…..
…..
…..
ஃப்ராடு நித்தியானந்தாவின் தற்போதைய இருப்பிடம்
பற்றிய சில விவரங்களை தருகிறார்…
ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி – திரு.ரகோத்தமன் …
மத்திய அரசுக்கு இந்த விவரங்கள் தெரியாதா…?
தெரியாமலென்ன…
இதுவும் தெரிந்திருக்கும்…
இதற்கு மேலும் பலவும் தெரிந்திருக்கும்…
பின் அவனைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்காதது ஏன்…?
இது என்ன முட்டாள்தனமான கேள்வி…?
பூமியிலேயே ஒருவன் “கைலாசத்தை”
உருவாக்கிக் கொண்டிருக்கும்போது….
அதைச் சிதைக்க்கும் முயற்சியில் ஈடுபடலாமா…?
அவன் –
மெண்டலாக இருந்தாலென்ன… ?
கிரிமினலாக இருந்தாலென்ன….?
…..
……
.
—————————————————————————————————————————–
//அவன் – மெண்டலாக இருந்தாலென்ன… ? கிரிமினலாக இருந்தாலென்ன….?//
மத்திய அரசுக்கு இருக்கும் பெரிய ப்ரையாரிட்டிகளிலேயே அது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் எடுக்கலை. லலித் மோடி, மால்யா, உள்ளூர் 2ஜி கொள்ளையர்கள், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து திருடியவர்கள், காமன்வெல்த் ஸ்போர்ட்ஸ், தொலைக்காட்சிக்கு 200 கோடி லஞ்சம் என்று லிஸ்ட் போட்டால் முடியாது. இவை எவற்றிலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நடவடிக்கைகளும் இந்த 6 வருடங்களில் பாஜக அரசு எடுக்கவில்லை. ஒருவேளை இதில் நேரத்தைச் செலுத்தினால் கோர்ட்டில் வழக்கு பலப் பல வருடங்களாக நடந்துகொண்டே இருக்கும், முடிவே தெரியாது என்பதனால் இருக்கலாம், இல்லை அரசியல் லாபங்களுக்காகவும் இருக்கலாம். இந்த மாதிரி பொருளாதாரக் குற்றங்களுக்கு, உடனே திகாரில் போட்டுவிட்டு, கடைசி சட்ட நடவடிக்கைவரை போராடி வெளியே வருவது உன் பொறுப்பு என்று விட்டுவிடுவதுபோல சட்டம் மாறினால்தான் சரிப்படுமோ?
நித்தியானந்தா சொல்வதுபோல, தனி நாடு என்பது நடக்கவே நடக்க முடியாத ஒன்று. அப்படிப்பார்த்தால், சீனாவே, தங்கள் இடத்தில் பல்வேறு குட்டித் தீவுகளைத் தனி நாடுகளாக்கி ஐநாவில் தன் பலத்தைப் பெருக்கிக்கொள்ளலாமே. அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் சரி என்பது என் அபிப்ராயம்.
Yes urban naxals are far more dangerous
புதியவன்,
//அவரைக் கண்டுகொள்ளாமல்
விடுவதுதான் சரி என்பது
என் அபிப்ராயம். //
ஆக, ஏற்கெனவே கற்பழித்தவர்களை
எல்லாம், கொலை செய்தவர்களை
எல்லாம், கொள்ளை அடித்தவர்களை
எல்லாம் –
கண்டுபிடித்து, தண்டிக்கும் வரை –
இப்போது குற்றம் செய்து
கொண்டிருப்பவர்களையெல்லாம்
“கண்டுகொள்ளாமல் விட்டு விட
வேண்டும்…””
Wonderful…!!!
வாழ்க நின் கொற்றம்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார்.. பலமரம் கண்ட தச்சர் ஒரு மரமும் வெட்ட மாட்டார் என்பது பழமொழி. இருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு, எத்தனை பேர்களை உள்ளே அனுப்பி, பிறகு ஜாமீனில் வெளியே அனுப்பி கேஸ் ஒண்ணுமில்லாததாக ஆகிறது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில், பத்து கொலை கேஸ்கள் வரும்போது, அன்றைக்கு 30 ரூபாய், பசிக்காக ஜேப்படி செய்தவனின் குற்றம் பெரிய அளவில் தெரியாததுபோல… என்ற வகையில் நான் எழுதினேன்.
நித்தியானந்தாவிற்கு, ஏதோ ஒரு குணப்படுத்தும் திறமை/சக்தி இருக்கிறது. அதனால் நன்மை பெற்றவர், அவர் தப்பியோடியபோது கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்.
//கொலை செய்தது// – தா.கிருட்டினன், ஆலடி அருணா, இன்னும் பலர், தாங்களே அருவாளால் தங்களைக் கொலை செய்துகொண்டதாகத்தான் நான் நினைக்கிறேன். ஏன்… சசிதரூரின் மனைவியும்தான். அதான் ஒரு குற்றவாளியும் பிடிபடலையே. அதனால, ‘தண்டனை கிடைக்கும்’ என்றெல்லாம் நீங்கள் நினைக்கவேண்டாம்.
//கற்பழித்தவர்களை எல்லாம்// – சார்… இப்படீல்லாம் யாரையும் சட்னு குற்றம் சுமத்த முடியாது (உடனே நான் நித்தியானந்தா ஆள் என்று சொல்லிடாதீங்க. இதெல்லாம் கல்ட். இதுல மாட்டிக்கிட்டவங்க, blindஆ அவங்களை நம்பறவங்க. அவங்கள்லாம் சத்குரு, சுவாமி… என்றெல்லாம்தான் சொல்லுவாங்க, பேரைக்கூடச் சொல்லமாட்டாங்க. எவ்வளவுக்கெவ்வளவு இந்த மாதிரி பிஸினெஸ் ஆட்களிடம் நாம் தூரத் தள்ளி இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது நமக்கு நல்லது. அந்தக் கதையை விட்டுடுவோம்). இதெல்லாம் ‘ஆதாயம் வரும்வரை எப்படீன்னாலும் நடந்துகொள், இல்லைனா குற்றம் சுமத்து’ என்ற கேடகரிலதான் வரும் என்று நான் நினைக்கிறேன். ஏதோ..வில்லன் மாதிரி துரத்தித் துரத்தி எட்டிப்பிடித்து… என்பதுபோலச் சொல்றீங்களே. நான் இதை இவருக்குச் சொல்லவில்லை. பொதுவாக இந்த வகையான குற்றச்சாட்டுகளுக்குத்தான் சொல்கிறேன்.