….
….
….
செய்தி –
பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-க்கு
உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற
அறிவிப்பு வரவேற்கத்தக்கது என
திமுகஎம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்….
—————————————————
ஏற்கெனவே, தற்போது அமலில் உள்ள சட்டப்படி –
பெண்களுக்கு திருமணம் செய்துகொள்ள குறைந்தபட்ச
வயது 18 என்றுநிர்ணயிக்கப்பட்டிருக்கிறது… (சட்டப்படியான
உயர்ந்த பட்ச வயது எதுவும் கிடையாது…) 18 வயதிற்கு மேல் –
எப்போது வேண்டுமானாலும் அவர்கள் திருமணம் செய்து
கொள்ளலாம்.
இந்த குறைந்தபட்ச வயதை சட்டப்படி 21-ஆக
உயர்த்தப்பட திமுக பாராளுமன்ற
உறுப்பினர் திருமதி கனிமொழி ஆதரவு தெரிவித்திருக்கிறார்….
குறைந்த பட்ச வயதை 14 -லிருந்து படிப்படியாக 18 வரை
கொண்டு வந்தது நிச்சயமாக முற்போக்கானது.
பெண்கள் நலனுக்கானது.
அதே போல், திருமணங்கள் கட்டாயமாக பதிவுசெய்யப்பட
வேண்டுமென்கிற சட்டம் வந்தது முற்போக்கானது.
பெண்கள் நலனுக்கானது.
ஆனால், 18-ஐ 21-ஆக உயர்த்துவது முற்போக்கானது
என்கிற முடிவிற்கு அவர் எப்படி வந்தார்…? அடுத்து 25 என்று
தீர்மானித்தால், அதையும் ஆதரிப்பாரா…?
பெண்களின் திருமணம் என்பது, அவர்களது மனஓட்டத்தோடு,
அவர்களைப் பெற்றவர்களின் எண்ணங்களையும்
பொறுத்தது. வயதான பெற்றோர்கள், தாங்கள் வலுவுடன்
இருக்கும்போதே, தங்கள் மகள்களின் திருமணத்தை
நடத்தி விடவே விரும்புவார்கள்…
தங்களது முதிய வயதில், உரிய பாதுகாப்பு இன்றி தங்கள்
பெண்களை விட்டுச்செல்ல அவர்கள் மனம் எப்படி சம்மதிக்கும்…?
பெரிய நகரங்களை விடுங்கள்…
சிற்றூர்களிலும், கிராமங்களிலும் –
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டோடு இருக்கும்
பெண்களை வைத்துக்கொண்டு பெற்றோர்கள் படும்
வேதனையும், கவலையும் கனிமொழிக்கு தெரியுமா…?
18 வயதே கடினம் என்கிறபோது 21 அவர்களுக்கு
எத்தனை பெரிய சுமையை ஏற்றி விடும்…?
18 வயது முடிந்து, ஆனால், 21 வயது ஆவதற்கு முன்னதாகவே
திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகக்கூடிய
வாய்ப்பும், விருப்பமும் உள்ள பெண்களுக்கு
இது ஒரு பெரும் தடையாக இருக்காதா…?
அவர்களது இல்வாழ்வை தள்ளிப்போட இவருக்கு
என்ன உரிமை…?
தகுந்த கல்வியறிவும்,
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்,
மணவாழ்க்கைக்கு தகுதியும் பெற்ற
-பெண்களின் விருப்பத்திற்கும்,
-அவர்களைப் பெற்றவர்களின் விருப்பத்திற்கும்
தடைபோடுவதாக இந்த சட்டம் அமையாதா…?
தங்களுக்கு விருப்பமான கணவனை தேர்ந்தெடுக்கும்
உரிமை பெண்களுக்கு நிச்சயம் உண்டு. அதை மட்டும் தான்
நாம் உறுதி செய்ய வேண்டும்…. அதே சமயம்,
உரிய வயதில் அவர்கள் திருமணம் செய்துகொண்டு,
இல்வாழ்வில் ஈடுபட வேண்டும் என்கிற
ஆவலும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு இருப்பதை
தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் ….?
18 வயதில் ஓட்டு போட தகுதி இருக்கிறது என்றால்,
18 வயதில் “மேஜர்” என்று தீர்மானிக்கப்பட
தகுதி இருக்கிறது என்றால்,
18 வயதில் சொத்துரிமை உண்டு என்றால் –
திருமணத்திற்கு மட்டும் ஏன்
குறைந்த பட்ச வயதை 21 என்று உயர்த்த வேண்டும்…. ?
திருமணத்தை தள்ளிப்போட விரும்பும் பெண்கள்
அதை எத்தனை வயது வரை வேண்டுமானாலும்
தள்ளிப்போடலாம்…அதற்கு தடையேதுமில்ல. ஆனால்,
குறைந்த பட்ச வயது என்றால், தற்போதைய 18 தான்
பொருத்தமாக இருக்கும்.
பெரும்பாலான பெற்றோர்களும்,
ஏன் – பெண்களே கூட 21 வயதுவரை திருமணம்
செய்து கொள்ளக்கூடாது என்கிற இந்த சட்டத்தடையை
விரும்ப மாட்டார்கள். 20 வயது பெண்கள் திருமணம்
செய்து கொள்ள ஆசைப்பட்டால் அதை சட்டம் ஏன்
தடுக்க வேண்டும்…?
திருமதி கனிமொழி, இந்த மாதிரி விஷயங்களில்
சம்பந்தப்பட்டவர்களின் கருத்தை அறிந்துகொள்ள முயற்சி
செய்ய வேண்டும். தான் நினைப்பது தான் முற்போக்கு
என்று முடிவுசெய்வது அறிவுடமையல்ல…
.
—————————————————————————————————
சார்,
எதுக்கும் ஆதரவாளர்கள் பட்டியலையும் கொஞ்சம்
பார்த்து விட்டு உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள் !
1)-இன்னமும் கல்யாண வயசுக்கு வராத
முன்னாள் நடிகை திரிஷா அவர்கள்
2) – கல்யாணம் பண்ணிக்கொண்டால் தான்
உறவா என்று கேட்ட குஷ்பு அக்கா
பட்டியல் தொடரும் —–
இவர்களெல்லாம் தான் சட்டத்திற்கும், சமூகத்திற்கும்
அப்பாற்பட்டவர்கள் ஆயிற்றே; இவர்கள் ஏன்
அநாவசியமாக வயது வரம்பைப்பற்றி கவலைப்பட
வேண்டும் ?
சார்… +2 முடித்துவிட்டால், சட்டப்படி மணவாழ்க்கைல ஈடுபடலாம். ஆனால் பெண்கள் ஒரு டிகிரியாவது படிப்பதுதான் அவங்களுக்கான மெச்சூரிட்டியையும் பாதுகாப்பையும் தரும். ஓடிப்போய் திருமணம், பதிவுத் திருமணம் என்று பெண் குழந்தைகள் கஷ்டப்படுவது, இந்த மாதிரி வயது வரம்பை உயர்த்த ஒரு காரணமாக இருக்கலாம். இதை கனிமொழி ஆதரித்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. கொங்கு, வட தமிழகம் போன்றவற்றில் அறியாத வயதில் ‘காதல் திருமணம்’ என்பது பெற்றோருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதனால்தான் பாமக ராமதாஸ் அவர்களும் இதனை எப்போதுமே ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
ஆனால், 21வயது திருமண வரம்பு என்று சொல்வது, நீங்கள் சொல்லியிருக்கிறபடி,
18 வயதில் ஓட்டு போட தகுதி இருக்கிறது என்றால்,
18 வயதில் “மேஜர்” என்று தீர்மானிக்கப்பட
தகுதி இருக்கிறது என்றால்,
18 வயதில் சொத்துரிமை உண்டு என்றால் – contradictory யாகத்தான் இருக்கு. சொத்துரிமை, மேஜர் என்பதற்கும் 21 என்று வயது வரம்பு நிர்ணயம் செய்வது சரியாக இருக்கும்.
புதியவன்,
// ஆனால் பெண்கள் ஒரு டிகிரியாவது
படிப்பதுதான் அவங்களுக்கான
மெச்சூரிட்டியையும் பாதுகாப்பையும் தரும். //
யார் இல்லை என்றது…?
அதற்கு வசதியுள்ளவர்கள் படிக்கலாம்…
ஆனால் அதற்கு வக்கில்லாதவர்களுக்கு…?
சிற்றூர்களில், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு…?
அங்கெல்லாம் – பள்ளிப்படிப்பை முடித்து விட்டு
வீட்டில் சும்மா இருக்கும் பெண்களைப்பற்றி –
பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலைகளை
நீங்கள் அறியாதவரா…?
அத்தகைய பெண்களுக்கு திருமண வாழ்க்கை
தான் மிகப்பெரிய பாதுகாப்பு.
// கொங்கு, வட தமிழகம் போன்றவற்றில்
அறியாத வயதில் ‘காதல் திருமணம்’ என்பது
பெற்றோருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.//
இந்தப் பிரச்சினைகள் ஏற்படாமல்
இருக்கத்தான் உரிய வயதில் திருமணம்
என்று நான் சொல்கிறேன்.
உங்களுக்கு கிராமத்தவர்களின் பிரச்சினைக்கான
அடிப்படை புரியவில்லை. சுற்றிலும்
கொத்திக்கொண்டு போக காத்திருக்கும் கழுகுகள்…
18 வயது வரையிலுமே பெண்ணை
காக்க முடியாத பெற்றோர்களை
இன்னமும் 3 ஆண்டுக்காலம் பரிதவிக்கச்
சொல்கிறீர்களா…?
ஒரு மனிதர் – தன் பெண்ணுக்கு 19 வயது
ஆகும்போது, ரிடையர் ஆகிறார்… அப்போது
கிடைக்கும் பணத்தை வைத்து தன் கடமையை
முடித்துவிட நினைக்கிறார். அவரை
இன்னும் 3 ஆண்டுகள் காத்திருங்கள்
என்று சொல்வீர்களா…?
நோய்வாய்ப்பட்டு, இறுதி நாட்களில்
நிச்சயமற்ற சூழ்நிலையில் வாழும் ஒருவரின்
பெண்ணுக்கு 19 வயது ஆகிறது. அவர் –
தான் கண்களை மூடும் முன்னர் தன்
பெண்ணின் திருமணத்தை முடித்து, பாதுகாப்பாக
ஒரு கணவனின் கரங்களில் ஒப்படைத்துச்செல்ல
நினைத்தால் – அவர் எண்ணத்தில்
மண்ணைப் போட நீங்கள் யார்…?
அதில் உங்களுக்கென்ன உரிமை …?
இன்னுமொன்று சொல்வேன் –
இதெல்லாம் தனி மனிதர் பிரச்சினைகள்.
இதில் அரசு தலையிடுவதே தவறு
என்பது என் கருத்து.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்