முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி


….
….

….

அவ்வப்போது எதாவது பிரச்சினைகளை அதிரடியாக
கிளப்பும் டாக்டர் சுப்ரமணிய சுவாமி இப்போது
லேட்டஸ்டாக கிளப்பியிருக்கும் விஷயம்
நடைமுறையில் நடைபெற சற்றும் வாய்ப்பு இல்லை
என்றாலும் கூட, விவாதங்களைக் கிளப்பும் அளவிற்கு
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது….

” dmk-க்கு ஒரேவழி ஸ்டாலின் ரிசைன் பண்ணிடணும்.
மனைவிக்கு போஸ்ட் கொடுத்துடணும்… !!! ”

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு டாக்டர் சுவாமி
நேற்று கொடுத்த பேட்டி கீழே –

……….

……….

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி

 1. புதியவன் சொல்கிறார்:

  சார்… பேசாம நீங்களே முக்கியமான பாயிண்டுகள் என்று பத்து பாயிண்டை போட்டுடக்கூடாதா? உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். இவர் என்ன பேசுகிறார் என்று பொறுமையாக 40 நிமிஷம் கேட்கணுமா? சரி கேட்கிறேன்.

  1. கோர்ட் உத்தரவு போட்டாகிவிட்டால், அதற்கு அடிபணிந்துதான் நடக்கணும், அது விநாயகர் ஊர்வலமானாலும் சரி வேறு எதுனாலும் சரி – கரெக்டுதான்.
  2. திமுக இந்து மத எதிர்ப்பு கட்சி, தேசவிரோதக் கட்சி. சொல்வது ஒன்று செய்வது ஒன்று – அதாவது அவங்க குடும்பத்துல மத்திய அரசு ஹிந்திப் பள்ளிகளை நடத்துவாங்க, ஹிந்தி படிப்பாங்க, சமஸ்கிருத பெயர் வச்சுக்குவாங்க ஆனா ஊரை ஏமாற்றுவார்கள் – சரியாத்தான் சொல்கிறார்.
  3. ஒரு சீட்டு ரெண்டு சீட்டுக்கு கெஞ்சிக்கொண்டு கூட்டணி சேராமல் தனித்து நின்று தமிழகத்தில் பாஜக போராடணும்- நல்ல கருத்துதான். அப்படி இல்லாமல் கூட்டணிப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அந்தக் கட்சி வளரவே முடியாது, காங்கிரஸைப் போல கரைந்துதான் போகும் – சரியான கருத்துதான் from his party point of view.
  4. சசிகலாதான் கட்சியை வழிநடத்தினார்கள், ஜெ. அரசாட்சி மட்டும் பார்த்துக்கொண்டார் – அட.. இது என்ன புதுசா கண்டுபிடிக்கிறார்? ஜெ. இருந்தபோது இவர் எந்த உலகத்தில் இருந்தார்? கட்சிக்கு உழைக்கும் எந்தத் தொண்டனுக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்தப் பதவியும் தேடி வரும் என்ற நம்பிக்கையை விதைத்தது ஜெ. இருந்தாலும் அதிமுக, ஒரு தலைவன்/தலைவி பின்னால் அணி திரண்டால்தான் பிழைக்கும். அந்தத் தலைவன்/தலைவிக்கு மக்கள் அறிமுகம் இருக்கவேண்டும். சசிகலா அந்த ஒருங்கிணைப்பாளரா இருப்பாரா என்பது சந்தேகம்தான். காரணம், sizeable மக்கள் தொகையுள்ள பிரபல ஜாதியிலிருந்து தமிழகத்தில் முதலமைச்சர்கள் வர இயலாது. எப்போதும் மிகக் குறைந்த அளவு சதவிகிதம் உள்ள ஜாதியிலிருந்துதான் வர முடியும். அல்லது தேசியக் கட்சிகள் அப்பாயிண்ட் செய்யும் தலைவராகத்தான் வரமுடியும்.

  ஆனா, பாஜக தலைவர்கள் எல்லோரும், ஏதோ அவங்க, தமிழகத்துல கூட்டணியை வழி நடத்துவதுபோலப் பேசறாங்க. எனக்கு கவுண்டமனி நகைச்சுவைதான் நினைவுக்கு வருது (எடுக்கறது பிச்சை..இதுல எகத்தாளமா?)

  மீதியை அப்புறம் பார்க்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // உங்களுக்கு நான் என்ன கெடுதல்
   செய்தேன். இவர் என்ன பேசுகிறார்
   என்று பொறுமையாக 40 நிமிஷம்
   கேட்கணுமா? //

   “யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்…”

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    நிஜமான காரணமும் இருக்கிறது…

    சில பேட்டிகளில் அவர் என்ன சொல்கிறார்
    என்பதை செய்தித் தலைப்புகளை வைத்து
    நாம் முடிவு செய்வது தவறாகி விடும்.
    இந்த பேட்டியிலும் அதே மாதிரி தான்.

    தமிழகத்தின் அத்தனை செய்தி தளங்களிலும்
    சு.சுவாமி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து
    சொன்ன மாதிரி தலைப்பு போடுகிறார்கள்…
    ஆனால் – உண்மையில் அவர் எந்த
    சூழ்நிலையில் இதைச் சொல்லி விட்டு
    கடந்து போகிறார் என்பது பேட்டியை
    ஒழுங்காக முழுவதும் பார்த்தால் தானே
    புரிகிறது…

    அதற்காகவே நான் அந்த 40 நிமிட
    பேட்டியையும் பொறுமையோடு பார்த்தேன்.

    உங்களையும் கேட்க வைத்ததற்கு
    காரணம் – நான் ஒரு இடுகையை தயாரிக்க
    எவ்வளவு சிரமப்படுகிறேன் என்பது
    உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டுமல்லவா…!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  1. துர்க்கா ஸ்டாலின் கோவிலுக்குச் செல்வதால், இந்து கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் அவர் திமுக தலைவராக ஆனால் ஆதரிப்போம். சசிகலா 6 ஆண்டுகள் தலைவராக ஆகமுடியாது (அடப்பாவீ..அதுக்குத்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்து பொம்மை முதலமைச்சரை உட்கார வைக்கலாம் என்ற எண்ணமா?) . தமிழகத்தில் ஹிந்து கலாச்சாரமுள்ள அரசை அமைக்க முயற்சிப்போம். – திமுக, காங்கிரஸ் சிறுபான்மையினரைச் சார்ந்திருப்பதற்காக இந்து எதிர்ப்பு, கோவில் எதிர்ப்பு, இந்துக் கலாச்சார எதிர்ப்பு என்று பல தசாப்தங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தராசு முள்ளை ஒரேயடியாக ஹிந்து கலாச்சாரம் என்று மாற்ற முயல்கிறாரா? துர்கா ஸ்டாலின் – என் அவதானத்தில், அதற்கு கனிமொழி சரியான சாய்ஸாக இருப்பார், துர்கா அவர்களால் கட்சியை கட்டுப்படுத்த முடியாது.

  2. ராஜபக்‌ஷே ஆதரவு – இதுவும் எனக்கு சரியான முடிவாகத்தான் தெரியுது. அந்த நாட்டு மக்கள் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களிடம்தான் நாம் நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு நம்ம நாட்டின் இண்டெரெஸ்ட்தான் முக்கியம். இங்கிருக்கும் அல்லக்கை அரசியல்கட்சிகள் மாதிரி, பொதுத்தளத்தில் எதிர்ப்பு, பிறகு ராஜபக்‌ஷேவைச் சந்தித்து கையூட்டு பெற்றுக்கொண்டு பல் இளிப்பது என்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்குச் சரிப்பட்டு வராது.

  3. இந்த நெறியாளர் கேட்கிறார்… ஊடகங்கள் பாஜக சார்பாக இருக்கு என்று. தமிழகத்தில் ஊடகங்கள் எதுவும் தேச நலனுக்கு எதிராகத்தான் செயல்படுது, திமுகவின் அடிமைகளாக இருக்கு, இந்து மத எதிர்ப்பு, சிறுபான்மை ஆதரவு என்ற நிலையை எடுத்திருக்கிறது என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். தமிழகத்தில் 30 சேனல்களில் 30மே கட்சியாளர்களால் நடத்தப்படுவது. அதில் ஒன்றுகூட பாஜக வினால் கிடையாது என்பது யாருக்குத்தான் தெரியாது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.