….
….
….
கொரோனா அப்பளம் விளம்பரம் செய்த
அமைச்சருக்கே கொரோனா….!!!
கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் ஒன்று
தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தி, மத்திய அமைச்சர்
மெக்வால் அவர்கள், “அந்த அப்பளம் கொரோனாவிற்கு எதிராக
எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும்.”
எனப்பேசி – அது ஒரு விவாதமாக உருவானது …
………
………
பாவம், அவருக்கே இப்போது கொரோனா பாதிப்பு
ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
மற்றவர்களுக்கு ஆலோசனை சொன்ன மாதிரி –
ஆண்டிபாடி-களை உருவாக்கும் அந்த அப்பளத்தை அவர்
சாப்பிட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை…!!!
————
பின் குறிப்பு – மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர்,
ஒரு அப்பள கம்பெனிக்கு இப்படி விளம்பரம் கொடுப்பது,
அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு
பொருத்தமானதா என்பது தனி விஷயம்.
தற்போதைக்கு அமைச்சர் சீக்கிரம் குணமடைய வேண்டும்
என்று பிரார்த்தனை மட்டும் செய்துகொள்வோம்.
.
———————————————————————————————————————
//மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர், ஒரு அப்பள கம்பெனிக்கு இப்படி விளம்பரம் கொடுப்பது// – எனக்கு ரொம்பவே ஆச்சர்யம்… எந்த அளவீடு ஒருத்தரை மந்திரியாக்குவதற்கு வேணும் என்று. நாடே வைரஸ் விஷயத்தால் பல்வேறு காரணங்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அப்பளத்திற்கு விளம்பரம்..உருப்பட்ட மாதிரிதான். இன்னொரு அமைச்சர் ரோட்டில் பைப் திறந்தார், பொதுக்கழிப்பிடங்களின் அவசியத்தை மத்திய அரசு பிரச்சாரம் செய்யும்போது…
அது இருக்கட்டும்… நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதின தமிழ்வாணனே அறுபது ஆண்டுகளைக் கடக்கவில்லை.