….
….
….
இது எல்லாருக்குமான ஒரு பொதுப்பிரச்சினை.
கொரோனா சமயத்தில் வெளியேயிருந்து
வாங்கி வரும் காய்கறிகளை க்ளீன் செய்வது
பெரும் பொறுப்பாக இருக்கிறது.
நான் செய்வது –
நல்ல பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில்,
கல் உப்பு கொஞ்சம், மஞ்சள்பொடி கொஞ்சம் போட்டு,
நன்றாகக் கலக்கிவிட்டு – அதன் பின்
வாங்கி வந்த காய்களை ஒவ்வொரு ரகமாக உள்ளே போட்டு,
3-4 நிமிடங்கள் கழித்து அலசி வெளியே எடுத்து,
மீண்டும் கிச்சன் sink-ல் போட்டு குழாயைத் திறந்துவிட்டு,
நன்றாக அலசி எடுத்து, பிறகு fan கீழே பரப்பி
உலர்த்துகிறேன்.
கடந்த 5 மாதங்களாக அலுக்காமல் – வேறு வழி ? –
தொடர்ந்து செய்து வருகிறேன்.
இதைவிட ஈசியான, நம்பகமான வழி யாருக்காவது
தெரிந்திருந்தால், இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்…
அண்மையில் ஒரு காணொளி பார்த்தேன்…
கொரோனா சமயத்தில், வெளியேயிருந்து
வாங்கி வரும் காய் கறிகளை
சுத்தம் செய்ய, வட இந்தியர் ஒருவர்
வித்தியாசமான,
வெகு சுலபமான ஐடியா வைத்திருக்கிறார்….!
Necessity is the Mother of Invention…!!!
….
….
.
————————————————————————————————————————-
பிஸ்சா பர்கர் போன்ற உணவு பொருள்களை எப்படி சுத்தம் செய்வது என்பதயும் யாராவது சொல்லுங்கள் ப்ளீஸ். அதெல்லாம் சாப்பிடாதீங்கன்னு சொல்லப்ப்டாது !!!
East after washing
I don’t want to discourage you washing vegetables but you do cook these vegetables before eating.
Rajs
WHAT A GREAT IDEA !
கா.மை. சார்… காய்கறிகளை எப்போதும்போல, ஆனால் கையில் க்ளௌஸ் போட்டுக்கொண்டு சுத்தம் செய்யணும் (ஒரு வேளை காயில்/பழத்தில் கொரோனா இருக்குமானால்). நான் நன்றாக தண்ணீரில் அலசுகிறேன். ஒருவேளை க்ளௌஸ் இல்லை என்றால், காயைச் சுத்தம் செய்த பிறகு, என் கைகளை நன்றாக சானிடைசர்/சோப் போட்டு கழுவுகிறேன். (இதற்கிடையில் மூக்கைத் தொடுவது, வாயைத் தொடுவது, கண்ணைக் கசக்குவது கூடாது).
பிறகு எப்போதும்போல உணவு சமைக்க வேண்டியதுதான்.
நாங்கள் அனேகமாக எல்லாக் காய்/பழங்களையும் உடனுக்குடன் உபயோகிப்பதில்லை. (அதன் மீது இருமியிருக்கலாம், நோயுற்றவர் தொட்டிருக்கலாம்) மறுநாள்தான். அதனால் வைரஸை ரிட்டெயின் செய்வது இருக்காது என்று நம்புகிறேன். தோலை எடுக்கும் காய்கறிகளை, பழங்களை உடனுக்குடன் உபயோகிப்பதானால் பாதகமில்லை. (Exposed பகுதியை வெட்டி தூரப்போட்டுவிட வேண்டும்).
பொதுவாக எல்லாவற்றையும் நாம் சமைப்பதால், உணவில் பிரச்சனை வராது. யாரையும் முடிந்த அளவு சந்திக்காமல் இருப்பது, முகக் கவசம் இருந்தால்தான் (இருவருக்கும்) 5 அடி இடைவெளியிலாவது பேசுவது, 30 விநாடிகளுக்கு மேல் அருகருகே இருந்து பேசாமல் இருப்பது, ஆசாமி இருமினால் உள்ளேயே அனுமதிக்காமல் இருப்பது – இவை basic பாதுகாப்பு. இதையும் மீறி சிலருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. இது கவனக்குறைவோ இல்லை விதியாகத்தான் இருக்கணும்.
2. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்வரை முகக் கவசம் வேண்டும். யார் மீதும் படாமல் இருக்கணும், இல்லைனா வந்த உடன் உடைகள் துவைக்கவேணும், குளிக்கவும் வேணும். இதுதான் முக்கியம்.
3. ஆன்லைன் அல்லது வெளியிலிருந்து வரும் எதையும் அப்படியே போட்டுவிட்டு மறுநாள்தான் உபயோகிக்கணும். In my opinion, Papers, பத்திரிகைகளுக்கு இது பொருந்தும்.
4. மஞ்சளில் கழுவி, நீரில் கழுவி…. ரொம்ப ரொம்ப precaution எடுக்கத் தேவையில்லை என்பது என் அபிப்ராயம். அதைவிட பொது இடங்களில் புழங்காமல் இருப்பது, ஓய்வுபெற்றவர்களுக்கு மிக மிக முக்கியம். நான் காலையில் முதல் உணவாக, சூடான நீர் அருந்துகிறேன், இரவின் கடைசி உணவும் அதுதான். முடிந்த வரை இடையில் வெந்நீர்தான் குடிக்கிறேன்.
வெளியில் செல்வது, பொது இடங்களில் செல்வதுதான் பெரும்பாலும் வைரஸ் பரவலுக்குக் காரணம். வேறு வேலைகளினால் அன்றே எழுத முடியாமல் போய்விட்டது.
புதியவன்,
உங்கள் விவரமான பின்னூட்டத்திற்கு நன்றி.
நான் சில யோசனைகளை உங்களிடமிருந்து
எடுத்துக் கொள்கிறேன்.
எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கூட,
சில சமயங்களில் எங்கோ தவறுகிறோம்
என்று தோன்றுகிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்