அநேகமாக – இந்த ஆண்டின் மிகச்சிறந்த வீடியோ இதுவாகத்தான் இருக்க முடியும் …

….
….

….


….

பிரமாதமான ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கும்
ஒரு காணொளி கீழே –

மயக்கும் இசை …
அற்புதமான பின்னணிச் சூழல் …
அழகாக ஆடும் மயில்கள்…

காட்சிக்கு காட்சி மாறும்
பொருத்தமான உடையணிகள்…
மக்கள் நாயகர்…

எவ்வளவு நாட்களில்/மணித்துளிகளில் இது
படமாக்கப்பட்டதோ தெரியவில்லை … தெரிந்தால் அதையும்,

இதன், ஒளிப்பதிவாளர்,
இசையமைப்பாளர்,

தயாரிப்பாளர்,
இயக்குநர் ஆகியோர்

-யார் என்று தெரிந்தால்
அவர்களையும் சேர்த்து பாராட்டலாம்….

உரியவர்களுக்கு –
இந்த அருமையான சாதனைக்காக
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

மறந்து விட்டேனே – இத்தகைய அருமையான
ஒரு யோசனை
யாருக்கு தோன்றியதோ –
அவருக்கு நமது முதல் பாராட்டுகள்.

இந்தக் கவிதையை புரிந்துகொள்ளும் அளவிற்கு
எனக்கு ஞானம் இல்லை;
இருந்தாலும் நிச்சயம் இது வாஜ்பாய் அவர்களின்
கவிதைகளைப் போல் சிறப்பானதாகத்தான் இருக்கும்…

…..

…..

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to அநேகமாக – இந்த ஆண்டின் மிகச்சிறந்த வீடியோ இதுவாகத்தான் இருக்க முடியும் …

 1. புதியவன் சொல்கிறார்:

  வாழ்க்கை முழுதும் இட்லி தோசை சாப்பிடுபவனிடம் நீங்க வெஸ்ட் இன்டீஸின் சிறந்த உணவு இது, தென் ஆப்பிரிக்கர்கள் ஞாயிறு தோறும் சாப்பிடும் உணவு, நாகாலாந்து பிரதேசத்தில் இதுதான் தேசிய உணவுன்னு என்னெல்லாமோ சொல்லி விற்கப் பார்க்கிறீங்களே…

  வள்ளலார் சொன்ன வாசகம்தான் நினைவுக்கு வருது. கடை விரித்தேன் கொள்வாரில்லை..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   .
   உங்களுக்கு ரசனை போதாது….!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இப்போதான் லேப்டாப்பில் பார்த்தேன் (ஐபேடில் காணொளி தெரிவதில்லை). பார்க்க பெரியார் ஈ வெ ரா மாதிரி கெட்டப்புல எடுத்துருக்காங்களே.

    On a serious note, தில்லில பங்களாக்களில் நிறைய மயில்கள் உண்டு. அந்தப் பின்னணில விளம்பரத்துக்காக எடுத்துருப்பாங்களோ? ‘தலைவர்’ மக்களுக்காக கஷ்டப்படுவதுபோல எடுத்தால்தான் அது மக்கள் மனதில் தங்கும். அவருக்கு இதைச் சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லையா?

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  காட்சிக்கு காட்சி மாறும்
  பொருத்தமான உடையணிகள்…
  மக்கள் நாயகர்…

 3. புவியரசு சொல்கிறார்:

  எண்ணினேன். 7 முறை உடை,
  அணிகலன் கள் மாற்றம்.
  5 முறை லொகேஷன் கள் மாற்றம்.
  உண்ணும்போது வேறு மயில்.
  தோகை விரிக்கும்போது வேரு மயில்,
  மயில்கள் தோகை விரிக்கும் வரை
  காத்திருந்து கரெக்டாக அப்போது
  பார்த்து நடந்து வர வேண்டும்.
  அவ்வப்போது காஸ்டியூம் சேஞ்ச் வேறு.
  நிறைய பாடுபட்டிருக்க வேண்டும்.

  இந்த பஞ்ச காலத்தில்
  இப்படியொரு வீடியோ எடுத்து விட
  வித்தியாசமான ரசனையும்
  மனமும் வேண்டும். இருக்கிறது.
  கொத்து வைத்தவர்கள்
  இந்நாட்டு மக்கள்.

 4. புவியரசு சொல்கிறார்:

  உங்களுக்குப் பிடித்த பாரதியின் பாடல்
  நினைவிற்கு வருகிறது;
  “எங்கிருந்தோ வந்தான்
  இடைச்சாதி நானென்றான்
  இங்கிவனை நான் பெறவே
  என்ன தவம் செய்தேனோ ”
  பாரதியின் பாடல் எந்த வித
  சூழ்நிலையிலும் உதவுகிறது. !

 5. Ramnath சொல்கிறார்:

  ” இருந்தாலும் நிச்சயம் இது வாஜ்பாய் அவர்களின்
  கவிதைகளைப் போல் சிறப்பானதாகத்தான் இருக்கும்…”

  சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
  படிப்பவர்களின் மனநிலையைப் பொருத்து
  இதை எப்படி வேண்டுமானாலும்
  எடுத்துக் கொள்ளலாம்.

 6. Gopi சொல்கிறார்:

  உங்கள் இடுகையை
  படிக்கும்போது
  ரோம் பற்றி எரியும்போது
  நீரோ மன்னர் பிடில்
  வாசித்துக் கொண்டிருந்தார்
  என்கிற வாசகம் நினைவுக்கு
  வந்தது.

 7. Rajagopal சொல்கிறார்:

  வாக்கின் போவது சரி;
  மயில்களுக்கு உணவு
  கொடுப்பது; சரி;
  வீட்டில் இருக்கும்போதே
  அடிக்கடி உடைகளை
  மாற்றிக் கொள்வதும்; சரி;
  இதெல்லாம் அவரவர் பழக்கம்.
  ஆனால், இதையெல்லாம்
  வீடியோவாக எடுத்து
  பின்னணி இசை சேர்த்து
  மீடியாக்களுக்கு
  கொடுப்பது என்ன ரசனை ?

 8. Gopi சொல்கிறார்:

  இன்றைய தினமலர் சிறப்பு செய்தி:

  பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது

  பிரதமர் மோடி, இதுவரையிலும், போயிங்
  விமானத்தில் தான் வெளிநாடுகளுக்கு
  பயணம் செய்து வந்தார். அதில் வசதி
  குறைவு. இதனால், அமெரிக்காவிலிருந்து
  பிரதமர் பயணத்திற்காக புதிய விமானம்
  வாங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சிறப்பு
  விமானம், அடுத்த வாரம் டில்லி
  வர உள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.