்துகொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

  நான் தனிக் கட்சி என்று காட்டி, நான் மாற்றத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தணும். இதை உருவாக்கிய சுண்டைக்காய்களுக்கும் (sorry to use this word, but they were not having big team) தமிழக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் (நான் சொல்வது குறைந்த பட்சம் 8-10 சதவிகிதம் முதல் தேர்தலிலேயே). மக்கள் எப்போதும் நல்லவர்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜக, காங்கிரஸுடன் மட்டும் தமிழகத்தில் போட்டி போட நினைக்குது. அந்தக் கட்சி செய்ததையே follow பண்ணுது. இதனால் எந்த விளைவும் ஏற்படாது.

  இப்போ காங்கிரஸ் (தேசிய அளவில்), திமுக, நாங்களும் ஹிந்துக்களின் நண்பர்கள்தாம் என்று சொன்னால் அது எடுபடாது. பாஜக, மற்ற கட்சிகளின் அஜெண்டாவை காப்பி அடித்தால் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை, They are only conveying to common people that the existing parties practices are correct only.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   தமிழக பாஜகவைப் பொறுத்த வரையில்,
   தலைவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில்,
   பயன் பெற்று விட்டார்கள்; தற்போதும் அனுபவித்துக்
   கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால்
   உறுதியாகச் சொல்ல முடியும்… சில விஷயங்களை
   பார்த்த பிறகு தான் இதைச்சொல்கிறேன்.

   தொண்டர்களைப் பொறுத்தவரையில்,
   பெரும்பாலானோர், மத உணர்வுகளால்
   ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

   அகில இந்திய பாஜகவைப்பற்றி நான்
   இங்கு எதுவும் கூறவில்லை;
   அதன் வழி – தனி வழி…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   //ஏதோ ஒரு விதத்தில், பயன் பெற்று விட்டார்கள்; தற்போதும் அனுபவித்துக்
   கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்…//

   எனக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸிலிருந்து வருபவர்களும் ‘அற்ற குளத்து அரு நீர் பறவை’கள்தாம். கொள்கை பிஸினெஸெல்லாம் தலைவர்களுக்குக் கிடையாது, அவங்களுக்குத் தெரிந்தது பிஸினெஸ் மட்டும்தான்.

   நீங்கள் சொல்லியிருப்பதுபோல தொண்டர்களை மத உணர்வுதான் பிணைக்கிறது என்பதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அது ஒரு மாயை (மத உணர்வு) என்றும் தோன்றுகிறது (தலைவர்களுக்கு அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லை என்பதைப் பார்த்த பிறகு)

   “மாயை” (myth) என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வந்த போது நான் அங்கு செல்ல விரும்பவில்லை. Ego காரணமாக Offer Letters மட்டும் வாங்கி என் fileல் வைத்திருக்கிறேன். என் கலாச்சாரம் மாறுபடுவதை, என் பசங்க வேறு கலாச்சாரத்திற்குச் செல்வதை நான் விரும்பவில்லை. ஆனால் நங்கநல்லூரில் ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இதெல்லாம் மாயை என்றார். You can’t control the future of your kids. Once you are dead, you can’t control anything. அப்புறம் ஏன் அதைப்பற்றி ரொம்ப விசாரம் என்றார். I asked him, will you settle in Australia with your kids? Will you be happy to see your end in that land? He said, what is the big fuss about it? எங்க இருந்தாலும் போகத்தானே வேணும். நாம் போன பிறகு நம் bodyஐ என்ன பண்ணறாங்க என்பதற்கும் நமக்கு control கிடையாது என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    நீங்கள் சொல்வது போல், நமது வாரிசுகளின்
    எதிர்காலத்தை முற்றிலுமாக நாம் தீர்மானித்து விட
    முடியாது என்பது உண்மையே… ஆனாலும் கூட,
    நாம் அவர்களை வளர்க்கும் விதத்தில்,
    சொல்லிக் கொடுக்கும் விதத்தில், 15-20 வயது
    வரை நிச்சயம் influence செய்ய முடியும் …
    subject to the condition that how we maintain –
    retain – our relationship with them…
    நான் என்னிடம் அவர்கள் எதைப்பற்றி
    வேண்டுமானாலும் பேசலாம் –
    எதிர்க் கருத்துகளை கூட என்று சொல்லிதான்
    அவர்கள் வளர்ந்தார்கள். 20 வயதிற்கு மேல்,
    அவர்களின் உள்ளுணர்வு சொல்வதைத்தான்
    அவர்கள் செய்வார்கள்.

    என் குறைந்தபட்ச விருப்பம் –
    இந்திய மண்ணில் தான் நான் சாக வேண்டும்
    என்பது…( முடிந்தால், காவிரிக்கரையில்
    தகனம்….) இது கடவுள் அருளால்
    நிறைவேறும் என்று நம்புகிறேன்…
    என் வாரிசுகள், எதிர்காலத்தில் –
    ஒருவேளை வெளிநாட்டில்
    செட்டில் ஆனாலும் கூட,
    நான் செல்ல மாட்டேன். இந்த மண்ணின் மீது
    எனக்கு அளப்பரிய காதல் இருக்கிறது.
    நான் இங்கேயே செத்துப்போய் மீண்டும்
    இங்கேயே பிறக்க வேண்டுமென்றே
    விரும்புகிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் 67 முதல் திராவிட கட்சிகள் ஆண்டு
  வருகின்றன . புதிதாக ஒரு கட்சியும் வரவில்லை .

  தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபடவில்லை .
  கம்யூனிஸ்ட் கட்சி உட்பட . இந்த கட்சிக்கு
  ஈர்ப்புடன் வேலை பார்க்கும் தொண்டர்கள் உண்டு .

  காங்கிரஸ் பற்றி ஒரு நல்ல எண்ணம் இருந்தாலும்
  அந்த கட்சிற்கு தொண்டர்கள் கிடையாது .
  ஆனால் இன்னும் 4-5 % ஒட்டு உண்டு .

  தி மு க , அ தி மு க என்று மாற்றிமாற்றி வருகின்றன .
  தி மு க ஒரு காலத்தில் கட்டுக்கோப்புடன் இருந்தது .
  இப்போது குடும்ப கட்சி ஆகி விட்டது .
  இளைஞர்கள் இந்த கட்சியில் சேர வருவதில்லை .

  பா ஜ க தமிழ்நாட்டில் வந்து இருக்கலாம் .
  கட்சியை வளர்க்க ஆள் எடுக்கலாம் .
  சரியான அமைப்பு , தொண்டர்கள் என்று
  கொஞ்சம் கொஞ்சமாக வந்து இருக்கலாம் .
  இந்தி படி என்று சொன்னால் தமிழ்நாட்டில்
  அடி விழும் – ஒட்டு விழாது .

  கட்சியில் இருக்கும் யாருக்கும் பேச தெரியவில்லை .
  தேச பக்தாள் பண்ணிய ஒரே வேலை – பெரியாரை
  பற்றி பேசி , இப்போது இளைஞர்கள் பெரியார்
  பற்றி படிக்கச் ஆரம்பித்து விட்டார்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மெய்ப்பொருள்,

   பெரியாரைப் படித்தாலும் சரி,
   மோடிஜியைப் படித்தாலும் சரி,
   நமது இளைஞர்கள் யாருக்கும்
   அடிமையாகாமல், சுயசிந்தனையோடு
   இயங்க வேண்டும் என்பதே
   என் விருப்பம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.