….
….
இதைப் பார்த்து மகிழ்ந்திட –
தந்தை பெரியார் இல்லாமல் போனாரே…!
சொல்லி மாய்ந்திட அறிஞர் அண்ணா இல்லையே…
கலைஞருக்கு கூட இதை –
காணக் கொடுத்து வைக்கவில்லையே…!!!
ஸ்டாலின் காலத்தில், திமுக எவ்வளவு முன்னேறி விட்டது…!!!
“ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே –
தேர்தலிலே கண் வையடா தாண்டவக்கோனே…”
“ஓட்டு போடற பயல்கள் எல்லாம் தாண்டவக்கோனே..
இப்படி போஸ்டர் அடிக்க வெச்சுட்டானே தாண்டவக்கோனே..”
(inspiration – கலைஞரின் பராசக்தி பாடல்…!!! )
….
….
.
———————————————————————————————————————————
கிருஷ்ண ஜெயந்தி . விநாயக சதுர்த்தி போன்ற ஹிந்து பண்டிகை
திமுகவினருக்கு விடுமுறை தினம். பொதுவாக அவர்கள் இந்து
பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை . அவர்களுக்கு ரம்ஜான்,
பக்ரீத் , கிறிஸ்துமஸ் தான் வாழ்த்து பெற தகுதி உடையவை .
இப்போது கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறுகிறார்கள் என்றால்
தேர்தல் அடுத்த வருடம் வருகிறது என்று அர்த்தம். எலி திடீரென்று
எதற்கு எட்டு முழ வேட்டி கட்டுகிறது ? ஹிந்து பத்திரிகை திமுகவை
புகழ்ந்தால் ஹிந்து ஏடு சொல்லிவிட்டது என்பார்கள். திமுகவை
விமர்சித்தால் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு தன் புத்தியை காட்டி விட்டது என்பார்கள்.