….
….
….
ஃபில்டர் காப்பி தயாரிப்பது எப்படி என்று விலாவாரியாக
சொல்லித்தரும் ஒரு காணொளி கீழே….
ஒரு காப்பிக்கு இத்தனை பில்டப் தேவையா…?
என்று கேட்கிறீர்களா…?
ஜஸ்ட் – ஒரு சுவாரஸ்யம் தான்…!!!
நான் எனது 20-வது வயதில்,
ஜபல்பூரில் வேலையில் சேர்ந்து
தனியாக வசிக்க ஆரம்பிக்கும்போது –
பாண்டிச்சேரியிலிருந்து வாங்கிப்போன
முதல் ஐட்டமே பித்தளை ஃபில்டர் தான்…
இன்றும் என் வீட்டில் அது உபயோகத்தில் இருக்கிறது.
சின்ன ஃபில்டர்… ஒருவருக்கு மட்டும் தான் போதும்.
மனைவி ஊருக்குச் சென்றால் –
நான் தனியாக இருந்தால், இப்போது கூட
அதைத்தான் பயன்படுத்துகிறேன்.
வீடியோவில் பட் சொல்வது எல்லாம் சரி தான் –
ஒன்றே ஒன்றைத்தவிர….
கடைசியாகச் சொல்கிறாரே –
ஆடை போடுவதைப்பற்றி ….அது மட்டும் சரி இல்லை.
காப்பியில் ஆடை உடலுக்கோ, சுவைக்கோ
எந்தவிதத்திலும் உதவாது.
வெறும் மேக்கப்’பிற்கு தான் உதவும்…!!!
நான் காப்பிக்கு ஆடை மேக்கப் போட மாட்டேன்.
ஆடை இல்லாத காப்பி தான் சுகம்.
ஸ்ரீரங்கத்தில், தெற்கு கோபுர வாசலில்,
முரளி கடையில் ஃபில்டர் காப்பி சாப்பிட்டவர்கள்
இந்த கூட்டத்தில் யாராவது உண்டா..?
ஃபில்டர் காப்பி வீடியோ கீழே –
….
….
.
——————————————————————————————————————————-
முரளி கடை usp அந்த முதல் தர டிகாக்ஷன்.
வாங்க ஸ்ரீதர்…
அப்ப நீங்களும் நம்ம ஊர் தானா…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்