….
….
….
“தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…”
(இசையமைப்பு- இளையராஜா…)
கீழேயுள்ள காணொளியில் –
இந்தப் பாடலில் வரும்
குரல் இனிமையா அல்லது குழல் இனிமையா…?
கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்….
…..
…..
இவரைப்பொறுத்த வரை இரண்டுமே இனிமை
என்று சொல்ல வைக்கிறார் –
ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு இளம்கலைஞர்…!
குரல், குழல் – இரண்டுமே அருமையாக
கைவரப்பெற்ற அந்த இளம்பெண்ணுக்கு
நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்….
.
——————————————————————————————————–
கா.மை சார்… நான் ஒரு க்ரிடிக்.
நல்லா பாடும் திறமை இருக்கு. சரியாகவும். (குரலிசை மற்றும் குழலிசை). ஆனால் குரலை நல்லா மெயிண்டெயின் செய்து இனிமை கொண்டுவரணும். இது குழலிசைக்கும் பொருந்தும் (இரண்டிலும் பிசிர் தட்டுகிறது). குழந்தை வளர வளர இந்தக் குறை சரியாயிடும் என்று நினைக்கிறேன். கடுமையான உழைப்பு தேவைப்படும் துறை இது. எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு மிக மிக நல்ல குரல், அருமையான திறமை. என் அம்மா மட்டுமல்ல, கேட்டவர்கள் நிறைய பேரும் அசந்து, இந்தத் துறைல பிரகாசிக்கட்டும், விஜய் தொலைக்காட்சி அனந்து போல உள்ளவர்களைப் போய்ப் பார்க்கட்டும், சூப்பர் சிங்கரில் கலந்துகொள்ளலாம் என்று சொன்னார்கள், ஆனால் அந்தப் பெண், அதற்கான உழைப்பைத் தரத் தயாராக இல்லை, எனக்கு அது டைம் பாஸ்தான் என்பதில் தெளிவாக இருந்தது. இந்தக் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.