….
….
இலங்கையில் சர்வ வல்லமையுடன் கூடிய
உச்ச அதிகாரத்திற்கு வந்திருக்கும்
இரு சகோதரர்கள் –
….
….
இலங்கைத் தமிழர்களுக்கும்,
இந்தியாவுக்கும் இனியாவது அவர்கள் நல்லவர்களாக
இருப்பார்கள் என்று நம்பி வாழ்த்துவோம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும் –
ஒரு அறிவுப்பசியுடன் –
புராணங்களில் சொல்லப்படும்
ராட்சதர்கள் என்போர் யார் என்று
தேடியபோது –
ராட்சசர்கள் என்போர் தீய குணங்களும் –
உயராற்றலும் கொண்டவர்கள்.
ராட்சசர்கள் என்பவர்கள் கர்வமும் ஆணவமும்
உடையவர்களாக இருப்பவர்கள்.,
ஆற்றலும் வன்முறை குணாதிசயமும்,
போர்க்குணமும், கோபமும் கொண்ட மனநிலையை
ராட்சசர்கள் குறிக்கின்றனர்.
இரணியன், இரணியாட்சன், இராவணன், சூரபத்மன்,
மகிசாசூரன் வாதபி போன்றோரை ராட்சதர்களுக்கு
உதாரணமாகக் குறிப்பிடலாம்….
– என்றெல்லாம் விளக்கங்கள் கிடைத்தன….
அவ்வளவு தானா….?
உச்ச அதிகாரத்தைப் பெற்ற கொலைகாரர்கள்
என்றும் அவர்களை வர்ணிக்கலாமா…?
.
———————————————————————————————————————–
நீங்க சொல்றது தப்பாச்சே…. கருணாநிதி, திக கும்பல் ராவணனை, திராவிடன் என்றே புகழ்ந்து பேசியிருக்காங்களே. திருமா, கனிமொழி போன்ற பெரியவர்கள் இவங்கள் சபையில் புகழ்ந்து பேசி பரிசில்கள்லாம் வாங்கியிருக்காங்களே.
இலங்கையில் இந்த ராவண ,இந்திரஜித் சகோதரர்கள்
வருவது ராம ராஜ்ஜியமான இந்தியாவுக்கு தலைவலிதான்.
இவர்கள் சீன அரசாங்கத்துடன் நட்புடையவர்களாக இருப்பது
மேலும் அசௌகர்யம். இவர்களை பார்த்து வந்து பரிசில்கள்
வாங்கி வந்த கழக கண்மணிகள் கனிமொழி. பாலு , திருமா .போன்ற தமிழர் நலவிரும்பிகள்.
லக்ஷக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில்
கோடிக்கணக்கில் திமுக பிரமுகர் ஒருவர் முதலீடு செய்து இருக்கிறாராம்.
கா மை சார்
கீதையில் அசுரரை பற்றி 16 ம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது .
மனிதரிலும் அசுர குணம் படைத்தவர் உண்டு என வருகிறது .
நண்ப மெய்ப்பொருள்,
உண்மை தானே… 🙂
நாம் தான் நேரிலேயே
பார்த்துக் கொண்டிருக்கிறோமே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்