….
….
….
தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்,
பாராளுமன்ற உறுப்பினர் திரு.வசந்த் அவர்களின்
மறைவு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.
நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும் கூட,
அதன் மூலம் சம்பாதிக்க நினைக்காமல்,
முழுக்க முழுக்க தனது சுயமுயற்சிகளாலும்,
வியாபாரத் திறத்தாலும் மட்டுமே முன்னுக்கு
வந்தவர்.
நேர்மையாக உழைத்தே ஒருவரால்
எந்த அளவிற்கு முன்னுக்கு
வர முடியும் என்பதை நிரூபித்தவர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அவரது
படிப்படியான, நேர்மையான வர்த்தக உயர்வைக் கண்டு
வியந்து பார்த்திருக்கிறேன்.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்ட
அவர், அனைவராலும் விரும்பப்பட்டவராக
இருந்தார்.
அவரது ஆன்மா சாந்தியடைய
பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தினருக்கு
நமது ஆழ்ந்த வருத்தங்களை
தெரிவித்துக் கொள்வோம்.
.
-காவிரிமைந்தன்
28 ஆகஸ்ட், 2020
ஆழ்ந்த இரங்கல்கள்