….
….
….
64-வது நாயன்மார் என்று புகழப்பட்டவர்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்…
மிகவும் எளிமையான முறையில் ஆன்மிக கருத்துகளை
குழந்தைகளுக்குக் கூட புரியும்படி சொல்வதில்
அவருக்கு ஈடு இணையே இல்லை.
27 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்ட
வாரியார் சுவாமிகளின் காணொளி கிடைப்பது
மிக மிக அபூர்வம்…
அப்படி அபூர்வமாக கிடைத்த காணொளி ஒன்றை
இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…. வெண்கலக் குரலும்,
குழந்தைச் சிரிப்பும், இடையிடையே குழந்தைகளை
கவர நடிப்பும்….அவருக்கே உரித்தானவை…
வாரியார் சுவாமிகளுடனான ஒரு ஆனந்த அனுபவம்
எனக்கு 7-8 வயதிலேயே கிடைத்து விட்டது…
அது குறித்து ஏற்கெனவே எழுதியது
இதே தளத்தில் வேறு எங்கோ இருக்கிறது. என்னால்
தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை; கிடைக்கும்போது
அவசியம் மறுபதிவு செய்கிறேன்.
…..
…..
.
———————————————————————————————————-