பாரதியார் பிறந்து, வளர்ந்த, எட்டையபுரம் வீடு –

….
….

….

மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது வாழ்க்கையின்
பிந்தைய பகுதியில், சென்னையில் வாழ்ந்த திருவல்லிக்கேணி
வீடு அரசுடைமை ஆக்கப்பட்டு, இப்போது அவரது நினவில்லமாக
பாதுகாக்கப் படுகிறது…. பாரதியார் நினைவாக சில
பொருட்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

வருடந்தோரும் பாரதியார் பிறந்த நாள் மற்றும் அவர்
சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இங்கே சிறப்பாக
கொண்டாடப்படுகின்றன. இங்கே நான் சில தடவைகள்
சென்று வந்திருக்கிறேன்.

பாரதி, பிறந்த இடம், எட்டயபுரத்தில் உள்ள ஒரு புராதன வீடு
அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தமிழக அரசால்
பராமரிக்கப்படுகிறது….
1882 -லிருந்து, 1908 வரை (சில இடைப்பட்ட காலங்களைத் தவிர)
பாரதி வாழ்ந்த இடம் இது…

இந்த வீட்டை நேரில் சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பு இதுவரை
எனக்கு கிடைக்கவில்லை; தற்செயலாக கிடைத்த ஒரு காணொளி
அந்த என் விருப்பத்தை நிறைவு செய்கிறது.

அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி,
கீழே பதிகிறேன்….

…..

…..

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பாரதியார் பிறந்து, வளர்ந்த, எட்டையபுரம் வீடு –

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I am proud to say that I was born in Mahakavi’s house in Triplicane (T.P.Koil Street, Triplicane)
  and lived there for 12 years. The great double international (Cricket & Hockey) player Mr.M.J.
  Gopalan also lived.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   R.Gopalakrishnan,

   நீங்கள் எந்த வயதில் அங்கே வசித்தீர்கள்…?
   எந்த வருடங்களில்…?

   அப்போது அந்த வீட்டிற்கு பாரதி கடைசியாக
   வாழ்ந்த வீடு என்பது குறித்த பெருமை, புகழ் –
   எதாவது இருந்ததா…?
   பாரதியின் பெருமையை அப்போது
   அங்கிருந்தவர்கள், நீங்கள் –
   உணர்ந்திருந்தீர்களா…?
   தமிழில் முடியவில்லையென்றால்,
   ஆங்கிலத்திலேயே நீங்கள் எழுதலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   .

   • புதியவன் சொல்கிறார்:

    பாரதிக்கு ராஜாஜி எந்த உதவியையும் செய்யவில்லை என்று படித்தேன். (அந்தச் சமயத்தில்தான் புதுச்சேரிக்கு குடிபெயர்ந்தது) யுக புருஷர்கள் என்பவர்கள் காட்டாற்று வெள்ளம் போல. அவங்களோட நாம் போக முடியாது, அஞ்சி ஒதுங்கத்தான் முடியும். பாரதி எப்படி பாடினார், அவருக்கு எந்த மாதிரி உணர்ச்சி இருந்தது என்று அவருடன் ஒரு சில நாட்கள் இருந்த நாமக்கல் கவிஞர் அவரது தன் வரலாற்றில் எழுதியுள்ளார். பாரதி எழுதிய வரிகளிலேயே பலவற்றை ப்ரிண்ட் வடிவத்தில் பார்க்கவில்லை, பல வரிகளை முழுங்கிவிட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். பகத்சிங்கைப் போற்றுகிறவர்கள், அவர் காலத்தில் அவரை ஆதரித்தது இல்லை.

    இங்கு முன்னமேயே எழுதியிருக்கிறேன். வஉசி வாரிசுகளுக்கு அரசு எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியாகச் செய்யவில்லை. எவனெவனோ துரதிருஷ்டத்தில் இறக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் அரசு 10 லட்சம், 20 லட்சம் என்று அள்ளி வழங்குகிறது. ஏன், தன் தவறால் மகனை இழந்தவருக்கே அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி பொதுமக்களிடம் நல்ல பெயரோ இல்லை செய்திகளில் நெகடிவ் ஆக அடிபடாமலோ இருக்க முயற்சிக்கிறது. நாளை நல்லக்கண்ணுவுக்கு (ஒரு உதாரணம்தான்) சிலை வைத்தால் என்ன வைக்காவிட்டால் என்ன. மக்கள் நலனுக்குத்தானே தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் எதில் சென்றாலும் பயணச்சீட்டு வாங்கவேண்டியதில்லை என்று அறிவித்தால் அரசுக்கு என்ன இழப்பு நேர்ந்துவிடக்கூடும்? (இன்றைக்கு இப்படிப் பேசுகிறவர், அன்றைக்கு என் வீட்டில் வந்து இட்லி சாப்பிட்டார், நான் இவருக்கு ஒரு டீ வாங்கிக்கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லிக்காட்டுபவர்தான் போய்ச் சேர்ந்தாச்சே) இறந்தபிறகு 21 குண்டுகள் முழங்குவதால் யாருக்கு லாபம்?

 2. புதியவன் சொல்கிறார்:

  நினைவில்லம் நாம போய்ப் பார்க்கும்போது மனதுக்கு கொஞ்சம் உணர்ச்சியா இருக்கும். இது யாருடைய நினைவில்லத்துக்கும் பொருந்தும்.

  ஆனால், அவங்களுக்கோ இல்லை அவர்களது ரத்த சம்பந்தமான உறவினர்களுக்கோ இதனால் எந்த பயனும் இல்லை. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அரசு உதவி செய்யாமல், செத்த பிறகு கெளரவப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது? அரசு, வ.உ.சி, காமராஜர், கக்கன், ஜீவா, பாரதியார், பல உண்மை சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்ற பலப் பல பெரியவர்களுக்கு மனது சமாதானமாகும்படியாக எதுவுமே செய்யலை. பாரதி நூற்றாண்டில் (?) அரசு, பாரதி வாழ்ந்தபோது ஒரு உதவியும் செய்திராத அவரது உறவினருக்கு பணமுடிப்பு கொடுத்தது. ப்ச்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான்.
   எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.
   மனிதன் செத்த பிறகு கூட அவன் மீது
   கொண்டிருக்கும் அரசியல் கண்ணோட்டம்
   தொடர்கிறது.

   பாரதிக்கு திமுக அரசு உரிய மரியாதையை,
   கௌரவத்தை கொடுத்ததே இல்லை.
   பாரதியின் தாசனுக்கு கிடைத்த கௌரவம்
   கூட, அவரது ஆசானுக்கு கிட்டவில்லை.

   .
   -வாழ்த்துகளுட்ன்,
   காவிரிமைந்தன்

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Srr,
  I was born in Sept 1946. Till 1958 lived there if my memory is correct. People in that street used to
  say Mahakavi lived in this house & was trampled by an elephant and died. In those days there
  was an elephant belonging to Shri Parthasarathi Temple chained. Whenever I go near to that
  elephant my mother & grand mother prevented me to go near the elephant by telling the incident
  of Mahakavi. Some used say that Mahavi gave some plantain fruit inserted by pins. The elephant
  got angry and remember Mahakavi very well.They also say elephant has exttraordinary memory
  and one day when Mahakavi went near the elephant it trampled & killed him.I don’t it is true or not.
  That is all I know. I have not seen Mahakavi also..

  ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.