– விஜய் – வாத்தி – கம்மிங்

….
….

….

முதலில் நானாக இதை கவனிக்கவில்லை;
ஒரு வாசக நண்பர் எனக்கு சுட்டிக்காட்டியதன்
பேரில் இந்த விளம்பர ட்ரெயிலரை பார்த்தேன்….
….

….

தாங்க முடியவில்லை;
தமிழ்நாட்டிற்கும், தமிழ்க்குடிமக்களுக்கும் தொண்டு செய்யவே
மகனை பெற்றுப் போட்டிருப்பதாக அடிக்கடி பேட்டிகளில்
பீற்றிக் கொள்கிறாரே – திருவாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்…
அவர் பார்க்காமலா இருப்பார் இந்தப் பாடலை -காட்சியை ….?

எப்போது குதித்தால், தோதாக இருக்கும் என்று தமிழக
அரசியலில் தூள் கிளப்ப முகூர்த்த நேரம்
பார்த்துக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்குத்தான்
முக்கியமாக இந்த கேள்விகள்….

நானும் என்னால் முடிந்தவரை தேடி,
ஆராய்ந்து பார்த்து விட்டேன்…

படத்தின் தயாரிப்பாளர் –
நடிகர் விஜய்’யின் நெருங்கிய உறவினர் –
திருவாளர் சேவியர் பிரிட்டோ (Xavier Britto)

இசையமைப்பு – திருவாளர் அனிருத் …

– என்பதற்கு மேல், பாடலாசிரியர் யார் என்பதை
கண்டுபிடிக்கவே முடியவில்லை;

பாடல்களை எழுதியவர் யார் என்கிற விவரத்தை மட்டும்
இதுவரை வெளியிடாதது ஏன்…?

திருவாளர் அனிருத் மற்றும் (இளைய)தளபதி விஜய் –
ஆகியோரின் – கூட்டுத் தயாரிப்பு தான் இந்தப்பாடல் –
என்கிற முடிவிற்கே வரவேண்டியதாக இருக்கிறது.

பாடலாசிரியரின் பெயரை வெளியிடாததன் காரணம் …
அடக்கமா அல்லது பயமா…?

– இவர்களெல்லாம் சமூக/அரசியல் சேவை செய்ய
முன்வந்தால் … தமிழ்நாடும், தமிழக மக்களும்
என்ன ஆவார்கள்….?

எனக்கு – விஜய்க்கு தமிழ் கற்றுக்கொடுத்த
அந்த ஆரம்பக்கால ஆசிரியரை அவசரமாகப்
பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

இந்தப்பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனியே
யாராவது அர்த்தம் கண்டுபிடித்து சொல்லி விட்டால் –

வழக்கமாகச் சொல்வது போல் என் அசையா சொத்துக்கள்
அத்தனையையும் தருகிறேன் – என்று சொல்லவில்லை.

நான் இனிமேல் இடுகை எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்…
என்று சொல்கிறேன்…. (அவ்வளவு நம்பிக்கை…)

கீழே – தமிழில் இதுவரை வெளிவந்ததிலேயே
மிகச்சிறந்த பாடல்….நண்பர்களின் பார்வைக்கு –

—————————————————–

“வாத்தி கம்மிங்” – பாடல் வரிகள்…
————–

ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹக் ஹான் ஹக் ஹான்
ஏய் என்னடா இது
சப்ப பீட்டு கொழுத்துங்கடா

ஆஅஹ் மஜாபா மஜாபா
இதான் இதான் இதான் இதான்
ஏய் இடிடா வாங்கடா

ஏ வாத்தி கம்மிங் ஒத்து
ஆஹ் ஆஹ்
ஏய் ஒத்து
தக்க துன்னா
டோம்பா டோம்பா

ஹோய்

அண்ணா வந்தா
ஆட்டோ பாம்ப்பு
டும்மு

பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஐய்
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு ஏ

பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு
வாத்தி கம்மிங் ஒத்து

ஊர்ரகர கட்டே

ஏய் டருக்குல ட்ரிபிள்ளு வுட்டா
சல்பில சில்பி தொட்டா
தொகுறுல தகர வுட்டா
பகுறு அகுருதான்

சில்கிள சில்கி வுட்டா
கில்புள சல்ட்டு தொட்டா
பிஜிலில பில்பி வுட்டா
ஜெட்டக் ஜருக்குத்தான்

ஐயோ

பெரட்டி சொல்லே
பெரட்டி சொல்லே

டுமுக்கு டுமா டுமுக்கு டுமா

அண்ணா பெரட்டிவுடு செதறவுடு

ஒத்தே

ஐயோ

அண்ணா வந்தா
ஆட்டோ பாம்ப்பு
டும்மு

அண்ணா பெரட்டிவுடு செதறவுடு

வாத்தி கம்மிங்ஒத்தே

பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளாம்மி
பிளு பிளு பிளு பிளு

ஆய் சீ

.
(அவ்வளவு தான்… !!! )
.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to – விஜய் – வாத்தி – கம்மிங்

 1. புதியவன் சொல்கிறார்:

  தமிழர்களுக்கு இந்தப் பாட்டு பிடித்துப்போய், பயங்கர ஹிட் ஆகிவிட்டால் நாம் என்ன செய்வது? விஜயின் ரசிகர்கள் தரத்துக்கு ஏற்றபடிதான் பாடல் போடுவாங்க.

  இந்தப் பாடலை இங்க பதிப்பித்த நேரத்தில் நல்ல இடுகை ஒன்று போட்டிருக்கலாம்.

  இன்னொண்ணு கா.மை. சார்… எந்த நடிகரும், நடிப்பு பிஸினெஸில் காசு சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும்போது அரசியலுக்கு வர மாட்டாங்க. புலி வருது புலி வருது கதைதான் விஜய் செய்வது. எப்போ அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையோ அப்போ அரசியல் சேவை செய்ய வந்துடுவார். பெரும்பாலும் அரசியல் பூச்சாண்டி காட்டுவது, தன்னை ஆளும் கட்சியோ எதிர்கட்சியோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்குத்தான்.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பாட்டை எழுதியது கானா பாலச்சந்தர் .
  அப்புறம் புதியவன் கவலைப்பட்டார் –
  பாட்டு பேமஸ் ஆயிருமோ ?
  யூ ட்யூப் சொல்வது 67,780,192 views •Feb 14, 2020

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப மெய்ப்பொருள்.

   நாம் தான் மாற வேண்டும்
   போலிருக்கிறது.

   நம் ரசனை, ஊர் ரசனையோடு
   பொருந்தவில்லையே…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. kalakarthik சொல்கிறார்:

  அண்ணா ,நம் தலைவிதி..தரம்,என்று ஒன்று இல்லவே இல்லை.சினிமாக்கள் கற்காலத்திற்கு கூட்டி செல்கின்றன

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக் அம்மா,

   சகோதரி எப்படி இருக்கிறீர்கள்…?
   நலமா ?
   நீண்ட நாட்களாயிற்று
   இங்கே உங்களைப்பார்த்து ..

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.