….
….
….
இந்த காணொளியைப் பார்த்ததும் எனக்கு அந்தப்பாடல்
வரிகள் தான் நினைவிற்கு வந்தன….
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
அந்த ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி –
அந்த ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை….
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை…!!!
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்…
….
….
….
நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா – தம்பி
நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா…
——————
பழக்கப்படுத்திய நாயைக்கொண்டு எடுக்கப்பட்ட
காட்சிகள் தான் என்றாலும் கூட –
இந்தக் காணொளியில் காணும்
நாயின் செயல்கள் மனதைக் கவர்கின்றன.
சில சமயங்களில் பழகிய மனிதரை விட
பழகிய நாய்கள் அதிகம் விசுவாசம் காட்டுகின்றன
என்பது உண்மை …
மனிதரைப்போல், நாய்கள் எதிர்க்கேள்விகள்
கேட்பதில்லை; காரணங்கள் கேட்பதில்லை;
நாம் எதிர்பார்ப்பதை மட்டும் செய்கின்றன.
பல சமயங்களில் நமது அங்கீகாரத்திற்கு
மட்டும் ஏங்குகின்றன…
அருமையான காணொளி ஒன்று கீழே –
…..
…..
.
———————————————————————————————————
எனக்கு வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதும் பிடிப்பதில்லை, வளர்ப்பவர்கள், அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளாமல், அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்வதும், கண்ட இடத்தில் பாத்ரூம் போக விடுவதும் அருவருப்பாக இருக்கும்.
ஆனால் நாய் வளர்ப்பவர்கள், நாயுடன் ஒன்றிவிடுகிறார்கள். அது பிள்ளைகளைப் போல் அன்றி, எதிர்பார்ப்பில்லாத அன்பைச் சொரிகின்றன என்று விளக்கமளிக்கிறார்கள். நாயையோ பூனைகளையோ வளர்ப்பவர்கள் அவைகளை அவ்வளவு செல்லமாக குழந்தையைப்போல் பார்த்துக்கொள்வது எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கும்.
‘நன்றி/விசுவாசம்’ என்பது நாயிடமும், குதிரைகளிடமும் உண்டு. (காணொளி தயாரிக்கப்பட்டது)
சார், அந்த பாட்டையும் போடுவீங்கன்னு
எதிர்பார்த்தேன்.
அதற்கென்ன –
போட்டால் போச்சு…!!!
…
…
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்