….
….
….
” துரைமுருகன் வந்தால், சிவப்புக் கம்பளம் போட்டு
வரவேற்பதற்கு எங்கள் இயக்கம் தயார்…”
-என்று சொல்லி மீடியாவின் மூலம் திமுக-வின் மூத்த தலைவர்
துரைமுருகன் அவர்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கிறார் அதிமுக
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்.
அது சரி… அப்படி துரைமுருகன் அவர்கள் வருவதாக இருந்தால்,
அவருக்கு அதிமுக-வால் –
என்ன கொடுக்க முடியும்…?
எதைக் கொடுக்க முடியும்…?
திமுக-வில் இப்போதே அவர் தலைவருக்கு அடுத்த இடத்தில்
தான் இருக்கிறார்….
அதிமுகவில் தலைவர் பதவி கொடுக்க முடியுமா…?
அல்லது இன்னொரு ஒருங்கிணைப்பாளர் பதவியை
உருவாக்கி அவருக்கு கொடுப்பார்களா…?
அல்லது அமைச்சர் பதவி என்றால் –
திமுக-விலேயே தொடர்ந்தால், துரைமுருகனுக்கு அவர்
விரும்பும் எந்த துறைக்கு வேண்டுமானால் அமைச்சர் பதவி
கிடைக்குமே….?
பின் இந்த அழைப்புக்கு என்ன அர்த்தம்…?
அது அழைப்பு விடுத்தவருக்கும் தெரியும்,
அழைக்கப்பட்டவருக்கும் தெரியும்….!!!
திமுக-வில் – துரைமுருகன் விரும்புவது –
ஸ்டாலினுக்கு இணையான பதவியைத் தான் …
கட்சியின் மிக மூத்த, சீனியர் தலைவரான அவர்,
கலைஞர் – அன்பழகனுக்கு கொடுத்த இடம் மாதிரி,
ஸ்டாலின் அவருக்கு இணையான செயலாளர்
பதவியை தனக்குத் தரவேண்டுமென்று விரும்புகிறார்.
ஸ்டாலினோ, தன்னாலியன்ற வரை அதை தள்ளிப்போடுகிறார்…
இனியும் தள்ளிப்போட முடியாதபடி ஸ்டாலினுக்கு நெருக்கடி
கொடுப்பதே துரைமுருகனின் திட்டம்… அதற்கு துணை
போகிறது ஜெயகுமார் அவர்களின் திறந்த அழைப்பு.
ஜெயகுமார் அவர்களின் அழைப்பின் பின்னணி
என்ன என்பது, 60 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில்
பழம் தின்று கொட்டை போட்ட துரைமுருகன் அவர்களுக்கும்
தெரியும்….
ஜெயகுமார் அவர்களின் அழைப்பில் இரண்டு நோக்கங்கள் –
1) ஸ்டாலினுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை,
ஒரு அழுத்தத்தை உண்டுபண்ணி, துரைமுருகனை திமுக
செயலாளராக்கி, தனது அதிகாரத்தை துரைமுருகனுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலினை
உள்ளாக்குவது….
2) அரசியலின் ஆழங்கள் புரியாத, திமுக-வின் அடிமட்டத்
தொண்டர்களிடையே கொஞ்சம் குழப்பத்தை உண்டுபண்ணுவது…
இந்த திறந்த அழைப்பின் விளைவுகளை எண்ணி ஜெயக்குமார்,
துரைமுருகன் ஆகிய இருவருமே உள்ளுக்குள் சிரித்துக்
கொண்டிருப்பார்கள்…!!! ஸ்டாலின் பொருமிக் கொண்டிருப்பார்….
இது ஒரு பக்கம் இருக்கட்டும்….
இது துரைமுருகன் பற்றிய பர்சனல் பக்கம்…
துரைமுருகன் சம்பாதித்தைப்பற்றி எல்லாம் விட்டு விடுவோம்.
தனிப்பட, துரைமுருகன் –
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
ஜாலியானவர். அனைவரிடத்தும் கலகலவென்று பேசக்கூடியவர்…
எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், கலைஞர் இருக்கும்போதே,
தந்தி டிவி ஹரிஹரனுக்கு, துரைமுருகன் கொடுத்த ஒரு பேட்டி
நினைவிற்கு வந்தது…( ராஜபாட்டை…!!!)…
இப்போது மாறிவிட்ட சூழ்நிலையில் கூட, அது சுவாரஸ்யமாக
இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கீழே முழு பேட்டியும் பதிந்திருக்கிறேன்.. 41 நிமிடங்கள் ஓடும்.
நேரம் இல்லாதவர்கள், பகுதி, பகுதியாக பார்க்கலாம்.
ஆனால், அவசியம் பார்த்து ரசிக்க வேண்டியதொரு பேட்டி…
……………..
……………..
.
—————————————————————————————————–