ஸ்டாலினும் – கலைஞரும் …..

….
….

….

கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு நாளையொட்டி,
திரு.மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கலைஞரின் சாதனைகள் அனைத்தையும் வரிசையாகப்
பட்டியலிட்டு –

” தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை –
தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த
இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில்,
ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது
உழைத்தார் கலைஞர்… என்று கலைஞரை நினைவுபடுத்தி
இருக்கிறார்.

ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு –
சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு –
என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற
இந்தக் கடுமையான காலத்தில் – உரிமைகளை மீட்கவும் –
நலன்களைக் காக்கவும் –
முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார்
கலைஞர்” என்று கூறுகிறார் ஸ்டாலின்.

கலைஞரின் சாதனைகளாக ஸ்டாலின் பட்டியல் இடும்
பலவும் உண்மையாகவே சிறந்த சாதனைகள் தான்.

கலைஞரின் நினைவு நாளில் அவரது சாதனைகளை மட்டும்
நினைவு கொள்வோம்.

அவற்றிற்காக, கலைஞர் என்றும் போற்றுதலுக்குரியவர்
தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இவையெல்லாவற்றையும் கூறி முடித்து விட்டு,
அடுத்த தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைத்து
ஆட்சியில் அமர வைக்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தும்போது –

“முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாகத்
தேவைப்படுகிறார் கலைஞர்” –

-என்று சொல்லி முடிக்கிறார்.

உண்மை தான். கலைஞரின் தேவை இப்போதும்
இருப்பது உண்மை தான்.

ஆனால், ஸ்டாலினை ஜெயிக்க வைத்தால் –
ஸ்டாலின் தான் வருவார்…

அங்கே கலைஞர் எப்படி வருவார்…?

ஸ்டாலின் – கலைஞர் ஆகிவிட முடியுமா என்ன….?

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஸ்டாலினும் – கலைஞரும் …..

 1. புதியவன் சொல்கிறார்:

  கருணாநிதியை ஸ்டாலினோடு ஒப்பிட்டு கருணாநிதி சாதனைகள் செய்தார்னு சொல்றீங்க, வேற எதையும் எழுதவேண்டாம்னும் சொல்லிட்டீங்க. தன்மானம் இழந்த விஷயத்தையெல்லாம் எழுதக்கூடாது என்றும் சொல்லிட்டீங்க. சரி..இருக்கட்டும்.

  ஒரு தேர்தலிலாவது, கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று யாராவது பேசியிருக்காங்களா? கூட்டணித் தலைவர்களும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்றாங்க. திமுக ஆரம்பிச்ச முதல் எலெக்‌ஷன் வெற்றியைச் சேர்த்துக்கொண்டால்கூட, அதிமுக 7 தடவைகள் ஆட்சி அமைச்சிருக்கு (திமுக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து). திமுக இன்னும் ஆறாவது தடவை ஆட்சி அமைப்போம் என்று பத்து வருடங்களாகச் சொல்லிக்கிட்டிருக்காங்க. தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்தது அதிமுக மட்டும்தான்.

  நீங்க கருணாநிதி காலத்தையும் (ஆரம்பகால), 2006க்குப் பிந்தைய காலத்தையும் ஒப்பிட முடியாது. 2006க்குப் பிறகு கட்சியில் இருப்பவர்கள் யாரும் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் கிடையாது (கொள்கையே என்னன்னு தெரியாது). காசு சம்பாதிக்க முதலீடு போடறாங்க. இன்னும் என்ன என்ன கூத்துக்களை ஸ்டாலின் பார்க்க வேண்டி இருக்குமோ.

 2. bandhu சொல்கிறார்:

  கண்டிப்பாக கருணாநிதியின் தேவை இருக்கிறது, ஸ்டாலினுக்கு. சொந்தமாக சரக்கும் இல்லை. சொல்லிக்கொள்ள சாதனைகளும் இல்லை. ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து ‘உயிரை கொடுத்து போராடினேன்’ என்று சாதிக்கும் ‘நாவன்மை’-யும் இல்லை.

  என்ன தான் செய்வார்?

 3. புவியரசு சொல்கிறார்:

  // ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து
  ‘உயிரை கொடுத்து போராடினேன்’ என்று
  சாதிக்கும் ‘நாவன்மை’-யும் இல்லை.//

  கொன்னுட்டீங்க சார்.
  கண்ணதாசன் சொல்லல்லைன்னா
  யாருக்குமே தெரியாம போயிருக்கும்
  அந்த “மாபெரும்” உண்மை.

 4. Raghuraman சொல்கிறார்:

  Sir.,.
  You can add this also.

  Stalin does not know to tell others how past leaders came in his dream about every issue and praised him for his acts.

  • புதியவன் சொல்கிறார்:

   அந்த இடத்திற்கு இன்னும் ஸ்டாலின் வரவில்லை, (அவர் உண்மையைச் சொன்னாலுமே, இவருக்கு வேற வேலை இல்லை, எப்பப்பாத்தாலும் அதாவது, அதாவது என்று புளுகிக்கிட்டே இருக்கறதுதான் வேலை என்று பலரும் நினைக்கிறாங்க) வருவதும் சந்தேகம். இப்போ திமுக காரங்களுக்கு அவங்க இருப்புக்கான ஒரு அர்த்தம் ஸ்டாலின் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது. ஸ்டாலின் இதில் தவறு செய்யாமல் வெற்றி பெற முடிந்தால், இன்னும் வலுவாக வாய்ப்பு இருக்கு. இல்லைனா, ராகுல்காந்தி கதிதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.