சிவகாமியின் “சித்தப்பா” – “அங்கோடலொக்கா” ….!!!

….
….


….

இலங்கையில் – போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை
என்று பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு, தேடப்பட்டு வரும்
ஒரு குற்றவாளி “அங்கோட லொக்கா”….

இவன் கள்ளத்தனமாக இந்தியா/தமிழ்நாடு வந்து கிட்டத்தட்ட
இரண்டு வருடங்களாக இங்கேயே போலிப் பெயரில் தங்கி,
ஆதார் உட்பட பல ஆவணங்களையும் உருவாக்கி –
மதுரை, ஈரோடு, கோவை ஆகிய நகர்களில் வெட்ட
வெளிச்சமாக பவனி வந்திருக்கிறான்…
சென்ற மாதம் சந்தேகப்படும் வகையில் இறந்திருக்கிறான்.

இவனைப்பற்றிய சகல செய்திகளையும் இப்போது
தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வருகிறது.
இவனைப்பற்றிய செய்திகளை அறியாத வாசக நண்பர்களின்
வசதிக்காக கீழே ஒரு காணொளியை பதிந்திருக்கிறேன்…

…..

……

ஒருவேளை, இந்த மனிதனின் சாவில் இலங்கை
புலனாய்வுத்துறையின் உண்மையான பங்கு என்ன என்பது
குறித்த விவரங்கள் தெரிய வந்தால் இந்த கதைக்கு இன்னும்
சுவாரஸ்யமான திருப்பங்கள் உண்டாகக்கூடும்.

இவனைப்பற்றிய செய்திகளை இங்கே போட்டதற்கான
முக்கிய காரணம் – ஒரு மிகப்பெரிய ஆதங்கம் தான்….

நமக்கு பக்கத்திலிருக்கும் ஒரு சுண்டைக்காய் நாடு இலங்கை.
அங்கேயிருந்து ஒரு மிகப்பெரிய கடத்தல்காரன், போதை
மருந்து விற்பனையாளன், கொலைகாரன் – இங்கே வந்து
2 வருடங்கள் தங்கி இருந்திருக்கிறான்…. அவனைப்பற்றிய
விவரங்கள் நமக்கு தெரிந்திரா விட்டாலும், இலங்கை
புலனாய்வு நிறுவனங்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும்…?
வசதியாக அவன் கதையை இங்கேயே முடிக்க அவர்களுக்கு
எத்தனை நேரம் பிடிக்கும்….? அங்கோடலொக்காவின்
முடிவிற்கு அவர்கள் கூட காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது
அல்லவா…?

ஆனால், நம் நாட்டில் – மும்பையில் –
பல கொலைகளுக்கும், குண்டுவெடிப்புக்கும், அப்பாவிப்
பொதுமக்களின் மரணங்களுக்கும் காரணமாக இருந்து விட்டு,
தப்பியோடி, பாகிஸ்தானில் வசதியாக சொத்து சுகங்களுடன்,
போலி பாஸ்போர்ட்டில், வெளிச்சத்தில் வாழும்
தாவூத் இப்ராஹிம் என்கிற அயோக்கியனின்,
கொலைகாரனின், தீவிரவாதியின் – கதையை
முடிவுக்கு கொண்டு வர நமது புலனாய்வு நிறுவனங்களுக்கு
எத்தனை நேரம் ஆகும்…? அது ஏன் இத்தனை
ஆண்டுகளாகியும் நிகழவில்லை….?
அந்த நன்னாளும் வருமா…?

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சிவகாமியின் “சித்தப்பா” – “அங்கோடலொக்கா” ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  நம்ம புலனாய்வு நிறுவனங்கள் (தமிழகத்தில்) சரியில்லையா? இல்லை வி.பு களுக்கு தடைகள் இருக்கும்போதே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்ட மதுரை சிவகாமி போன்றவர்கள், தடை இல்லாவிட்டால், தமிழகத்துக்கு எத்தகைய கேட்டினை உண்டாக்குவார்கள் என்று திடுக்கிடுவதா? போதைப் பொருள் வியாபாரத்தில் நடந்த கொலையா இல்லை இலங்கை ஏற்பாட்டில் நடந்ததா? கேள்விகள் அதிகம். பதில்கள் காணோம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   புதியவன்,

   இந்த இடுகையின் மையக்கருத்து இது தான் –

   ————————————————-

   // இவனைப்பற்றிய செய்திகளை இங்கே போட்டதற்கான
   முக்கிய காரணம் – ஒரு மிகப்பெரிய ஆதங்கம் தான்….

   நம் நாட்டில் – மும்பையில் –
   பல கொலைகளுக்கும், குண்டுவெடிப்புக்கும், அப்பாவிப்
   பொதுமக்களின் மரணங்களுக்கும் காரணமாக இருந்து விட்டு,
   தப்பியோடி, பாகிஸ்தானில் வசதியாக சொத்து சுகங்களுடன்,
   போலி பாஸ்போர்ட்டில், வெளிச்சத்தில் வாழும்
   தாவூத் இப்ராஹிம் என்கிற அயோக்கியனின்,
   கொலைகாரனின், தீவிரவாதியின் – கதையை
   முடிவுக்கு கொண்டு வர நமது புலனாய்வு நிறுவனங்களுக்கு
   எத்தனை நேரம் ஆகும்…? அது ஏன் இத்தனை
   ஆண்டுகளாகியும் நிகழவில்லை….?
   அந்த நன்னாளும் வருமா…? //

   ——————————————————-

   இதைப்பற்றி உங்களுக்கு அபிப்பிராயம்
   இல்லாமலா இருக்கும்…? இருந்தாலும்,
   மையக்கருத்தை விட்டு விட்டு,
   வேண்டுமென்றே வேறு எங்கோ
   போய் விட்டீர்கள்….

   காரணம் இல்லாமலா செய்திருப்பீர்கள்…?
   மத்திய அரசை குறை சொல்லக்கூடிய விஷயத்தை
   மடை மாற்றி விட்டிருக்கிறீர்கள் – புரிகிறது.

   நீங்கள் ஒழுங்காக மையக்கருத்தின் மீது உங்களது
   அபிப்பிராயத்தைச் சொல்லி இருந்தால் –
   நண்பர் Jksmraja- வுக்கு ( கீழே ) இப்படி
   ஒரு பின்னூட்டம் போட வேண்டிய அவசியம்
   ஏற்பட்டிருக்குமா…?
   .

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    I think India has not executed this kind of action/killing a wanted guy i outside the country, so far. நமக்கு அந்த மெண்டாலிட்டி or courage to face the world reaction இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்கா தைரியமாக பின் லாடன் விஷயத்தில் செய்திருக்கிறது. (அது மட்டுமல்ல… அவர்களுக்கு சந்தேகம் வந்தால் உலகின் எங்கும் போய் தங்கள் வீரத்தை யார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காட்டுவார்கள், அவர்கள்தான் உலகத்தின் தலைவன் என்பதை பொதுவாக எல்லோரும் கேள்வி கேட்பதில்லை). ரஷ்யா, யூகேயில் செய்துவிட்டு எங்களுக்குத் தெரியாது என்று கழன்றிருக்கிறது. இஸ்ரேல் நிறையச் செய்திருக்கிறது. ஏன் சவுதி அரேபியாகூட இதனைச் செய்திருக்கிறது.

    இதுல நீங்க மத்திய அரசைக் குறை சொல்றீங்கன்னு நான் ஏன் நினைக்கப் போகிறேன்? நீங்க assumptionsல எழுதியிருக்கீங்க.

    நீங்க வெளிப்படையா மத்திய அரசைத்தான் குறை சொல்லியிருக்கீங்கன்னு சொல்றதுனால, நான் சொல்றேன். We dont have the capacity or will power to do this, that too after so so many years.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     // நமக்கு அந்த courage to face the world reaction
     இல்லை என்று நினைக்கிறேன். //

     // We dont have the capacity or will power to do this //

     – நீங்கள் நமது அரசை மிகவும் குறைவாக
     மதிப்பிடுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. Jksmraja சொல்கிறார்:

  தாவூத் இப்ராஹிம் என்கிற அயோக்கியனின்,
  கொலைகாரனின், தீவிரவாதியின் – கதையை
  முடிவுக்கு கொண்டு வர நமது புலனாய்வு நிறுவனங்களுக்கு
  எத்தனை நேரம் ஆகும்…? அது ஏன் இத்தனை
  ஆண்டுகளாகியும் நிகழவில்லை….?
  அந்த நன்னாளும் வருமா…?

  கண்டிப்பாக வராது.

  காரணம், அவனிடத்தில் நன்கொடை வாங்காத அரசியல் கட்சியே இந்தியாவில் இல்லை. நமது புலன் ஆயவு துரையின் வேலை, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டார்கள், அவர்கள் பார்லிமென்டை தாக்கப்போகிறார்கள் என்று அறிக்கை விடுவது மட்டுமே

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Full of last week media(print) published lot of news about him.But strangely I do not have
  Tany interest abt. him because of his name. But this 6 mts video has exposed all abt him.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s