….
….
….
முன்னாள் வடக்கு மாகாண முதல்வரும், தற்போது
தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய
திரு.சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை
நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த பிபிசி செய்தியை
நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்…
உலகிலேயே மூத்த தமிழ் மொழி இலங்கையின் ஆதி மொழி
என்றும் தமிழ் மக்கள் இலங்கையின் ஆதி குடிமக்கள்
என்றும் தனது முதல் முதலான பாராளுமன்ற உரையிலேயே
அவர் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
தைரியமான அவரது உரை வரவேற்கத்தக்கது.
அடுத்து பேசிய சிங்கள எதிர்க்கட்சி உறுப்பினர் ஏதோ
சிவிவி அவர்கள் பிரிவினை குறித்து பேசியதுபோன்ற
தோற்றத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்…. பிரிவினை
கோரிக்கை எப்போதோ கைவிடப்பட்டு விட்டது. இப்போது
இலங்கைத் தமிழர்கள் கோருவது சம உரிமை மட்டுமே…
இதை இந்திய அரசு நிச்சயம் ஆதரிக்கும்.
………
……..
இப்போது இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்கள்
இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதோடு,
சீனாவுடன் மிக நெருக்கமாக இருக்கின்றவர்களும்
கூட என்கிற சூழ்நிலையில் –
பாஜக அரசும், இவரும் நல்ல புரிதல்களுடன் இருந்தால்,
எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள், இந்தியா ஆகிய
இரண்டு தரப்பினருக்குமே சாதகமான
சூழ்நிலைகள் உருவாகலாம் என்று தோன்றுகிறது.
.
——————————————————————————————————–